search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electricity"

    • வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர்.
    • மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் கண்டனம்
    • சமீபத்தில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ.12 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    மின் கட்டண உயர்வு மூலம் ஏழை, நடுத்தர மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் செயலில் புதுவை மின்துறை இறங்கியுள்ளது.

    அதானி சமீபத்தில் நிலக்கரி இறக்குமதியில் செய்த ஊழலால் ரூ.12 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

    அதிக விலை கொடுத்து நிலக்கரியை அதானியிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருந்ததால் புதுவை மின்துறைக்கும் இழப்பு ஏற்பட்டது. இந்த இழப்பை சரிக்கட்ட புதுவை மக்களின் மின் கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கின்றனர்.

    இந்த ஊழல் பண இழப்பை புதுவை மக்களிடம் வசூலிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியாளர்கள் இதை பற்றி கவலைப்படாமல் மதுக்கடைகளை திறப்பதிலேயே குறியாக உள்ளனர்.

    இந்த மின்கட்டண வசூலை உடனே நிறுத்த வேண்டும். மின்கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது மக்களுக்கு இழைக்கும் துரோகம். இதை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர்.
    • தலைமறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    கள்ளக்குறிச்சி,அக்.22-

    கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே ஜா. ஏந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜகுருநாதன் (வயது 61). விவசாயி. இவருக்கு தியாக துருகம் அருகே அசகளத்தூர் கிராம எல்லையில் விவசாய நிலம் உள்ளது. இவர் நேற்று முன்தினம் ஜா.ஏந்தல் பகுதி யைச் சேர்ந்த பெரியசாமி (40), மணிகண்டன் (41) அசகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (55), ராஜேந்திரன் (46) ஆகியோ ரை தனது விவசாய நிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் சென்றார். வேலை முடிந்ததும் அனை வரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் ராஜகுருநாதன் மின் மோட்டாரில் இருந்து ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துச் சென்று அருகில் உள்ள மயூரா ஆற்றில் மின்சாரம் செலுத்தி 5 பேரும் மீன்பிடித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி யதில் பெரியசாமி கீழே கல்லின் மீது விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்து போனதாக கூறப்படு கிறது. 

    இதனைத் தொடர்ந்து ராஜகுருநாதன், மணி கண்டன், காமராஜ், ராஜேந்திரன் ஆகிய 4 பேரும் பெரியசாமியின் உடலை அருகில் உள்ள முட்புதரில் மறைய வைத்துவிட்டு சென்றனர். மீண்டும் நள்ளிரவில் ராஜகுருநாதன் மற்றும் மணிகண்டன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் மயூரா ஆற்றிற்கு சென்று அங்கு முட்புதரில் மறைய வைத்திருந்த பெரியசாமி யின் உடலை மோட்டார் சைக்கிளின் நடுவே உட்கார வைத்துக்கொண்டு சென்றனர். ராஜகுருநாதன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். மணிகண்டன் பின்னால் அமர்ந்து கொண்டு உடலை பிடித்துக் கொண்டு அசகளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் உடலை போட்டுவிட்டு சென்று விட்டனர். இறந்து கிடந்த பெரிய சாமி யின் உடலைப் பார்த்த அப்பகுதி மக்கள் வரஞ்சரம் போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்று பெரிய சாமியின் உடலை கைப்பற்றி கள்ளக்கு றிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசா ரணை செய்ததில் ராஜகுரு நாதன் நிலத்திற்கு விவசாய வேலைக்கு ஆட்களை அழைத்து சென்றதும். வேலை முடிந்ததும் ஆற்றில் மின்சாரம் செலுத்தி மீன் பிடிக்கும் போது இறந்து போனதும் தெரியவந்தது. இதுகுறித்து பெரியசாமி மனைவி சுமதி கொடுத்த புகாரின் பேரில் காமராஜ், ராஜேந்திரன், மணிகண்டன் ஆகிய 3- பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவாக உள்ள ராஜகுருநாதனை போலீசார் வலை வீசி தேடி வருகின்ற னர்.

    • நரிக்குடி அருகே லாரியில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நரிக்குடி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகேயுள்ள எழுவணி - ரெட்டைகுளம் கிராமத்திற்கு இடையே 3 கி.மீ., தொலைவிற்கு சாலை புதுப்பிக்கும் பணிக்காக ஜல்லிக்கற்கள் விரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதற்காக டிப்பர் லாரிகள் மூலம் ஜல்லிக்கற்கள் கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை எழுவணி அழகு நாச்சியம்மன் கோவில் அருகே நடைபெ றும் சாலைப்பணிக்காக டிப் பர் லாரியில் கொண்டு வரப்பட்ட ஜல்லிக்கற்களை ரோட்டில் விரிப்பதற்காக டிப்பர் லாரியின் டிரைவ ரான அருப்புக்கோட்டை முத்துராமலிங்கபுரம் பகுதி யை சேர்ந்த சரவணக்குமார் என்பவர் அங்கிருந்த டிரான் ஸ்பார்மரின் மேலே சென்ற உயர் அழுத்த மின் வயரை கவனிக்காமல் டிப்பர் லாரி யின் ஜாக்கியை தூக்கியவா றே லாரியை இயக்கியதாக கூறப்படுகிறது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிரான்ஸ் பார் மரின் மேலே சென்று கொண்டிருந்த மின் வயரில் டிப்பர் லாரி உரசியதில் லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்து முன்பக்க டயர்கள் இரண்டும் பயங்கர சத்தத்து டன் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் லாரி டிரைவர் சரவணக்குமார் பலத்த காயமடைந்தார்.இதனையடுத்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த அரை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மேலும் அங்கு நிறுத்தி வைக் கப்பட்டிருந்த காண்ட்ராக்ட ருக்கு சொந்தமான டூவீல ரும் இந்த சம்பவத்தில் திடீ ரென தீப்பிடித்து எரிந்தது.

    இந்த சம்பவம் குறித்து அ.முக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மழை நின்றபின் குழந்தை லோகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
    • அருகில் இருந்த கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி குழந்தை தூக்கி வீசப்பட்டது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த பெருமகளூர் பேரூராட்சி கல்யாண ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கதிரவன் - பிரியா தம்பதியரின் குழந்தை லோகிதா ( வயது 2).

    பெருமகளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்து வந்தது.

    மழை நின்றபின் குழந்தை ேலாகிதா வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.

    அப்பொழுது எதிர்பாராத விதமாக வீட்டின் அருகில் இருந்த கம்பியை தொட்ட போது அதிலிருந்து மின்சாரம் தாக்கி குழந்தை யோகிதா தூக்கி வீசப்பட்டது.

    உடனடியாக குழந்தையை மீட்ட அக்கம் பக்கத்தினர் பெருமகளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்த பேராவூ ரணி போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • ஆர்.எஸ்.மங்கலத்தில் நாளை மின்தடை பகுதிகள்.
    • இந்த தகவலை திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகர் மூர்த்தி வெளி யிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    ஆர்.எஸ்.மங்கலம் துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டிய மடை, சூரமடை, பெரியார் நகர், பெருமாள் மடை, தலைக்கான்பச்சேரி, நோக்கங்கொட்டை, சிலுக வயல், இந்திரா நகர், ஆவெ ரேந்தர், பாரனூர், கலங்காப் புலி, சனவேலி, சவரியார் பட்டினம், புள்ளமடை, ஓடைக்கால், கவ்வுர், ஏ.ஆர்.மங்களம், ஆப்ராய், பெத்த னேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் மின் தடை ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மத்திய மந்திரிக்கு நமச்சிவாயம் கடிதம்
    • குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்யும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவையின் மின்சாரம் கொள்முதல் விலை உயர்வால் நுகர்வோருக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கு அரசியல்கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுவை மின்துறை அமைச்சர் நமச்சிவாயம், மத்திய மந்திரி ஆர்.கே.சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு மின் கொள்முதலுக்கு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்படும்போது விலை அதிகரிப்பால் நுகர்வேர் மின் கட்டணம் உயர்கிறது. மின் கட்டணத்தை குறைக்கும் வகையில் மத்திய தொகுப்பில் இருந்து புதுவைக்கு ஒதுக்கீடு செய்யும் மின் கொள்முதலை குறைக்க, குறைந்த கட்டணத்தில் மின் விநியோகம் செய்யும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    இதனால் மின் கொள்முதல் விலையை குறைக்கவும், மின் கட்டணத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளது.

    • வியாழக்கிழமை நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.
    • மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் செயற்பொறியாளர் கலைவேந்தன் வெளியிட்டு ள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தஞ்சாவூர் மின் பகிர்மான வட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் தலைமையில், ஒவ்வொரு மாதமும் முதல் வியாழக்கிழமை அன்று நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி நாளை ( வியாழக்கிழமை ) நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தஞ்சாவூர் செயற்பொறியாளர் அலுவலகம், எண்.1 வல்லம் ரோடு, தஞ்சாவூர் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் நளினி தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே வல்லம், மின்நகர், செங்கிப்பட்டி, வீரமரசன்பேட்டை, சுள்ளப்பெரம்பூர், திருக்கானூர்பட்டி வடக்கு தஞ்சாவூர், குருங்குளம், மருங்குளம், மெலட்டூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி பகுதி அலுவலக ங்களைச் சார்ந்த மின் நுகர்வோர்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின், நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி பலியானார்.
    • கணபதி பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா உ.நெமிலி பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது 28)கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று வழக்கம் போல் நெமிலி அருகே பாண்டூர் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவர் வீட்டில் கட்டிட வேலை பார்த்து வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுத்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிரா மங்களுக்கு மின்சார வசதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமங்களில் மின்சார வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் மின்சார வசதி செய்ய வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

    அதனைத்தொடர்ந்து கிராமங்களில் அரசு சார்பில் சோலார் விளக்கு கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்ப டவில்லை. இதனால் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் பழுதடைய தொடங்கியது. இதனால் மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திராகாலனி பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. அதன்பிறகு முற்றிலும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டது.

    இதேபோல மலைக்கிரா மங்களில் ஏராளமான மாணவ -மாணவிகள் உள்ளனர். இரவு நேரங்க ளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இவர்களால் படிக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு அனுப்பி விடுதிகளில் தங்கி படிக்க வைத்து வருகின்றனர். மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    தற்போது வனப்பகுதியில் மழை அளவு குறைந்துள்ள தால் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி கிராமங்களுக்குள் வர தொடங்கியுள்ளது.தெருவிளக்குகள் இல்லாமல் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் வன விலங்குகளுக்கு அச்சப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளு க்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் ,நொச்சிஓடை உள்ளிட்ட மலைக்கிரா மங்களில் பழுதடைந்துள்ள சோலார் விளக்குகளை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வசதி இல்லாததால் டிஜிட்டல் உலகில் செல்போன் , டி.வி., இண்டர்நெட் போன்ற எந்தவித வசதியும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். குறைந்த பட்சம் வீடுகளில் மின்விளக்கு, தெருக்களில் விளக்கு வசதியாவது செய்து தரவேன்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
    • திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    அவிநாசி:

    அவிநாசி மங்கலம் சாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியம், மின்கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நாளை 13ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

    இதில், திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் பங்கேற்று, மின்நுகா்வோா் குறைகளைக் கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

    இதில், மின்நுகா்வோா் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளா் பரஞ்சோதி தெரிவித்துள்ளாா். 

    • ரஜகுலத்தோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 5 சதவீத உள்ஒதுகீடு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்க மாநில தலைவர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபை கூட்டத்தொடரில் வண்ணார்குல மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வண்ணார் என்ற சாதி பெயரை ரஜகுலத்ேதார் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 5 சதவீத உள்ஒதுகீடு வழங்க வேண்டும்.

    சலவை துறைகளில் வாடகை மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து இலவசமாக வழங்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×