search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "durga"

    • மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
    • ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும்.

    நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும்.

    ஆன்ம ரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

    * முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

    * மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

    * எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

    * ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

    மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

    • தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார்.
    • நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்! நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர். தேவர்கள், மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான் அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசக்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. 

    • 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம்.
    • ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு.

    நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.

    இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.

    ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை. 

    மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.

    தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

    மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.

    மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம். இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.

    • லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி.
    • தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார்.

    சக்திதாசன் என்று தம்மை அழைத்துக் கொண்ட மகாகவி பாரதியார் அன்னை பராசக்தியைப் போற்றும் உன்னதத் திருவிழாவான நவராத்திரியைக் கொண்டாடுவதில் மிகவும் விருப்பமுடையவராக இருந்தார்.

    நவராத்திரித் திருநாளின் மகத்துவம் பற்றிய அவரது சிறு கட்டுரை:

    ஒன்பதிரவு பராசக்தியைப் பூஜை செய்கிறோம். லக்ஷ்மி என்றும், சரஸ்வதி என்றும், பார்வதி என்றும் மூன்று மூர்த்தியாக நிற்பது பராசக்தி. இவ்வுலகத்தை ஆக்கல், அழித்தல், காத்தல் என மூன்று தொழில் நடத்துவது.

    ஹிமாசலம் தொடங்கி குமரி முனை வரை வேதத்தை நம்பும் கூட்டத்தார் எல்லாம் இந்தப் பூஜை செய்கிறோம். ஏழைகளாக இருப்போர் பராசக்திக்கு மலரையும், நீரையும், உள்ளத்தையும் கொடுத்து வலிமை பெறுகிறார்கள். செல்வமுடையோர் விருந்துகளும், விழாக்களும் செய்கின்றனர்.

    மஹாளய அமாவாசை கழிந்தது.

    இருளும், ஒளியும் மாறிவருவது இவ்வுலக இயற்கை. பகலிலே பெரும்பாலும் ஒளியுண்டு, மேகங்கள் வந்து சூரியனை மறைத்தாலொழிய. சில சமயங்களில் கிரகணம் பிடிக்கும். அதையும் தவிர்த்து விட்டால், இரவிலே தான் ஒளியின் வேறுபாடுகளும் மறைவுகளும் அதிகப்படுகின்றன. பகல் தெளிந்த அறிவு. இரவென்பது மயக்கம். பகலாவது விழிப்பு. இரவு என்பது தூக்கம். பகலாவது நல்லுயிர் கொண்டு வாழ்தல். இரவு லயம்.

    சக்தி, நல்ல வல்லெழுத்துச் சேர்ந்த மொழி, விக்ரமாதித்யனும், காளிதாஸனும் வணங்கிய தெய்வம், உலகத்தார் இந்தப் பராசக்தியை நல்ல மழையருள் புரியும் சரத்காலத்தின் முதல் ஒன்பதிரவும் வணங்கி பூஜைகள் செய்யவேண்டும் என்பது பூர்வீகர் ஏற்பாடு. மிகப் பயனுடைய காரியம். மேலான வழி.

    ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலும் எப்போதும் நடக்கின்றன. லோக சம்ரக்ஷணை எப்போதும் செய்யப் படுகிறது. எப்போதுமே ஆராதனை செய்யவேண்டும். சரத்காலத் தொடக்கத்திலே பேரருளைக் கண்டு விசேஷ விழா நடத்துகிறோம். தவம், கல்வி, தெய்வத்தைச் சரண்புகுதல் இம்மூன்றும் கர்மயோகம் என்று பதஞ்சலி முனிவர் சொல்லுகின்றார். லௌகீகக் கவலைகளிலே இம்மூன்று தொழிலையும் எப்போதும் செய்துகொண்டிருக்க முடியாமல் தடுக்கப்படும் சாமான்ய ஜனங்கள் நவராத்திரி ஒன்பது நாள் இரவும் பகலும் மேற்கூறிய மூவகை நெறியில் நிலை பெறும் வண்ணமான விதிகள் ஆகமங்களிலே கூறப்பட்டன. ஒன்பது நாளும் தியானம், தவம், கல்வி இவற்றிலே செலவிடத் திறமையில்லாதோர் கடைசி ஒன்பதாம் நாள் மாத்திரமேனும் விரதம் காக்கவேண்டும். இந்தப் பூஜையின் பொருள் மிகவும் தெளிந்தது.

    சக்தியால் உலகம் வாழ்கிறது.

    நாம் வாழ்வை விரும்புகிறோம்.

    ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம்.

    • நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும்.
    • நவராத்திரி முத்தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    சக்தியின் அருள் வேண்டி நோற்கும் விரதங்களில் மிக முக்கியமானது நவராத்திரியாகும். நவராத்திரி என்பது ஒன்பது இரவுகளும் சக்தியை துர்க்கை, மகாலட்சுமி சரஸ்வதி என பல்வேறு வடிவங்களில் வழிபடுவதாகும்.

    நவராத்திரி பெரும்பாலும் பெண்கள் அனுட்டிக்கும் விரதமாகும்.

    நவராத்திரி வகைகளில் சாரத நவராத்திரி, வசந்த நவராத்திரி என்பன முக்கியமானவை ஆகும். வசந்த காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு வசந்த நவராத்திரி என்படும். இது சிலாபத்திலுள்ள முன்னேஸ்வர ஆலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

    காலத்தில் நிகழும் நவராத்திரி வழிபாடு சரத் காலத்தில் நிகழும் நவராத்திரிவழிபாடு சாரத நவராத்திரி எனப்படும். இது புரட்டாதி மாத வளர்பிறை பிரதமை தொடக்கம் நவமி வரை உள்ள ஒன்பது தினங்கள் அனுட்டிக்கப்படும் தனிச்சிறப்புடைய விரதமாகும்.

    ஏனைய விரதங்களில் பெரும்பாலானவை ஒரு தெய்வத்தின் அருள் வேண்டி நோற்கப்படுன்றது. ஆனால் நவராத்திரி முத் தெய்வங்களின் அருளை வேண்டி முக்கியமாக வீரம், செல்வம் கல்வி என்பவற்றை வேண்டி நோற்கப்படும் கூட்டு விரதமாகும்.

    நவராத்திரியை அடுத்து வரும் பத்தாம் நாள் விஜயதசமி எனச் சிறப்பித்துக் கூறப்படும் இத்தினத்தில் குழந்தைகளுக்கு ஏடு தொடக்குதல், கலைப்பயிற்சிகளைத் தொடங்குதல் என்பன நடைபெறும்.

    விஜய தசமியன்று ஆயுத பூஜை நடத்தப்படும். முற்காலத்தில் நவராத்திரி விரத காலத்தில் "தேவி மகாத்மியம்" என்ற நூலைப் பாராயணம் செய்யும் வழக்கம் பேணப்பட்டது. ஆனால் தற்காலத்தில் சகலகலாவல்லி மாலை முதலான நூல்களைப் பாராயணம் செய்யும் வழக்கம் உள்ளது.

    நவராத்திரி காலத்தில் நாட்டின் பல பகுதிகளிலுள்ள ஆலயங்களிலும் முப்பெரும் தேவியர்களுக்கு விசேட அபிஷேகம், பூஜை என்பன நடத்தப்படும்.

    ஒன்பதாம் நாள் கலைமகள் விழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுவதுடன் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறும். பத்தாம் நாள் விஜய தசமி விழா (வாழை வெட்டு) நடைபெறும். பாடசாலைகளில் கலை, கலாசார நிகழ்வுகளுடன் நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

    துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும்.
    துர்க்கா விரத பூஜையை உரிய முறையில் மேற்கொண்டால் நமக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வந்துசேரும். குடும்ப கஷ்டங்கள் விலகி ஓடும். தோஷம் அகல உகந்த நேரம் மாலை நேரம் என்பதினால் அந்நேரத்தில் அம்மனை வழிபடவேண்டும். எந்தவித தோஷங்கள் தாக்கி கஷ்டப்பட்டாலும் துர்க்கை அம்மன் அதனை அகற்றி அருள்புரிவாள்.

    துர்க்காதேவிக்கு உகந்த நாட்கள் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களாகும். இருப்பினும், மிகவும் உகந்த காலம் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 வரையிலான ராகு காலமே பூஜைக்கு சிறப்பான நேரமாகும். அன்னையின் அருளைப் பெற செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருந்து தலைக்குப்பூச்சூடி, நெற்றிக்கு விபூதி, குங்குமம் வைத்துக்கொண்டு துர்க்காதேவியை வழிபட கோவிலுக்குச் செல்லவேண்டும். துர்க்கை பூஜைக்கு உகந்த மலர் செவ்வரளிப்பூவாகும்.

    அந்த பூக்களை உதிரியாகவோ அல்லது மாலையாகவோ வாங்கிக்கொள்ளலாம். எழுமிச்சம்பழக் கிண்ண விளக்கில் நெய் ஊற்றி திரிபோட்டு, அத்துடன் அர்ச்சனைப் பொருட்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும். அம்மனை அர்ச்சனை செய்ய கொண்டு வந்திருக்கும் பூ, பழம், கற்பூரம், தேங்காய், பழம், வெற்றிலைப்பாக்கு, ஊதுவத்தி, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், விபூதி, பன்னீர் பாட்டில் அடங்கிய அர்ச்சனை தட்டை அம்மனை பூஜை செய்யும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும்.

    துர்க்கைக்கு எலுமிச்சம்பழ மாலை சூட்ட விருப்பம் உள்ள பக்தர்கள் எலுமிச்சம் பழத்தை மாலையாகத் தொடுத்து அர்ச்சகரிடம் கொடுத்தால் அவர் அம்மாலையை அம்மனுக்கு செலுத்துவார். அதன்பின்னர் தயாராக செய்து வைத்துள்ள எலுமிச்சப்பழக் கிண்ண விளக்கில் திரியை கொளுத்தி ஒளிப்பெற செய்யவேண்டும். ஒரே ஒரு எலுமிச்ச விளக்கு ஏற்றக்கூடாது ஜோடியாகத்தான் ஏற்ற வேண்டும். பிரார்த்தனைக்கு ஏற்றவாறு ஐந்து, ஒன்பது, பதினொன்று, நூற்றிஒன்று இப்படி எத்தனை வேண்டுமானாலும் நெய்விளக்கு ஏற்றலாம்.

    திருமணம் ஆகவேண்டிய பெண்கள் விரதமிருந்து இதனைச் செய்தால் நல்ல வரன் கிடைத்து குடும்பம் செழிப்புடன் இருக்கும். எலுமிச்சம்பழ நெய்விளக்குகள் ஏற்றிய பின்னர் மானசீகமாக தங்களின் குறைகளை அன்னையிடம் சமர்ப்பியுங்கள். உங்களது குறைகள் என்னவாக இருந்தாலும் தீர்த்து வைப்பாள். அவளது பேரருள் தங்களுக்கு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறி நல்வாழ்வுப் பெறுவீர்கள். அன்னையின் முன்னால் துர்க்கை அம்மன் கவசத்தை 108 தடவை வாய்விட்டுச் சொல்லுங்கள். பக்தி பரவசத்துடன் பாமாலைப்பாடி மனமுருகி துதியுங்கள்.

    மன நிம்மதி பெறுவீர்கள். தீபாராதனை முடித்து-அர்ச்சகர் அர்ச்சனைத்தட்டை தரும்போது அம்மனின் பிரசாதமாக குங்குமம், பூ தருவார். அதனால் அன்னையின் அருள்கடாட்சம் பரிபூரணமாகக் கிடைக்கும். பூஜை முடிந்த பின்னர் அன்னையின் சுற்று பிரகாரத்தை பதினெட்டு தரம் வலம் வந்து, கொடி மரத்தையும் பதினொரு தரம் சுற்றிவிட்டு, அம்மனின் சன்னதியின் எதிரில் சிறிதுநேரம் அமர்ந்து விட்டு எழும்போது அங்கிருந்தவாறே அம்மனை வணங்கி விட்டு வர வேண்டும்.
    பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் அல்லது தினமும் இந்த இரு மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.
    நரசிம்ம மந்திரம்

    தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து "ஓம் ஹூம் பட் நரசிம்மாய ஸ்வாஹா"

    என்று 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது. பயந்த சுபாவம் உள்ளவர்கள் செவ்வாய்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியம் பெறுவார்கள்.

    துர்கா தேவி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம்
    க்லீம் துக்க ஹந்த்யை
    துர்க்காயை தே நம ஸ்வாஹா ||

    தூங்கும் முன் சிறிது தண்ணீர் எடுத்து மேற்சொன்ன மந்திரத்தை 18 தடவை ஜெபித்து அந்த நீரைக் குடித்துப் பின்னர் தூங்க பயங்கரமான கனவுகள் தோன்றாது.

    பயந்த சுபாவம் உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையைச் செய்து வர பயம் நீங்கித் தைரியமும் நல்வாழவும் பெறுவார்கள்.
    துர்க்கையை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
    பிப்ரணா ஸூலபாணாஸ்யரிஸதரகதா சாபபாஸாந் கராப்ஜை:
    மேகஸ்யாமா கிரீடோல்லிகிதஜலதரா பீஷணா பூஷணாட்யா
    ஸிம்ஹஸ்கந்தாதிரூடா சதஸ்ருபிரஸிகேடாந்விதாபி: பரீதா
    கந்யாபிர்பிந்நதைத்யா பவது பவபய தவம்ஸிநீ ஸூலிநி வ:
    -சூலினி துர்க்கா ஸ்லோகம்

    பொதுப் பொருள்:

    சூலினி துர்க்காதேவியை வர்ணிக்கும் ஸ்லோகம் இது. பேரொளியோடு திகழும் திரிசூலத்தைக் கையில் தாங்கியவள்; எதிரிகளை அழிப்பதில் நிகரற்றவள். இரு புறங்களிலும் கத்தி, கேடயம் ஏந்திய தோழிகள் காவலிருக்க கம்பீரமாக கோலோச்சுபவள். இவளை நினைத்த மாத்திரத்திலேயே துஷ்ட கிரகங்கள் பயந்து ஓடுகின்றன. இந்த மந்திரத்தை ஜபம் செய்பவர்கள் எந்த செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி கிட்டும்.
    இத்துதியை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் ஜபித்து வர அபமிருத்யு என்கிற ஆயுள் கண்டம் விலகி தீர்க்காயுள் பெறலாம்.
    ஹஸ்தாப்யாம் கலசத்வயாம்ருத ரஸைராப்லாவயந்தம் சிரோ
    த்வாப்யாம் தெள தத்தம் ம்ருகாக்ஷவலயே த்வாப்யாம் வஹந்தம் பரம்
    அங்கந்யஸ்தகரத்வயாம்ருத்தரம் கைலாசகாந்தம் சிவம்
    ஸ்வச்சாம்போஜகதம் நவேந்துமகுடம் தேவம் த்ரிநேத்ரம் பஜே,

    - ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்

    பொதுப் பொருள்: இரண்டு கைகளில் அம்ருதத்தை ஏந்திய வரும், மற்ற இரு கைகளில் மான் மற்றும் ருத்ராக்ஷ மாலையை ஏந்தியவாறு மேலிரண்டு கைகள் மேலே ஆகாயத்தை நோக்கியும், கீழிரண்டு கைகளும் தொடையில் வைத்தவாறு தலையில் பிறை சந்திரனை அணிந்தவரும், வெள்ளை மேகம் போல் காட்சியளிக்கும் கைலாயத்தில் வசிப்பவருமான அந்த முக்கண்ணனை வணங்குகிறேன். 
    விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    விபத்து, எதிரிகள் தொல்லை போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

    1. ச்ருணு தேவி ப்ரவக்ஷ்யாமி கவசம் ஸர்வஸித்திதம்
    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்

    2. அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்

    3. உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
    சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ

    4. ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா

    5. அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ

    6. கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ

    7. ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
    கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது.
    கணவன், மனைவி சேர்ந்து வாழவும், திருமணத் தடைகள் நீங்கவும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படவும் ஸ்ரீ துர்காதேவி மந்திரம் எனும் இந்த ஸ்லோகம் மிகவும் சிறந்தது.

    ச்ருணு தேவி ப்ரவக்ஷ?யாமி கவசம் ஸர்வஸித்திதம்
    படித்தவா பாடயித்வா சநரோ முச்யேத ஸங்கடாத்
    அஜ்ஞாத்வா கவசம் தேவி துர்கா மந்த்ரம் சயோஜயேத்
    ஸநாப்நோதி பலம் தஸ்ய பாஞ்ச நரகம் வ்ரஜேத்
    உமாதேவீ சிர: பாது லலாடே சூலதாரிணீ
    சக்ஷúஷீகேசரீ பாது கர்ணௌ சத்வதர வாஸிநீ
    ஸுகந்தா நாஸிகே பாது வத நம் ஸர்வதாரிணீ
    ஜிஹ்வாஞ்ச சண்டிகாதேவீக்ரீவாம் ஸெளபத்ரிகாததா
    அசோக வாஸிநீ சேதோ த்வெள பாஹூ வஜ்ரதாரிணீ
    ஹ்ருதயம் லலிதா தேவீ உதரம் ஸிம்ஹவாஹிநீ
    கடிம்பகவதீ தேவீ த்வாவூரு விந்த்ய வாஸிநீ
    மஹா பலாச ஜங்க்வே த்தே பாதௌ பூதவாஸிநீ
    ஏவம் ஸ்திதாஸி தேவி த்வம்த்ரைலோக்யேரக்ஷணாத்மிகா
    ரக்ஷமாம் ஸர்வகாத்ரேஷுதுர்கே தேவீ நமோஸ்துதே.
    துன்பங்களை போக்குபவளான ஸ்ரீதுர்க்கையை போற்றும் மங்கள சண்டிக ஸ்தோத்திரத்தை, ராகு காலத்தில் சொல்வதால் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
    ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
    ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

    விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே ! செவ்வாய்க்கிழமை தோறும் பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

    தேவீம் ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
    பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

    விளக்கம்: தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

    ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
    ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

    விளக்கம்: காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

    ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
    தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

    விளக்கம்: பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

    மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
    ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

    விளக்கம்: மங்களத்தை தரும் மங்கள நாயகியே ! என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

    பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
    பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

    விளக்கம்: பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

    மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
    ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

    விளக்கம்: மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே மாந்தருக்கு மோட்சத்தை அளிப்பவளே !

    ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
    ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

    விளக்கம்: மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

    ×