போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது

போதை பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கருங்கல்பாளையம், அந்தியூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ஈரோடு-பவானி மெயின் ரோடு, அந்தியூர் சுற்றுவட்டார பகுதியில் தடை செய்ய ப்பட்ட போதை பொரு ட்களை விற்பனை செய்து கொண்டிருந்த சேலம் மாவ ட்டம் எடப்பாடி மூலப்பா றைக்காடு பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் (வயது 30), அந்தியூர் நகலூர் ரங்கசாமி மகன் முத்து (53) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த ஹான்ஸ், பான் மசாலா உள்ளிட்ட போதை பொரு ள்களை போலீசார் பறிமு தல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப்போல் ஈரோடு வீரபத்திர தெரு, குட்டப்பா ளையம் ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஈரோடு வீரப்பன்சத்திரத்தை ேசர்ந்த சின்னக்கண்ணு மகன் கனகராஜ் (52), சென்னிமலை குட்டப்பா ளையம் துரைசாமி மனைவி துளசி மணி (63) ஆகியோர் மீது ஈரோடு வடக்கு, சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com