search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு மைதானம்"

    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு
    • கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம்

    மார்த்தாண்டம்,அக்.30-

    குமரி மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விளையாடுவதற்கும் முறையாக பயிற்சிகள் மேற்கொள்வதற்கும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் அரசு சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் இல்லை. சட்டமன்றத்தில் மானிய கோரிக்கையின் போது அரசு சார்பில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட மினி விளையாட்டு மைதானத்தை கிள்ளியூரில் அமைத்து தர வேண்டும்.

    முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதிகளான அதங்கோடு, செங்கிலம், மங்காடு, ஆலு விளை, மாமுகம், பணமுகம், பள்ளிக்கல், முஞ்சிறை, பார்த்திவபுரம், விரிவிளை, வைக்கலூர், மரப்பாலம், பருத்திக்கடவு, கழியான்குழி, ஈழக் குடிவிளாகம், பரக்காணி போன்ற பகுதிகளில் மழை காலங்களில் ஏற்படும் பெருவெள்ளத்தால் வீடுகளில் ஆற்றுநீர் புகுந்து விடுகிறது. இதனால் ஆற்றின் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் ஆற்றில் அடித்து செல்லப்படுகிறது. இதனால் அப் பகுதிகளில் தாமிரபரணி ஆற்றின் இருப்பக்கங்களிலும் நிரந்தர பக்கசுவர்கள் அமைத்து அங்கு குடியிருக்கும் பொது மக்களையும் அவர்களின் வீடுகளையும் பேரழிவிலிருந்து பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிள்ளியூர் தாலுகா பொதுமக்கள் நலன் கருதி தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்கிற அடிப்படையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியிலுள்ள அனைத்து வருவாய் கிராமங்களையும் உட்படுத்தி கிள்ளியூர் பகுதியில் உரிமையியல் நீதிமன்றம் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர்.
    • மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள்
    • பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட அதிகாரிகளை வலியுறுத்துவது

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில்  அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.இந்த நிலத்தில் இளைஞர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.

    மழைக்காலத்தில்  விளையாட்டு மைதானத்தில் வெள்ளம் பெருகுவதால் இளைஞர்கள் மண் போட்டுள்ளனர்.இந்நிலையில் மழை நீர் வழிந்து ஓட கடந்த வாரம்  இளைஞர்கள் மைதானத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர்.இதற்கு அப்பகுதி இரண்டு வீட்டினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    தகவலறிந்த ஊர் மக்கள் இளைஞர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த  கல்குளம் தாசில்தார் கண்ணன்,குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் தக்கலை டி.எஸ்.பி.உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார்.

    மைதானத்தில் பெருகும் மழை வெள்ளம் வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும்,

    இது தொடர்பாக பத்மநாபபுரம் சப் - கலெக்டர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து சப் - கலெக்டர்அ லுவலக த்தில்காணப்பட்டது. 

    பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. நடந்த பேச்சுவார்த்தையில் பிரச்சி னைக்குரிய பகுதியில் நில அளவு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.இந்நிலையில் விஜய்வசந்த் எம்.பி. நேற்று மாலை சைமன்காலனி சென்று அங்கு பங்குத்தந்தை மற்றும் ஊர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.ஆலோசனையில் பேச்சுவார்த்தையின்படி நில அளவு செய்யும் பணியை விரைந்து தொடங்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.


    • பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு
    • பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே உள்ளது சைமன்காலனி. இங்கு சுமார் 2 ஏக்கர் பரப்பில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் வாலிபர்கள் விளையாட்டு மைதானம் அமைத்து விளையாடி வருகின்றனர்.

    மழைக்காலத்தில் விளை யாட்டு மைதானத்தில் தண்ணீர் தேங்குவதால் வாலிபர்கள் மண் போட்டுள்ளனர். இந்நிலை யில் மழைநீர் வழிந்து ஓட நேற்று வாலிபர்கள் மைதா னத்தின் தெற்கு பகுதியில் ஓடை தோண்டினர். இதற்கு அப்பகுதியில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து தகவலறிந்த ஊர் மக்கள் வாலிபர்களுக்கு ஆதரவாக அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவவலறிந்த கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் கிராம வருவாய் ஆய்வாளர் முத்து பாண்டி, சைமன்காலனி கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் எனல்ராஜ் ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்றனர். அங்கு சைமன்காலனி பங்குத்தந்தை ஜிம் மற்றும் ஊர் நிர்வா கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் அரசிடம் முறையாக அனுமதி பெற்று ஓடை அமைக்க கட்டுமான பணிகள் செய்ய வேண்டும் என தாசில்தார் மற்றும் போலீசார் கூறினர். இதை வாலிபர்கள் மற்றும் ஊர் மக்கள் ஏற்க மறுத்தனர். இதற்கிடையே தக்கலை டி.எஸ்.பி. உதயசூரியன் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு அவர்க ளிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுமூக முடிவு ஏற்பட்டது.

    மைதானத்தில் தேங்கும் மழைநீரை வெளியேற இடையூறு இல்லாமல் மைதான கட்டுமான பணிகள் மேற்கொள்வது எனவும், இது தொடர்பாக வருகிற திங்கட்கிழமை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பது எனவும் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளார் ஊராட்சியில், கிளை தி.மு.க. சார்பில் விளையாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது.
    • ஊராட்சி செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே கொள்ளார் ஊராட்சியில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த அமைச்சர் மஸ்தான், கிரிக்கெட் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். மயிலம் ஊராட்சி ஒன்றியம் கொள்ளார் ஊராட்சியில், கிளைதி.மு.க. சார்பில் விளை யாட்டு மைதானம் தயார் செய்யப்பட்டது.

    விளை யாட்டு மைதானத்தை மயிலம் ஒன்றிய செயலா ளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான சேதுநாதன் மற்றும் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் முன்னிலையில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் திறந்து வைத்து விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் சந்திரன், ரிஸ்வான், கவுன்சிலர் உமா ஞானசேகர், வக்கீல் கமலக்கண்ணன், ஒன்றிய பிரதிநிதி தெய்வகண்ணன், ஊராட்சி செயலர் முனியாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.
    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.

    திருப்பூர் :

    தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.இதில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மானியகோரிக்கை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.அதில் திருப்பூர்மாவட்டம் காங்கேயத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ஆணையி ட்டுள்ளார்.

    இது காங்கேயம் பகுதி மக்களிடையே மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் காங்கேயத்தில் சிறுவிளையாட்டு அரங்கம்அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

    • ராயபுரம் ராபின்சன் மைதானத்தில் பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்க்க ஏற்பாடு.
    • தீக்காயம் அடைந்த 2 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி.

    ராயபுரம்:

    கத்தாரில் நேற்று நடைபெற்ற உலககோப்பை கால்பந்து இறுதி போட்டியை ரசிகர்கள் பெரிய திரையில் காணும் வகையில் சென்னை ராயபுரம் பகுதியில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதையடுத்து கால்பந்து இறுதி போட்டியை ரசிக்க நேற்று இரவு சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து ரசிகர்கள் அந்த மைதானத்திற்கு வந்திருந்தனர். இதனால் மைதானம் முழுவதும் ரசிகர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு இருந்தனர்.

    அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்சி முதல் கோல் அடித்த போது உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சிலர் பட்டாசு வெடித்தனர். அப்போது ராக்கெட் பட்டாசு ஒன்று கூட்டத்திற்குள் புகுந்து பறந்து சென்று வெடித்தது.

    இதனால் அந்த கூட்டத்தில் இருந்த கேரளாவை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் ராகேஷ் மற்றும் ரகுனேஷ் உடலில் தீப்பற்றியது. இதனால் கூட்டத்திலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு காணப்பட்டது. உடனடியாக அங்கிருந்த சிலர் தீயில் கருகிய மாணவர்கள் 2 பேரையும் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் மாணவர் ரகுனேசுக்கு முகம், தாடை, தோள் பட்டை, கையிலும், ராகேசுக்கு முதுகிலும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் தொடர்ந்து பெரிய திரையில் கால்பந்து போட்டி ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்துடன் அதை பார்த்து ரசித்து சென்றனர்.

    • அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    பல்லடம் :

    தமிழகத்தில் கிராமபுறங்களில் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்தவும்,உடற்பயிற்சிகள் செய்வதற்கான ஆர்வம் ஏற்படுத்தவும், கடந்த 2006 தி.மு.க., ஆட்சிக்காலத்தில், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், கிராமங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு, அடிப்படை உடற்பயிற்சிகள் செய்வதற்கான உபகரணங்கள், கபடி, வாலிபால் விளையாடுவதற்கான கட்டமைப்பு மற்றும் குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல் உள்ளிட்ட உபகரணங்கள் அமைக்கப்பட்டது.

    மேலும் பல்வேறு விளையாட்டு சாதனங்களும், ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. மைதானங்கள் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இந்த திட்டம் சில ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், மைதானங்கள் பராமரிப்பு குறித்து சில ஆண்டுகள் கண்டுகொள்ளப்படவில்லை. பின்னர் கடந்த, 2020ல் அம்மா விளையாட்டு மேம்பாட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், கிராமம்தோறும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மைதானங்கள் மேம்பாடு செய்யப்பட்டது.

    தற்போது அனைத்து கிராமங்களிலும் மைதானங்கள் பயன்பாடு இல்லாமல் புதர் மண்டி மாயமாகி வருகிறது.

    மேலும் விளையாட்டு, பயிற்சி உபகரணங்கள், துருப்பிடித்து, பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது. ஆக்கிரமிப்பால் பல இடங்களில் மைதானமே இல்லாத நிலை உள்ளது. தற்போது கிராமப்புற இளைஞர்களிடமும், விளையாட்டு ஆர்வம் வெகுவாக குறைந்து விட்டது. பெருந்தொற்று காலத்துக்குப்பிறகு, மொபைல்போனில் மூழ்கி, அடிப்படை உடற்பயிற்சிக்கு கூட இளைஞர்களும், மாணவர்களும், முக்கியத்துவம் அளிப்பதில்லை.அதே போல், விளையாட்டில், சாதிக்க நினைப்பவர்களுக்கும், கிராமங்களில், எவ்வித வசதியும் இல்லை. எனவே, கிராமப்புற மைதானங்களை பராமரித்து, உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்க வேண்டும். சிறப்புக்குழு அமைத்து, மைதானம், உபகரணங்கள் பராமரிப்பை ஒப்படைக்க வேண்டும்.கிராமம் வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தி இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும். இது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×