search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Enforcement Directorate"

    பொருளாதார அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக சஞ்சய் மிஷ்ராவை மத்திய மந்திரிசபையின் பணி நியமன தேர்வுக்குழு இன்று நியமித்துள்ளது. #SanjayMishra #ED #InterimDirector
    புதுடெல்லி:

    நாட்டில் நடைபெறும் கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மற்றும் கருப்புப்பணம், வங்கி ஊழல்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளை பொருளாதார அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த அமைப்பின் இயக்குனராக உள்ள ஐ.பி.எஸ். அதிகாரி கர்னல் சிங்-கின் மூன்றாண்டு பதவிக்காலம் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.

    இந்நிலையில், பொருளாதார அமலாக்கத்துறையின் இடைக்கால இயக்குனராக சஞ்சய் மிஷ்ரா இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தை மத்திய மந்திரிசபையின் பணி நியமன தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

    இந்த பதவிக்கான நிரந்தர இயக்குனர் நியமிக்கப்படும்வரை அடுத்த 3 மாதங்களுக்கு இடைக்கால  இயக்குனராக சஞ்சய் மிஷ்ரா நீடிப்பார் என மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #SanjayMishra #ED #InterimDirector

    ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது. #PNBFraud #NiravModi #ED
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர்கள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக வசித்து வருகின்றனர். இந்த வங்கி மோசடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், அமலாக்கத்துறையும் நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.



    இந்த வழக்கில் நிரவ் மோடியின் சொத்துகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஹாங்காங்கில் நிரவ் மோடிக்கு சொந்தமாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்கள், வைர நகைகள் உள்ளிட்ட சுமார் ரூ.255 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்போது முடக்கி உள்ளது.

    இவற்றை முடக்கி இருப்பதற்கான உரிய உத்தரவு நகலை விரைவில் ஹாங்காங் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பி வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. #PNBFraud #NiravModi
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனுவை டெல்லி பாடியாலா நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

    இந்த தடையை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை டெல்லி பாடியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் மாதம் 8-ம் தேதிக்கு மனுவை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

    சமீபத்தில் கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல தடை கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்து அவரை அமெரிக்கா செல்ல அனுமதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்ல உச்சநீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    புதுடெல்லி:

    முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீதான ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரம் அமெரிக்க செல்ல அனுமதி வேண்டி மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனது வாதத்தை முன்வைத்த அமலாக்கத்துறை, வழக்கு விசாரணைக்கு கார்த்தி சிதம்பரம் முறையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளது. இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல அனுமதிக்க கூடாது என கோரிக்கை விடுத்தது.



    இதனால் அவர் வெளிநாடுகள் செல்ல இனிமேல் அனுமதிக்க கூடாது என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து இருந்தது. மேலும், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கான இடைக்கால தடையையும் ரத்து செய்யவும் வேண்டியிருந்தது.

    இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு, அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்தது. மேலும், செப்டம்பர் 20-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் அமெரிக்கா செல்லவும் அனுமதி வழங்கி  உத்தரவிடப்பட்டுள்ளது. #AircelMaxis #SupremeCourt #KartiChidambaram
    உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்ட கோமதி நீர்ப்பாசன திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக 6 போலி நிறுவனங்களுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. #AkhileshYadav
    லக்னோ:

    உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் அகிலேஷ் யாதவ் முதல்- மந்திரியாக இருந்தபோது கோமதி ஆற்றில் நீர்ப்பாசன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

    இதில் ஊழல் நடந்து இருப்பதாக கடந்த 2017 சட்டசபை தேர்தலின் போது பா.ஜனதா குற்றம் சாட்டியது. பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்த ஊழல் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் பிரசாரம் செய்தது.

    அதன்படி பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், கோமதி ஆற்று நீர்ப்பாசன திட்ட ஊழல் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மாநில போலீசார் நடத்திய விசாரணையில் நீர்ப்பாசன திட்ட ஊழலில் அகிலேஷ் யாதவுக்கும் 6 போலி நிறுவனங்களுக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.


    இதையடுத்து 6 மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐ. விசாரணைக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார். இதில் அனுபவம் இல்லாத நிறுவனங்களும் டெண்டர் எடுத்து திட்டங்களை செயல்படுத்தியதும் இதில் முறைகேடு நடந்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. டெண்டர் எடுத்த தொகைக்கும், மிகப் பெரிய வித்தியாசம் இருப்பதும் தெரியவந்தது.

    போலி கம்பெனிகள் மூலம் ஊழல் நடந்து இருப்பதாகவும் இதில் சட்டவிரோத பணிபரிமாற்றம் நடந்து இருப்பதாகவும் சி.பி.ஐ. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் இதில் நடந்த சட்ட விரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கப்பிரிவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் அடுத்தகட்ட நடவடிகையாக தகுதியற்ற 6 நிறுவனங்களுக்கும் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில் நீர்ப்பாசன திட்ட ஊழல் சமாஜ்வாடி கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.  #AkhileshYadav #Gomtiproject
    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கோரிய அமலாக்கத்துறையின் மனு குறித்து கார்த்திக் சிதம்பரம் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
    புதுடெல்லி:

    ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அப்போது கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து இருந்தது. இந்த தடையை நீக்குமாறு அமலாக்கத்துறை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

    அமலாக்கத்துறையின் மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து கார்த்தி சிதம்பரம் வரும் 18-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளது. #EnforcementDirectorate #KartiChidambaram #AircelMaxisCase
    ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரத்தில் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது மனைவி ராப்ரி தேவி உள்ளிட்ட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. #RailwayTenderScam #LaluPrasad
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத்தீவன ஊழல் வழக்குகளில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சிறையிலடைக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    அதன்பின், அங்கிருந்து சிகிச்சைக்காக ராஞ்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது ஜாமீன் மனு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

    இதற்கிடையே, தனது ஜாமீனை நீட்டிக்கக் கோரி லாலு மனுதாக்கல் செய்தார். அவரது மனுவை நிராகரித்த ராஞ்சி ஐகோர்ட், ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டது.

    இந்நிலையில், ரெயில்வே உணவு டெண்டர் முறைகேடு விவகாரம் தொடர்பாக, லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்பட 13 பேர் மீது அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.

    லாலு பிரசாத் யாதவ் ரெயில்வே மந்திரியாக இருந்தபோது, ரெயில்வே உணவு டெண்டரில் ரூ.44.75 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. #RailwayTenderScam #LaluPrasad
    பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. #PNBFradu #NiravModi
    மும்பை:

    ரூ.13 ஆயிரம் கோடி பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் வைர வியாபாரி நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்தன. இவ்விவகாரத்தில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக, நிரவ் மோடி மற்றும் குடும்பத்தினர் மீது அமலாக்கத்துறை மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

    அதன் அடிப்படையில், நிரவ் மோடிக்கு எதிராக மும்பை கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. இந்நிலையில், நிரவ் மோடியை நாடு கடத்தி வரக்கோரி, மும்பை கோர்ட்டில் அமலாக்கத்துறை நேற்று மனு தாக்கல் செய்தது. நிரவ் மோடி இங்கிலாந்து, பெல்ஜியம் உள்பட எந்த நாட்டில் இருந்தாலும் அவரை நாடு கடத்திக்கொண்டு வருமாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  #PNBFradu #NiravModi #Tamilnews 
    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து கடன் பெற்று மோசடி செய்துள்ளது தொடர்பாக அமலாக்கத்துறை விஜய் மல்லையா மீது இரண்டாவது குற்றப்பத்திரிகை இன்று தாக்கல் செய்துள்ளது. #VijayMallya #MoneyLaundering
    மும்பை :

    பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

    இந்நிலையில், 2005 - 10 காலத்தில், பல தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, விஜய் மல்லையா, 6,027 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது.

    இந்நிலையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மீது அமலாக்கத்துறை இரண்டாவது குற்றப்பத்திரிகையை இன்று தாக்கல் செய்துள்ளது. மேலும், விஜய் மல்லையாவிற்கு செந்தமான 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #VijayMallya #MoneyLaundering 
    நாட்டையே உலுக்கிய சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் கொல்கத்தா அலுவலகத்தில் ஜூன் 20-ம் தேதி ஆஜராக நளினி சிதம்பரத்துக்கு சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
    புதுடெல்லி:

    மேற்கு வங்க மாநிலத்தில் நிறுவப்பட்ட சாரதா நிதி நிறுவனம் மக்களிடம் பல கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்து மீண்டும் அவர்களுக்கு கொடுக்காமல் மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிலும் குறிப்பாக இந்த விவகாரத்தில் அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் ஈடுபட்டிருந்ததால் அம்மாநிலத்தின் ஆட்சியே ஆட்டம் கண்டது.

    இந்த வழக்கு தொடர்பாக சாரதா நிதி நிறுவனத்தின் நிறுவனர் சுதீப்சா சென் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மேலும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், முன்னாள் மத்திய மந்திரியின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரத்தின் பெயர் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தது. சாரதா சிட் பண்டு நிறுவனத்திடம் இருந்து திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மனோரஞ்சனா சிங் என்பவருக்கு அளிக்கப்பட்ட பண விவகாரத்தில் நளினி சிதம்பரத்துக்கு தொடர்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.



    முன்னதாக, ஏப்ரல் 7-ம் தேதி அமலாக்கத்துறையிடம் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்தார். அதைத்தொடர்ந்து மே 7-ம் தேதி நளினி சிதம்பரம் அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜரானார்.

    இதையடுத்து, ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா அலுவலகத்தில் மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு நளினி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்துள்ளது. #EnforcementDirectorate #saradhachitprobe #nalinichidambaram
    பண மோசடி வழக்கு தொடர்பாக இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள விஜய் மல்லையாவுக்கு எதிராக புதிய குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. #VijayMallya #MoneyLaundering
    புதுடெல்லி:

    பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்தாமல் தப்பியோடிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    விஜய் மல்லையா மீது கடந்த ஆண்டு மத்திய அமலாக்கத்துறை முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இதுவரை அவருக்கு சொந்தமான ரூ.9,890 சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது.

    இந்த நிலையில் 2005-2010-ம் ஆண்டுகளுக்கு இடையே வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இந்திய வங்கிகள் கூட்டமைப்புக்கு ரூ.6,027 கோடி இழப்பை ஏற்படுத்தியதாக பாரத ஸ்டேட் வங்கி அமலாக்கத்துறையிடம் புகார் அளித்துள்ளது. இதுபற்றி விசாரணை நடத்திய அமலாக்கத்துறை வாங்கிய கடனை போலியான பல்வேறு கம்பெனிகளில் விஜய் மல்லையாவின் கிங் பிஷர் நிறுவனம் சட்டவிரோதமான முறையில் மாற்றி இருப்பதை கண்டுபிடித்தது.

    இதைத்தொடர்ந்து விஜய் மல்லையா மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கத்துறை மும்பை சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளது.

    அண்மையில் மத்திய அரசு தலைமறைவாக உள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டம் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது.

    மேலும், இந்த புதிய அவசர சட்டத்தின் கீழ், விஜய் மல்லையா மற்றும் அவருடைய நிறுவனங்களுக்கு சொந்தமான ரூ.9 ஆயிரம் கோடிக்கும் அதிகமான சொத்துகளை பறிமுதல் செய்ய கோர்ட்டின் அனுமதியை பெறவும் அமலாக்கத்துறை திட்டமிட்டு உள்ளது.  #VijayMallya #MoneyLaundering
    குட்கா ஊழல் விவகாரத்தில் சி.பி.ஐ.யை தொடர்ந்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் குட்கா புகையிலைப் பொருட்களுக்கு கடந்த 2013-ம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. எனினும் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா தயாரிப்பு ஆலைகள் இயங்க அனுமதிப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் மாதவரத்தில் உள்ள குடோனில் போதைப் பொருட்கள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்திய போது, மூட்டை, மூட்டையாக பான், மாவா போன்ற குட்கா பொருட்கள் சிக்கியது.

    குட்கா தயாரிப்பு நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணையில் இறங்கினார்கள். அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர்.

    அப்போது இவ்விவகாரத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பெயரும் அடிப்பட்டது. இதையடுத்து சென்னை உள்பட அமைச்சருக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.


    சென்னையில் உள்ள அமைச்சர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் டைரி ஒன்று சிக்கியது. அதில் குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை கமிஷனராக இருந்த எஸ்.ஜார்ஜ் உள்பட அதிகாரிகள் பெயரும் இடம் பெற்றிருந்தது.

    குட்கா ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பனார்ஜி தலைமையிலான அமர்வு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது.

    எனினும் சி.பி.ஐ. சார்பில் வழக்குப்பதிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை இயக்குனர் அலுவலகத்துக்கு கடிதம் மூலமும், சென்னையில் உள்ள சி.பி.ஐ. அதிகாரி அலுவலகத்துக்கு நேரில் சென்றும் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினார். அதன்பேரில் சி.பி.ஐ. சார்பில் பெயர் குறிப்பிடாமல் கலால் வரித்துறை, உணவு பாதுகாப்புத்துறை, போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்தநிலையில் குட்கா ஊழல் வழக்கில் சட்டவிரோத பணி பரிவர்த்தனை தொடர்பான புகாரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவிலும் யாருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை.

    குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் தனித்தனியாக விரைவில் விசாரணையை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    ×