திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்

திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது.இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
திம்பம் மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்
Published on

தாளவாடி:

திம்பம் மலைப்பாதையில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருகிறது. மாலை, இரவு நேரங்களிலும் குளிர்ச்சியான சூழ்நிலை நிலைவு வறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை திம்பம் மலைப்பாதையில் கடுமையான பனிமூட்டம் நிலவியது. ஆசனூரில் இருந்து திம்பம் மலைப்பாதை 20-வது கொண்டை ஊசி வளைவு வரை பனிமூட்டம் இருந்தது.

இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.காலை 10 மணி அளவில் இந்த பனிமூட்டம் விலகியது. பின்னர் வாகனங்கள் சீராக செல்ல தொடங்கின.

திம்பம் பாதை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பணி மூட்டத்தின் அழகை தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com