search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electric motor"

    • முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நாளையும், நாளை மறுதினமும் ஆகிய 2 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படாது என நகராட்சி ஆணையர் ஏ.சங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மயிலாடுதுறை நகராட்சி குடிநீர் திட்டத்தின்கீழ் முடிகண்டநல்லூர் கொள்ளிடம் தலைமை குடியேற்று நிலையத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது, தலைமை குடிநீரேற்று நிலைய மின்மோட்டார் பம்பு பழுது, நீரேற்று குழாய் கசிவு ஏற்பட்டுள்ளதால் நாளையும் (புதன்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் குடிநீர் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

    எனவே நகராட்சி பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.
    • அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பிச்சன் கோட்டகம் வடபாதி முதலியார் தெருவை சேர்ந்தவர் தங்கராசு (வயது50).

    இவர் திருத்துறைப்பூண்டியில் பழைய இரும்பு கடை நடத்தி வந்தார். நேற்று காலை தனது வீட்டில் மின்மோட்டாரை தங்கராசு இயக்கினார்.

    அப்போது எதிர்பாராவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தங்கராசு மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே தங்கராசு இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து தங்கராசு குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் திருத்துறைப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தங்கராசுவுக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    • வேல்முருகனுக்கு சொந்தமான தோட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ளது
    • சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்து, மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர்.

    களக்காடு:

    நாகர்கோவில், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சொந்தமான தோட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்க்க மின் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது.

    சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்து, மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 500 ஆகும். இதுபற்றி தோட்டக் காவலாளி நாங்குநேரி தம்புபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 42) மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • மின்மோட்டார்களை பயன்படுத்தி குடிநீர் திருடினால் இணைப்பு துண்டிக்கப்படும்.
    • காரைக்குடி நகராட்சி எச்சரித்துள்ளது.

    காரைக்குடி

    காரைக்குடி நகராட்சி 26-வது வார்டு பகுதியில் குடிநீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் முத்துத் துரை, ஆணையாளர் வீரமுத்துக் குமார் ஆகியோர் உத்தரவின்படி தனிப்படை யினர் ஆய்வு செய்தனர்.

    இதில் பல்வேறு இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்பட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து

    10-க்கும் மேற்பட்ட மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறியதாவது:-

    காரைக்குடி நகராட்சியில் உள்ள 36 வார்டுகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய 10 இடங்களில் மேல்நிலை தீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 112 லிட்டர் வீதம் 12.08 எம்எல்டி அதாவது கோடியே 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தினமும் விதியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதால் மற்ற வீடுகளுக்கு தண்ணீர் செல்வது தடைபடுகிறது. மின்மோட்டார் மூலம் குடிநீர் திருடப்படுவது கண்டறியப் பட்டால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தவறு செய்தால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்.

    மேலும் காரைக்குடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிதாக 2 இடங்களில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட உள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக் குமார், உதவி பொறியாளர் கள் பாலசுப்பிரமணியன், சீமா ஆகியோர் உடனி ருந்தனர்.

    • சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
    • கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம், நடப்பு ஆண்டில் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்க ளுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு ஆண்டில் விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாருக்குப் பதில் புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு 150 பேருக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.22.50 லட்சத்திற்கு மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க பின்னேற்பு மானியமாக ரூ.15000 அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.

    இந்த திட்டம் நுண்ணீர் பாசன இணையதளம் வாயி லாக செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்க ளில் உள்ள வேளாண் பெருமக்கள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.

    ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளா கத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந் துள்ள உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தையும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகு ளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-வது தளத்தில் அமைந்துள்ள செயற்பொறி யாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு இடங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
    • ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    மீஞ்சூர் அடுத்த அத்திப் பட்டு முதல் நிலை ஊராட்சியில் உள்ள வீடுகளுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

    இந்நிலையில் ஊராட்சிக்குட்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள வீட்டில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சப்படுவதால் பல்வேறு இடங்களுக்கு குடிநீர் வினியோகிப்பதில் பாதிப்பு ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்தபோது அத்திப்பட்டு புது நகர் பகுதியில் தண்ணீர் உறிஞ்ச பயன்படுத்திய 5 மின்மோட்டார்களை பறிமுதல் செய்தனர்.

    திருட்டுத்தனமாக மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வாலிபர் கைது
    • ரோந்து பணியில் சிக்கினார்

    வேலூர்:

    காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது வீட் டில் இருந்த மின்மோட்டர் மற்றும் பாய்லரை கடந்த மாதம் 24-ந் தேதி மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் இருந்து கண்கா ணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் நேற்று மாலை சில்க்மில்க் பகுதியில் போலீ சார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    அப்போது சந்தேகப்படும் வகையில் சுற்றி திரிந்தவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் காந்திநகர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) என்பதும், மின் மோட்டரை திருடியதும் தெரியவந்தது. இதை யடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • குடிநீரை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும்.
    • பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி இருந்தால் இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு உள்ளதாலும் திருமூர்த்தி மலையில் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்துள்ளதாலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும் வீணாக்காமலும் பயன்படுத்த வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சட்டத்திற்கு புறம்பாக மின்மோட்டார் பொருத்தி இருந்தால் இரண்டு நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும். தவறினால் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிடர்- பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காக பி.வி.சி. குழாய்கள் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com தாட்கோ இணைய தளம் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை
    04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும், தாட்கோ மாவட்ட மேலாளரை 9445029466 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின.
    • ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடி தண்ணீரை பொது மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுப்பம்பட்டு, கல்பாக்கம், வாயலூர், நெய்தவாயல், மெரட்டூர், கணியம்பாக்கம், வேலூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் சிறுவாக்கம் பகுதி சீமாவரம் கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் குடிநீர் போர்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து கிராமங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சீமாவரம் ஆற்றில் மழையின் காரணமாக தண்ணீர் நிரம்பி உள்ளதால் அனைத்து மின்மோட்டார்களும் மழை நீரில் மூழ்கின இதனால் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து கிராமங்களிலும் கடந்த 10 தினங்களாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஓரிரு ஊராட்சிகளில் ஊராட்சி மன்ற தலைவர்கள் டிராக்டர் வாகனங்கள் மூலம் குடிதண்ணீரை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

    பல்வேறு ஊராட்சிகளில் இப்பணிகள் செயல்படுத்த முடியாத நிலையில் தற்காலிகமாக ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட உப்பு தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். சுத்திகரிக்கப்படாத தண்ணீரால் பொது மக்களுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

    மேலும் அப்பகுதி மக்கள் கேன் குடிநீரை அதிக விலை கொடுத்து பயன்படுத்தி வருகின்றனர். இதனை அதிகாரிகள் சரி செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்ட நீர்வள ஆதார, கீழ்பவானி பாசன கோட்டம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காங்கயம் கோட்டம் பொதுப்பணித்துறை கீழ்பவானி பாசன கண்காணிப்பு குழு அதிகாரிகள் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்கு உரிய தண்ணீரை மின் மோட்டார் வைத்து உறிஞ்சுபவர்கள் மற்றும் கால்வாயில் இருந்து டிராக்டர்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுத்து கொண்டு சென்று வேறு பாசனத்திற்கு பயன்படுத்தினாலும் மற்றும் உரிய சம்பா நெல் பயிர் பாசனத்திற்காக திறந்து விடப்படும்தண்ணீரை வேறு விற்பனை உட்பட மற்ற ஏதாவது பயன்பாட்டிற்கு பயன்படுத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள் தகவல்கள் குறித்து பொதுப்பணித்துறை மூலம் திருப்பூர், ஈரோடு மாவட்ட கலெக்டர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே விவசாயிகள் கீழ்பவானி பாசன கால்வாயில் திறந்து விடப்பட்டு உள்ள தண்ணீரை பயன்படுத்தி நஞ்சை சம்பா நெல் சாகுபடி செய்து இந்த ஆண்டு கூடுதல் மகசூல் பெற்று பயன்பெற முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • அவினாசிபழைய பஸ் நிலையம் பின்புறம் தனியார் தோட்டத்திற்கு மண்ணை விற்றதாக புகார் எழுந்துள்ளது.
    • குடம் வைத்துதான் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும்.

    அவனாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் பொ. தனலட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து வார்டு உறுப்பினர்கள் பேசியதாவது:-

    திருமுருகநாதன்(11- வது வார்டு)

    அவினாசிபழைய பஸ் நிலையம் பின்புறம் தனியார் தோட்டத்திற்கு பேரூராட்சிக்கு சொந்தமான மண்ணை விற்றதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் தரவேண்டும் என்றார். இதே கருத்தை சரவணகுமார்( வார்டு 4), தேவி (10), சாந்தி (12), ஸ்ரீதேவி (18) உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

    தலைவர்: மண்கொட்டுவதற்கு இடம் இல்லாததால் அங்கு கொட்டப்பட்டது. தேவைப்படும்போது மண் எடுத்து கொள்ளலாம் என்றார்.

    ரமணி (17 -வது வார்டு):

    பேரூராட்சியில் பல இடங்களில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைககாமல் அவதிக்குள்ளாகின்றனர். மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுபவர்களுக்கு குடிநீர் சப்ளையை துண்டிக்க வேண்டும். 18 வார்டுகளிலும் பெரிய நிறுவனங்கள் உள்பட அனைவரும் டியூப் போட்டு பிடிக்கின்றனர். அத்துடன் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை கழுவுதல் போன்ற செயல்கள் நடைபெறுகிறது. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து குடம் வைத்துதான் தண்ணீர் பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்றார்.

    தேவி (18வது வார்டு): எங்கள் பகுதியில் சாக்கடை சரிவர எடுக்காமல் கழிவுநீர் ரோட்டில் செல்கிறது. இது பற்றி பல முறை சொல்லியும் சாக்கடை கால்வாய்சுத்தம் செய்வதில்லை. சொந்த செலவில் எங்கள் பகுதி யை சாக்கடை சுத்தம் செய்து வருகிறோம். இனியாவது ஜே.சி.பி. இயந்திரத்தின் மூலம் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்து தரவேண்டும் என்றார்.

    கருணாம்பாள் (8 -வது வார்டு): வள்ளுவர் வீதியில்உள்ள வேப்பமரத்தின் மீது அடிக்கடி லாரி மோதி மரம் சாய்ந்துவிடும் நிலையில் உள்ளது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்துஅவினாசி பழைய பஸ் நிலையம் பின்புறம் சட்டத்திற்கு புறம்பாக பேரூராட்சி நிர்வாகத்தினர் மண் பயன்படுத்தப்பட்டது பற்றி கேட்டதற்கு ஒரு வாரத்திற்குள் மண்ணை எடுப்பதாக உறுதிகூறியுள்ளனர். அவ்வாறு நடைபெறவில்லை என்றால் பேரூராட்சி மன்றத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்போவதாக தி.மு.க.,காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர் (பொறுப்பு) தனலட்சுமியிடம் மனு கொடுத்தனர்.

    ×