search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Diwali Festival"

    • மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.
    • மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    சென்னை:

    ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது.

    இதுமட்டுமின்றி 1 கிலோ துவரம்பருப்பு ரூ.30-க்கும், பாமாயில் பாக்கெட் ரூ.25 -க்கும், சர்க்கரை 1 கிலோ ரூ.25-க்கும் விற்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்களுக்கு பாதி விலையில் இந்த பொருட்கள் கொடுக்கப்படுகிறது.

    தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், அரிசி மற்றும் கோதுமையை இந்திய உணவுக் கழகத்திடம் இருந்தும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடம் இருந்தும் கொள்முதல் செய்து, ரேசன் கடைகளுக்கு வினியோகம் செய்கிறது.

    தற்போது மத்திய அரசு, வீட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை 200 ரூபாய் குறைத்துள்ளது.

    இது வரஇருக்கிற தேர்தலில் எதிரொலிக்க கூடும் என்பதால் மக்களை கவரும் வகையில் தமிழக அரசும் சில அறிவிப்புகளை வெளியிட ஆலோசித்து வருகிறது.

    இதற்காக தீபாவளி பண்டிகையின்போது ரேசனில் வழங்கப்படும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றையும் இலவசமாக வழங்கலாமா? என்று பரிசீலித்து வருகிறது.

    இதற்காக நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த 3 மாதங்களுக்கு தேவைப்படும் 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில் 6 கோடி லிட்டர் பாமாயில் ஆகியவற்றை கொள்முதல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசு கடைகளுக்கு உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.
    • விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்‌.

    மதுரை

    மதுரை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகர காவல் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 2008-ன் படி வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளின்படி படிவம் எண் ஏ.இ.5 என்ற படிவத்தனை பூரத்தி செய்து ரூ.2க்கான நீதிமன்ற அஞ்சல் வில்லையுடன் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவம் (இணையதளத்தில் பதிவிறக்கம்) பாஸ்போர்ட் புகைப்படத்துடன், விண்ணப்பதாரரின் கூடுதல் பாஸ்போர்ட் புகைப்படம்-2 (தனியாக இணைக்கப்பட வேண்டும்), தீயணைப்புத்துறை தடையில்லாச் சான்று, உத்தேசிக்கப்பட்ட கடையின் வரைபடம் (2 வழிகள் இருக்கவேண்டும்) வரைபடத்தில் கடையின் முகவரி முழுமையாக குறிப்பிடப்பட வேண்டும்,

    மனுதாரர் கையொப்பம் இட்டிருக்க வேண்டும், உத்தேசிக்கப்பட்ட கடை அமையவுள்ள இடத்தை சுற்றி 50 மீட்டர் அருகாமையில் உள்ள அமைவிடங்களை குறிக்கும் வரைபடம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் சொந்த கட்டிடமாக இருப்பின் சொத்து வரி ரசீது, உரிமையாளரின் சம்மதக் கடிதம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் வாடகைக் கட்டிடமாக இருப்பின் 2023-2024-ம் ஆண்டுக்குரிய முதலாம் அரையாண்டு வரை அதாவது 30.09.2023 வரை செலுத்தப்பட்ட சொத்து வரி ரசீது மற்றும் கட்டிட உரிமையாளரின் சம்மத க்கடிதம் மற்றும் கட்டிட உரிமையாளருடன் விண்ணப்பதாரர் ஏற்படுத்திக்கொண்ட வாடகை முத்திரைத்தாளில் நோட்டரி பப்ளிக் ஒப்புதலு டன்). ஒப்பந்தப்பத்திரம், பட்டாசு கடை அமையவுள்ள இடம் மாநகராட்சி / பொதுப்பணித்துறை / மற்ற துறை கட்டிடமாக இருப்பின் அத்துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம், மாநகராட்சி டி.அண்டு சி. ரசீது,

    ஏற்பு உறுதி ஆவணம் (ரூ.20/- மதிப்புள்ள பத்திரத்தில் நோட்டரி ஒப்புதலுடன்) கடை அமையவுள்ள இடத்தின் புகைப்படம் 2 கோணங்க ளில், விண்ணப்பதாரரின் குடும்ப அட்டை (அல்லது) ஆதார் அட்டை நகல்கள் ரூ.900/- விண்ணப்ப உரிமம் கட்டணம் (திருப்பித்தர இயலாது).

    அசல் விண்ணப் பத்துடன் அனைத்து ஆவணங்களும் 3 நகல் இணைக்கப்படவேண்டும். செப்டம்பர் 21ம் தேதி 1 மணிக்குள் பெறப்படும் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்பட்டு, சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிட்டு, விசார ணைக்குப்பின் காவல்துறை கண்ணோக்கில் திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே உரிமம் வழங்கப்படும்.

    வெடிபொருள் சட்டம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின் படி, சாலை ஓரக்கடைகளுக்கு உரிமம் வழங்கப்பட மாட்டாது. மேற்கண்ட தேதிக்கு மேல் விண்ணப்பம் சமர்ப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட மாட்டாது. குறித்த கால கெடுவுக்குள் முழுமையாக பெறப்படாத விண்ணப் பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தள்ளுபடி செய்யப்படும். தற்காலிக பட்டாசு கடை உரிமம் பெற விண்ணப்பிக்க செப்டம்பர் 21-ந்தேதி கடைசி நாளாகும்.

    இவ்வாறு அவர்கள் தெரித்தனர்.

    • தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
    • தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்கு திருப்பூரில் இருந்து வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பண்டிகை முடிந்ததையடுத்து தொழிலாளர்கள் பலர் திருப்பூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக நாளை 31-ந்தேதி பெரும்பாலான தொழிலாளர்கள் திரும்ப உள்ளனர். இதனால் நெல்லை, நாகர்கோவில், மதுரை, சேலம், தேனி, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து திருப்பூருக்கு கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    தொழிலாளர்கள் திரும்ப உள்ளதையடுத்து திருப்பூரில் மீண்டும் ஆடை உற்பத்தி வேகமெடுக்கும். இது குறித்து பின்னலாடை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:-

    தீபாவளி பண்டிகையின் போது குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கும் மேல் தொழிலாளர்கள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.இதன் பின்னர் பண்டிகையை முடித்து விட்டு திருப்பூருக்கு திரும்புவார்கள்.

    இதிலும் ஆர்டர்கள் மிகவும் அவசரமாக இருக்கிற சில நிறுவனங்கள் பண்டிகை முடிந்த ஓரிரு நாட்களிலேயே தொழிலாளர்களை வேலைக்கு வருமாறு அழைப்பார்கள். ஆனால் தற்போது நூல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லை. இதன் காரணமாக பல நிறுவனங்களும் தங்களது தொழிலாளர்களுக்கு ஒரு வாரத்திற்கு மேல் விடுமுை றஅளித்துள்ளன. இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் நாளை திருப்பூர் வந்து விடுவார்கள். இதன் பின்னர் ஆடை தயாரிப்பு முன்பு போல் தொடங்கி விடும் என்றனர்.

    மேலும் சில உற்பத்தியாளர்கள் கூறுகையில்,

    தற்போதைய நிலவரப்படி ஏற்றுமதி நிறுவனங்களில் அவசர ஆர்டர்கள் இல்லை. பெரிய நிறுவனங்களிடம் ஆர்டர் எடுத்து ஆடை தைத்து கொடுக்கும் குறு, சிறு பனியன் யூனிட்களிலும் பணி குறைவாகவே உள்ளது.இதனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான குறு, சிறு பின்னலாடை யூனிட்களுக்கு நவம்பர் 10ந் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு பனியன் உற்பத்தி நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு உற்பத்தியை தொடர திட்டமிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு பிறகு பின்னலாடை உற்பத்தியைத் துவக்கினாலும் அது வேகமாக இல்லை.

    சொந்த நிலம் உள்ள வெளி மாவட்ட தொழிலாளர்கள், தீபாவளி பண்டிகைக்கு சென்று, போனசை பயன்படுத்தி, விவசாய பணிகளை துவக்குவது வழக்கம்.இந்தாண்டு பருவமழையும் கைகொடுத்துள்ளதால், பண்டிகைக்கு சென்ற தொழிலாளர் விவசாய பணியை துவக்கியிருப்பர். ஒரு சிலர் அங்கேயே தங்கிவிட்டு மற்றவர்கள் திருப்பூர் திரும்புவதுண்டு.

    பெரும்பாலான நிறுவனங்களில் 10 நாட்கள் வரை தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக பணிக்கு வர விரும்பினால் வரலாம் என்றும் தெரிவித்துள்ளோம்.

    வடமாநில தொழிலாளரை கொண்டு உற்பத்தியை தொடர்கிறோம். சில நிறுவனங்கள் கைவசம் உள்ள தொழிலாளரை கொண்டு பராமரிப்பு பணியை செய்து வருகின்றனர்.வரும் நவம்பர் மாத இறுதியில் புதிய ஆர்டர் வந்து உற்பத்தி முழு வேகமெடுக்கும்.அதற்கான ஆயத்த பணிகளை செய்து வருகின்றனர் என்றனர்.

    • காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.
    • காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெள்ளகோவில்:

    முத்தூர் பகுதிகளில் காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து வெள்ளகோவில், முத்தூர் பகுதி உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :-

    முத்தூர் பகுதிகளில் செயல்பட்டு வரும் இனிப்பு, காரம் தயாரித்து விற்பனை செய்யும் பலகார கடைகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யும் கடைகள் தீபாவளி பண்டிகைக்கு தயார் செய்த அனைத்து வகையான காலாவதியான இனிப்பு, காரம் உட்பட அனைத்து தின்பண்டங்கள், உணவுப் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் காலாவதியான இனிப்பு கார உணவு பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்வதை தவிர்த்தல் வேண்டும். காலாவதியான இனிப்பு, கார வகைகள், உணவு பொருட்கள் ஆகியவற்றை விற்பனை செய்யக்கூடாது.

    மேலும் கிராமப்புறங்களில் உள்ள சிறு, பெரிய இனிப்பு, காரம் மற்றும் உணவு பொருட்கள் விற்பனை கடைகளில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனைக்காக வைக்கப்பட்ட பலகாரங்களை உடனே அகற்றி அழிக்க வேண்டும்.

    எனவே காலாவதியான உணவு பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறு இதையும் மீறி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அபராதம் விதித்தல், சீல் வைத்தல், கடை உரிமம் ரத்து செய்தல் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எவ்வித பாரபட்சமும் இன்றி உடனடியாக மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன.
    • தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர்.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றதால், அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகள் வருகை குறைவாக இருந்தது.

    திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பனியன் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களில் லட்சக்கணக்கான வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு கடந்த வாரம் சென்றனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகரம் தொழிலாளர்கள் இன்றி காணப்படுகிறது. மேலும், வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் திருப்பூரில் ஹோட்டல்கள் நடத்திய வருகிறார்கள். தற்போது அவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால், திருப்பூர் பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

    இதுபோல் வெளி மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் பலர் திருப்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தொழிலாளர்கள் திருப்பூருக்கு திரும்பாத நிலையில் அவர்கள் குழந்தைகள் பல பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக திருப்பூர் மாநகரில் உள்ள பல பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகை குறைந்தது. பள்ளி வகுப்பறைகள் பலவும், மாணவ- மாணவிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    • ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும்.
    • நம் வாழ்வில் செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும்.

    தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்த மக்கள், பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்து வருகின்றனர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதேபோல் வட மாநிலங்களிலும் நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

    இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களையத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி நாளில் மக்கள் தங்கள் வீடுகளில் லட்சுமி தேவியை வணங்கி, ஒவ்வொருவரும் மகிழ்ச்சியுடனும், வளமாகவும் வாழ பிரார்த்தனை செய்கிறார்கள்.

    தீபாவளி பண்டிகை பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் நல்லிணக்க உணர்வை மேலும் வலுப்படுத்த ஒரு சந்தர்ப்பமாகும். தீபாவளியின் ஒளி நம் அகம் மற்றும் புற அறியாமை இருளை அகற்றும் ஞானத்தைக் குறிக்கிறது. ஒரு தீபத்தைப் போல நம் வாழ்வில் ஆற்றலும் ஒளியும் பரவட்டும். பின்தங்கியவர்களுக்கு உதவும் மனப்பான்மை மக்களின் மனதில் ஆழமாக வளரட்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 


    குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

    தீபத் திருநாளில் நம் நாட்டு மக்களுக்கும், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும் எனது அன்பான, மகிழ்ச்சிகரமான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரம்பரிய உற்சாகத்துடனும், சந்தோஷத்துடனும் கொண்டாடப்படும் தீபாவளி, பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்குப் பிறகு, சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோருடன் ஸ்ரீ ராமர் அயோத்திக்குத் திரும்பியதைக் குறிக்கிறது.

    மேலும் ராம ராஜ்ஜியத்தின் வருகையையும் தீபாவளி குறிக்கிறது.  தீபாவளி என்பது செல்வச் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவி மற்றும் ஞானம், நல்லதொரு எதிர்காலத்தை அருளும் அதிர்ஷ்டத்தின் கடவுளான விநாயகப் பெருமானை வழிபடுவதற்கான சந்தர்ப்பமாகும். இந்த தீபத் திருநாள் நம் வாழ்வில் ஞானம், இறையச்சம், செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டு வரட்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை 25 ந் தேதி சுழற்சி முறையில் பணியில் இருக்கும்.
    • மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தீபாவளி பண்டிகையின் போது அரசு மருத்துவ கல்லூரி, அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தீக்காயத்துக்கு சிகிச்சையளிக்க தேவையான ஏற்பாடுகளுடன் தயாராக இருக்க வேண்டும் என பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருத்துவத்துறை இயக்குனர் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு டாக்டர், 3 செவிலியர் அடங்கிய பிரத்யேக குழு தீபாவளிக்கு முதல் நாள் துவங்கி பண்டிகை முடியும் வரை (25 ந் தேதி) சுழற்சி முறையில் பணியில் இருக்கும். இதே போல் தாராபுரம், பல்லடம், காங்கயம், உடுமலை, அவிநாசி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    காங்கயத்தில் உள்ள மாவட்ட மருந்துக்கிடங்கில் இருந்து, தீக்காய சிகிச்சைக்கான மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில், பிளாஸ்டிக் சர்ஜரி, அறுவை சிகிச்சை உட்பட தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் வைக்க தேவையான பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாவட்டத்தில் 3 நாட்கள் நடக்கும் தீக்காயம் தொடர்பான விபத்து, சிகிச்சைகளை மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் கண்காணித்து அறிக்கை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதேப்போல் தீ விபத்து ஏற்பட்டால் உடனே அணைக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பசுமை பாதுகாப்பு தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
    • சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் தீபாவளி விழாவினை கண்டுகளித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பசுமை பாதுகாப்பு தீபாவளி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    தலைமை விருந்தினராக புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

    சிறப்பு விருந்தினராக பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் தீபாவளி விழாவினை கண்டுகளித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழைலையர்கள் அனைவரும் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி தீபாவளி நல்வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலை பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

    • பொருட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரபாண்டி கிராமத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேசன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் விநியோகம் சீரான முறையில் நடைபெறுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் மோகன்ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது ரேசன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை விவரம், நடப்பு மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் போன்ற பொருட்களின் எடை விவரம், விற்பனை முனையம் சாதனத்தில் ஏற்றப்பட்டுள்ள பொருட் களின் விவரம், தற்பொழுது வரை வழங்கப் பட்டுள்ள பொருட்களின் விவரம்.

    நியாய விலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்டவை தரமாக உள்ளதா எனவும், சரியான எடை அளவில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொரு ட்கள் வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கண்காணி த்தார். ஆய்வின்போது, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர் ரவிச்சந்திரன், வருவாய் வட்டாட்சியர்ஆதி சக்தி குமரி மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாம்ராஜ், சீனுவாசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

    • முன்பதிவு இல்லா பெட்டிகளில் ஏற ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
    • அரசு பேருந்துகள் மூலம் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக தகவல்.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் வசிக்கும் பிற மாவட்டங்களை சேர்ந்த மக்கள் நேற்று மாலை முதல் ரெயில்கள், ஆம்னி மற்றும் அரசு பேருந்துகள், கார்கள், விமானங்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

    இன்று மாலை நிலவரப்படி, சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 772 அரசு பஸ்களில் 2.43 லட்சம் பேர் பயணம் செய்ததாக போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. இதுதவிர ரெயில்கள், கார்கள் உள்பட பிற வழி போக்குவரத்து மூலம் ஒட்டுமொத்தமாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது. 


    இந்நிலையில் சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரெயில் நிலையங்களில் இருந்து ரெயில்கள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டனர். இதனால் முன்பதிவு இல்லா பெட்டிகளில் ஏற ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து கூட்ட நெரிசலை சீர்செய்யும் பணியில் ரெயில்வே போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார்.
    • இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    கள்ளக்குறிச்சி

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள சோழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 42). இவர் சேலம் மாவட்டம் சின்ன திருப்பதியில் உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கிஷோர் (13) என்ற மகன் உள்ளார். ஆசிரியர் சுரேஷ், பள்ளி இயங்கும் இடத்திற்கு அருகே வாடகை வீடு எடுத்து தங்கி வருகிறார். விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு தன் குடும்பத்தை பார்க்க சென்று வருவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தீபாவளியை தனது குடும்பத்துடன் கழிக்க சொந்த ஊரான சோழம் பட்டு கிராமத்திற்கு நேற்று மாலை சேலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்தார்.

    வாசுதேவனூர் அருகே உள்ள பைபாஸ் சாலையை கடக்கும் போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஆசிரியர் சுரேசை அக்கம்பக்கம் உள்ளவர்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டார் என தெரிவித்துள்ளார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

    • நெல்லை மாநகர பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட் கிழமை) கொண்டாடப் படுகிறது.

    அலைமோதிய கூட்டம்

    பண்டிகைக்கு நாளை ஒரு நாள் மட்டுமே இருப்பதால் விற்பனை களை கட்டி உள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் கடைகளில் குவியத்தொடங்கினர்.

    நெல்லை மாநகர பகுதியில் டவுன், வண்ணார் பேட்டை, பாளை, சமாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. நேற்று மாலை பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை முதல் வெயில் அடித்து வந்ததால் இன்று அனைத்து பகுதிகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இதேபோல் பட்டாசு கடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், இனிப்பு கார வகைகள், தீபாளி பலகார கடைகளில் பொதுமக்கள் திரண்டனர்.

    கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்களில் ஈடுபடு பர்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் டவுன், வண்ணார்பேட்டை போன்ற முக்கிய இடங்களில் உயர்கோபுரம் அமைத்தும் , சி.சி.டி.வி. காமிராக்கள் மூலமும் கண்காணித்து வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை திருச்சியில் இருந்து நெல்லை வந்த இன்டர்சிட்டி ரெயிலில் ஏராளமான பயணிகள் வந்தனர்.

    அவர்களுக்கு நெல்லை ரெயில்வே துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ரெயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நெல்லை வந்த அனைத்து ரெயில்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை சிறப்பு பஸ்கள் மூலம் ஏராளமானோர்கள் நெல்லை வந்தனர். பின்னர் அவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி சென்றனர்.

    அருகில் உள்ள மாவட்டங்களான தென்காசி, தூத்துக்குடிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. சிலர் கார்கள் மூலமாகவும், ஆட்டோக்கள் மூலமாகவும் புறப்பட்டு சென்றனர்.

    இதனால் வண்ணார்பேட்டை மற்றும் சந்திப்பு மேம்பாலங்கள், டவுன் எஸ்.என்.ஹைரோடு, ரதவீதிகள், மார்க்கெட் பகுதிகள், சமாதானபுரம் உள்ளிட்ட பெரும்பாலன பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதேபோல் வள்ளியூர், அம்பை, களக்காடு, திசையன்விளை, ராதாபுரம் உள்ளிட்ட நெல்லை மாவட்ட பகுதிகளிலும் ஏரல், உடன்குடி, திருச்செந்தூர், தூத்துக்குடி, ஸ்ரீவை குண்டம், கோவில்பட்டி, விளாத்தி குளம், ஆலங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், சங்கரன்கோவில் உள்ளிட்ட தூத்துக்குடி, தென்காசி மாவட்ட பகுதிகளிலும் பொருட்களை வாங்க பொதுமக்கள் திரண்டனர்.

    இதனால் இன்று அனைத்து பகுதிகளும் களை கட்டி காணப்பட்டது.

    ×