காங்கயத்தில் விளையாட்டு மைதானம் - உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நன்றி

தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காட்சி.
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த காட்சி.
Published on

திருப்பூர் :

தமிழக சட்டசபையில் 2023- 2024 ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கை நடைபெற்று வருகிறது.இதில் விளையாட்டு மேம்பாட்டு துறையின் மானியகோரிக்கை குறித்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.அப்போது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புதிய விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என கூறினார்.அதில் திருப்பூர்மாவட்டம் காங்கேயத்தில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க ஆணையி ட்டுள்ளார்.

இது காங்கேயம் பகுதி மக்களிடையே மிகுந்தவரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிலையில் காங்கேயத்தில் சிறுவிளையாட்டு அரங்கம்அமைக்க உத்தரவிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வும் செய்தித்துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com