search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vinayagar-Magaliyamman Temple"

    • கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.
    • கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அடுத்து விண்ணப்பள்ளி ஊராட்சி பனங்காட்டு பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில்கள்.

    இக்கோவிலில் கடந்த ஐப்பசி மாதம் 24-ந் தேதி முகூர்த்தக்கால் நடப்ப ட்டது. அதைத்தொடர்ந்து கடந்த கார்த்திகை 5-ந் தேதி யாக சாலையில் கணபதி வேல்வியுடன் தொடங்கி காமதேனு வழிபாடு பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து பவானி ஆற்றில் இருந்து தீர்த்த குடங்கள் மற்றும் முளைப்பா றியினை ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

    மேலும் 6-ந் தேதி கோபுரத்தில் கலசம் அமைத்தல் மற்றும் இறைவன் திருமேனிக்கு மருந்து சாத்துதல், தீர்த்த குடங்கள் யாகசாலைக்கு எடுத்து சென்று முதல் கால வேள்வி மங்கல இசையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து நேற்று 2-ம் கால வேள்வியை தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மனுக்கு தெய்வத்திருமேனியில் நிலை பெற செய்து வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்று கோபுர கலசங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து கருவறையில் உள்ள மாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்பு மாகாளியம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், திருமஞ்சனம், திருநீறு உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீப ஆராதனை காட்டப்பட்டது.

    இதைக்கண்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் கூடி இருந்து பொதுமக்களுக்கு கோவில் சார்பில் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    ×