search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்வசதி இல்லாமல் தவிக்கும் கிராமம்"

    • மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
    • மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியத்தில் மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி, இந்திராநகர், நொச்சிஓடை ,பொம்ம ராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிரா மங்களுக்கு மின்சார வசதி கிடையாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மலைக்கிராமங்களில் மின்சார வசதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது. ஆனால் வனப்பகுதியில் வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளதால் மின்சார வசதி செய்ய வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.

    அதனைத்தொடர்ந்து கிராமங்களில் அரசு சார்பில் சோலார் விளக்கு கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்ட பின்பு 10 ஆண்டுகளாக எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்ப டவில்லை. இதனால் மலைக்கிராமங்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகள் பழுதடைய தொடங்கியது. இதனால் மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திராகாலனி பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது. அதன்பிறகு முற்றிலும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டது.

    இதேபோல மலைக்கிரா மங்களில் ஏராளமான மாணவ -மாணவிகள் உள்ளனர். இரவு நேரங்க ளில் போதிய வெளிச்சம் இல்லாததால் இவர்களால் படிக்க முடியவில்லை. எனவே பொதுமக்கள், தங்கள் குழந்தைகளை வெளியூர்களுக்கு அனுப்பி விடுதிகளில் தங்கி படிக்க வைத்து வருகின்றனர். மலைக்கிராமங்களில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படிக்க முடியும். அந்தப்பள்ளி கட்டிடமும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    தற்போது வனப்பகுதியில் மழை அளவு குறைந்துள்ள தால் யானை, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் நீர் தேடி கிராமங்களுக்குள் வர தொடங்கியுள்ளது.தெருவிளக்குகள் இல்லாமல் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளதால் வன விலங்குகளுக்கு அச்சப்பட்டு பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளு க்குள்ளேயே முடங்கி கிடக்கும் நிலை உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசரடி, பொம்மராஜபுரம், இந்திராநகர் ,நொச்சிஓடை உள்ளிட்ட மலைக்கிரா மங்களில் பழுதடைந்துள்ள சோலார் விளக்குகளை உரிய முறையில் சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேலாக மின் வசதி இல்லாததால் டிஜிட்டல் உலகில் செல்போன் , டி.வி., இண்டர்நெட் போன்ற எந்தவித வசதியும் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். குறைந்த பட்சம் வீடுகளில் மின்விளக்கு, தெருக்களில் விளக்கு வசதியாவது செய்து தரவேன்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×