அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது

விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாள வாடி சுற்றுவட்டார பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என தாளவாடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது தாளவாடி சுற்றுவட்டாரப் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்து கொண்டி ருந்த தாளவாடி திகினாரை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மஞ்சையா மகன் மணி என்ற ஐயப்பன் (வயது 30), தாளவாடி பனகள்ளி பகுதியை சேர்ந்த மாதேவா மகன் பசுவராஜ் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 25 மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

இதே போல் பெருந்துறை பகுதியில் அனுமதியின்றி மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் ஜெய்சங்கர் (39) என்பவர் மீது பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவர் விற்பனை க்காக வைத்திருந்த 7 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com