search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity"

    • நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    • ரஜகுலத்தோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 5 சதவீத உள்ஒதுகீடு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்க மாநில தலைவர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபை கூட்டத்தொடரில் வண்ணார்குல மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வண்ணார் என்ற சாதி பெயரை ரஜகுலத்ேதார் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 5 சதவீத உள்ஒதுகீடு வழங்க வேண்டும்.

    சலவை துறைகளில் வாடகை மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து இலவசமாக வழங்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • மின்சாரம் தாக்கியதில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார்.
    • அவர்களது குடும்பத்தினரிடம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாட்டம் பரமக்குடி அருகே உள்ள மேலாய்க்குடி கிராமத்தில் கடந்த 7-ம் தேதி இரவு நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா உறியடி நிகழ்ச்சியில் பரமக்குடி சோமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன்கள் கோகுல், ராகுல் (10) கபி லேஷ் (7) ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிய தில் கபிலேஷ் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதில் படுகாயம் அடைந்த கோகுல், ராகுலை மதுரை தனியார் மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். அவர்களை அமைச்சர் ராஜகண்ண ப்பன் சார்பில் அவரது மகன் மருத்துவர் திலீப் ராஜகண்ணப்பன் இறந்த கபிலேஷ் குடும் பத்தினிரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள கோகுல், ராகுலை பார்த்து விட்டு அவர்களது குடும்பத்தினரி டம் மேல் சிகிச்சைக்காக நிதி உதவிகளை வழங்கி னார்.

    இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ச் போர்டில் பிளக்கை சொறுகினார்.
    • சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராபுரம் ஊராட்சி நடுத்தெருவை சேர்ந்தவர் தியாகராஜன்.

    இவரது மனைவி உமாபதி (வயது 45).

    இவர்கள் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த வீட்டில் மின்விசிறி போடுவதற்கு சுவிட்ஜ் அமைக்கப்பட்டது.

    அப்போது புது வீட்டுக்கு வந்த உமாபதி, ஈரக்கையோடு சுவிட்ஸ் போர்டில் பிளக்கை சொறுகினார்.

    இதில் மின்சாரம் தாக்கி உமாபதி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி உமாபதி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கீழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரத்தின் ஆர்.டி.சி சர்க்கிள் பகுதியில், பாப்பையா என்ற போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சாலைப் போக்குவரத்து காவல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த உமா என்கிற மின் ஊழியரை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தியுள்ளார். மேலும், போக்குவரத்து விதியை மீறியதால் மின் ஊழியருக்கு ரூ.135 அபராதம் விதித்துள்ளார்.

    இதனால், மின் ஊழியருக்கும் காவல் ஆய்வாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும், அபராதம் விதித்த ஆத்திரத்தில் நேராக அருகில் இருந்த காவல் உதவி மையத்தின் மின்கம்பத்தில் ஏறிய மின் ஊழியர் உமா மின் இணைப்பை துண்டித்தார். இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின் ஊழியரின் இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மின் வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்தனர்.

    இதைதொடரந்து, போலீசார் மின் ஊழியர் உமாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.
    • அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் வடபாதி முதலியார் தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது50).

    இவர் திருத்துறைப்பூண்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று காலை தனது வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.

    அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தங்கராசு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தங்கராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்கராசு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தங்கராசுவுக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    • ரமேஷ் தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார்.
    • மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    சேலம் மாவட்டம் ஏழுமலைகவுன்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36) டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குருபீடபுரம் கூந்தலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிகொண்டு மீண்டும் கம்பெனிக்கு வந்தார்.

    அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க டோர் சரியாக மூட வில்லை. இதனால் டிப்பர் லாரியின் பின்புற கதவை தூக்கும்போது மேலே சென்ற மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சங்கராபுரம் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
    • சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பரமநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அழகன். இவரது மனைவி பட்டு(வயது68). இவர் சம்பவத்தன்று தனது கன்று குட்டியை மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச்சென்றார். அப்போது, வயல்வெளி பகுதியில் அறுந்து கிடந்த உயர்மின் அழுத்த கம்பியை தெரியாமல் மிதித்தார். இதில் மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டார். இதையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.
    • சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஒன்றியம், புதுப்பாளையம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மோகன் பாபு(வயது24) விவசாயி ஆவார். இந்நிலையில்,நேற்று இரவு இப்பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்பொழுது மின்சார ஒயர் ஒன்று அறுந்து வயல்வெளியில் விழுந்து கிடந்தது. இன்று காலை வழக்கம் போல் புதுப்பாளையம் கிராமம், முருகர் கோவில் அருகே உள்ள விவசாய நிலத்திற்கு மோகன் பாபு சென்றார். அப்பொழுது அங்கு அறுந்து கிடந்த மின்சார ஒயரை எதிர்பார்க்காமல் மிதித்து விட்டார். இதனால் மின்சாரம் தாக்கியதால் கூக்குரல் இட்ட வண்ணம் அலறி துடித்து விழுந்தார். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மின் இணைப்பை துண்டித்து விட்டு அவரை மீட்டனர்.

    ஆனால்,அதற்குள் அவர் இறந்து போனார். தகவல் அறிந்த ஆரணி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பலியான மோகன் பாபு உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,வழக்கு பதிவு செய்து இச்சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியது.
    • இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மாலை கடையின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள,மளவென பரவிய தால் முகப்பின் வட பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

    இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் கும்பகோணம், திருவிடை மருதூர் தீயணைப்பு துறையினர் 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின், தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியதால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்க ப்பட்டது.

    மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன.
    • 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன.

    கடலூர்:

    சிதம்பரம் அடுத்த கூடுவெளிச்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்வகுமார், சின்னதுரை. இவர்களிடம் ஆளக்கொரு பசுமாடு உள்ளது. இதேபோல தெம்மூர் கிராமத்தை சேர்ந்த சரவணனிடம் காளை மாடு உள்ளது. இந்த 3 மாடுகளும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. நீண்ட நேரமாகியும் மாடுகள் திரும்பி வரவில்லை. இதனையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் மாடுகளை தேடினார்கள். அப்போது வயல்வெளி பகுதியில் உயர் மின் அழுத்த கம்பி அறுந்து கிடந்தது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த 3 மாடுகளும் மின் கம்பியை மிதித்து உயிரிழந்தன. இது தொடர்பாக மாட்டின் உரிமையாளர்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். உயர்மின் அழுத்த கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி இறந்த மாடுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தியுள்்ளனர்.

    • பரமசிவம் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார்.
    • மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம் (வயது 60) விவசாயி. இவர் நேற்று மாலை மாடுகளை மேய்பதற்காக வயல்வெளிக்கு சென்றார். அப்போது நிலத்தில் இருந்த மின் கம்பத்தில் தாழ்வான நிலையில் சென்ற மின்சார கம்பி அறுந்த நிலையில் இருந்துள்ளது. இதை கவனிக்காத பரமசிவம் அந்த வழியாக செல்லும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் விவசாய நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பியை சரிசெய்ய வழியுறுத்தி பலமுறை மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் செய்தும் மின்கம்பியை உயர்த்த நடவடிக்கை எடுக்காததால் பரமசிவம் உயிரிழந்துள்ளார். என கூறி பரமசிவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மின்சார வாரியத்தை கண்டித்து விருத்தாசலம் - சேலம் சாலையில்  கண்டபங்குறிச்சி எடைபாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்த னர். இதனையடுத்து போலீ சார் இறந்த பரமசி வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×