உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி

ரமேஷ் தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார்.
உளுந்தூர்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி லாரி டிரைவர் பலி
Published on

கள்ளக்குறிச்சி:

சேலம் மாவட்டம் ஏழுமலைகவுன்டர்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 36) டிரைவர். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை குருபீடபுரம் கூந்தலூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் கடந்த 8 மாதமாக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று கொட்டையூர் பகுதியில் உள்ள கல்குவாரியில் கற்களை டிப்பர் லாரியில் ஏற்றிகொண்டு மீண்டும் கம்பெனிக்கு வந்தார்.

அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க டோர் சரியாக மூட வில்லை. இதனால் டிப்பர் லாரியின் பின்புற கதவை தூக்கும்போது மேலே சென்ற மின்கம்பி மீது பட்டு மின்சாரம் பாய்ந்து டிரைவர் ரமேஷ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே உடல் கருகி இறந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து எடைக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com