கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஜெய தீபன் என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா விற்ற 3 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீ சார் அங்கு கஞ்சா எனும் போதை பொருளை விற்பனை செய்து கொண்டி ருந்த சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் பகுதியை சேர்ந்த மனோகரன் மகன் சதீஷ் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் விற்பனைக்காக வைத்திருந்த 500 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து வருகின்றனர்.

இதேபோல் பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த அதே பகுதியை சேர்ந்த முனீஸ்வரன் மகன் ஜெய தீபன் (28) என்பவரை பவானிசாகர் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர் வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com