search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "who stole the lorry"

    • கோணவாய்க்கால் பகுதியில் கிட்டுசாமி தனது போர்வெல் லாரியை நிறுத்தி வைத்திருந்தார்.
    • லாரி திருடப்பட்ட 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா ஜம்பை அடுத்த சின்னியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிட்டுசாமி (52). போர்வெல் லாரியை சொந்தமாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு போர் போடும் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு காங்கேயம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் கிட்டுசாமியிடம் அறிமுக மாகி தனக்கு வேலை வேண்டுமென அவரிடம் கேட்டு வேலையில் சேர்ந்து ள்ளார்.

    ரமேஷ் தன்னிடம் செல்போன் இல்லை என்றும், காங்கேயம் பகு தியை சேர்ந்தவர் மட்டும் என்றும் கூறி வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த 10 நாட்களாக வேலையும் பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் சம்பவத் தன்று கோணவாய்க்கால் என்ற பகுதியில் கிட்டுசாமி தனது போர்வெல் லாரியை நிறுத்தி வைத்திருந்தார். அங்கு வந்த ரமேஷ் போர்வெல் லாரியை நைசாக திருடி சென்று ள்ளார்.

    லாரி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிட்டுசாமி இதுகுறித்து விசாரித்த போது ரமேஷ் லாரியை திருடியது தெரிய வந்தது. திருட்டு போன லாரியின் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும்.

    இது குறித்து கிட்டுசாமி சித்தோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தினர்.

    அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது ரமேஷ் லாரியை திருடி சென்றது தெரிய வந்தது.

    இதையடுத்து தனிப்படை அமைத்து லாரியை தேடி வந்தனர். லாரியில் உள்ள ஜி.பி.ஆர்.எஸ். கருவியை பார்த்தபோது அது கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

    உடனடியாக தணிக்கை குழு போலீசார் கரூர் சென்று லாரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து லாரியை மீட்டனர்.

    போலீஸ் வரும்போது லாரி தவிர வேறு யாரும் அங்கு இல்லை. ரமேஷ் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் லாரியை மீட்டு சித்தோடு போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு வந்தனர். லாரி திருடப்பட்ட 12 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

    ×