வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

பொன்னுச்சாமி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் மேடு அடுத்த ஸ்ரீரங்கம் பாளையம் பகுதி யைச் சேர்ந்தவர் சித்தன் மகன் பொன்னு ச்சாமி. இவரது மனைவி சாந்தி. பொன்னுச்சாமி நீண்ட நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்து வமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வயிற்று வலியால் பொன்னுச்சாமி அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மன வேதனை அடைந்த அவர் வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டில் தூக்கு போட்டு கொண்டார்.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஒரு தனியார் ஆம்பு லன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பொன்னுச்சாமி ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து அவரது மனைவி சாந்தி அர ச்சலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com