search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "discount"

    விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று கலெக்டர்களுக்கு குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். #kumarasamy
    முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர்களுக்கு குமாரசாமி பிறப்பித்த உத்தரவுகள் குறித்த விவரம் வருமாறு:-

    விவசாய கடன் தள்ளுபடி குறித்து தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. அதனால் விவசாயிகள் இடையே எழுந்துள்ள சந்தேகங்களை போக்க நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய கடன் தள்ளுபடி திட்ட பணிகளை வருகிற 5-ந் தேதி முதல் தொடங்க வேண்டும்.

    33 வங்கிகளிடம் இருந்து சுமார் 20 லட்சம் விவசாயிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தள்ளுபடிக்கு என்று தனியாக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் பணியை சேடம் மற்றும் தொட்டபள்ளாபுரா ஆகிய தாலுகாக்களில் சோதனை அடிப்படையில் தொடங்கி இருக்கிறோம். இதுவரை 4,000 விவசாயிகள் தாமாக முன்வந்து தங்களின் விவசாய கடன் பற்றிய தகவல்களை கொடுத்துள்ளனர்.

    தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 தாலுகாக்கள் வறட்சி பகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை கண்காணிக்க தாலுகாக்களுக்கு தலா ஒரு கண்காணிப்பு அதிகாரி வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    கோசாலை திறக்க வேண்டிய அவசியம் எழுந்தால், அதற்கு சரியான இடத்தை மாவட்ட கலெக்டர்கள் தேர்வு செய்ய வேண்டும். பசுமை தீவனத்தை வளர்க்கும் வகையில் விவசாயிகளுக்கு அதற்கான விதைகளை வழங்க கால்நடைத்துறைக்கு ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    வறட்சி பாதித்த பகுதிகளில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குடிநீர் விநியோக பணிகளுக்கு 30 மாவட்டங்களுக்கு தலா ரூ.1 கோடி வீதம் ரூ.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வெங்காய விலை குறைந்துவிட்டது. இதனால் வெங்காயத்திற்கு ஆதரவு விலை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளுக்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்வதில் காலதாமதம் ஆவதாக புகார்கள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பள்ளி கட்டிடங்களை சீரமைக்க ரூ.950 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டத்தின் மூலம் கூடுதலாக ரூ.450 கோடி ஒதுக்கி இருக்கறோம். இதை பயன்படுத்தி பள்ளி கட்டிடங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 மாவட்டங்களில் ெதாழிற்பேட்டைகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்த கலெக்டர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். #kumarasamy
    இலவச காலணி டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐக்கோர்ட் உத்தரவிட்டது. #ChennaiHighCourt
    சென்னை:

    2018-19-ம் கல்வியாண்டுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தின் கீழ் 59.09 லட்சம் ஜோடி காலணி கொள்முதல் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு அறிவித்தது.

    ரூ.114 கோடி மதிப்பிலான இந்த டெண்டரை எதிர்த்து உத்தரபிரதேச மாநிலம் காஸியாபத்தில் உள்ள ஷாம் சன் பாலிமர்ஸ் நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    விதிமுறைகளை மீறி இந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த டெண்டர் அறிவிப்பில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடப்பட்டது.

    இந்த வழக்கை நீதிபதி மகாதேவன் விசாரித்தார். வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    காலணி தொடர்பான டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ChennaiHighCourt
    பண்டிகை காலத்தை முன்னிட்டு விமான கட்டணங்களில் 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகையை ஏர் ஏசியா நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. #AirAsia #AirAsia70pcdiscount
    ஐதராபாத்:

    ஏர் ஏசியா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அக்டோபர் 15 முதல் 28 வரை முன்பதிவு செய்து அக்டோபர் 15 முதல் 30-6-2019 வரை பயணம் செய்ய விரும்புவர்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உள்நாட்டு வழித்தடங்களான பெங்களூரு, புதுடெல்லி, கொல்கத்தா, கொச்சி, கோவா, ஜெய்ப்பூர், சண்டிகர், புனே, கவுகாத்தி, இம்பால், விசாகப்பட்டினம், ஐதராபாத், ஸ்ரீநகர், பக்டோக்ரா, ராஞ்சி, புவனேஸ்வர், நாக்பூர், இந்தூர், சூரத், அம்ரிஸ்டர் மற்றும் சென்னை ஆகிய 21 முக்கிய நகரங்களுக்கான பயணச்சீட்டுகளுக்கு இந்த சலுகை பொருந்தும்.

    மேலும், சர்வதேச வழித்தடங்களான கோலாலம்பூர், பாங்காக், கிராபி, சிட்னி, ஆக்லாந்து, சிங்கப்பூர், பாலி உள்ளிட்ட பிற நகரங்களுக்கான விமான பயணத்துக்கும் இந்த சலுகையை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சிறப்பு கட்டணச் சலுகையை பெறுவதற்கான முன்பதிவுகள் அனைத்தும் ஏர் ஏசியா டாட்காம் மற்றும் ஏர் ஏசியா மொபைல் ஆப் (airasia.com and the AirAsia mobile app) மூலமாக செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. #AirAsia #AirAsia70pcdiscount
    இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஹூன்டாய் நிறுவன வாகனங்களுக்கு அந்நிறுவனம் சிறப்பு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. #Hyundai #offer



    புதிய பொருள் வாங்கும் பலரும் பண்டிகை காலத்தில் தான் அவற்றை நிறைவேற்றிக் கொள்வர். பொதுவாக பண்டிகை காலங்களில் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்படும். 

    இந்தியாவில் பண்டிகை காலங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், பலர் இந்த காலக்கட்டத்தில் வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டுவர். இந்த பண்டிகை காலத்தில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது வாகனங்களுக்கு அதிகளவு சலுகைகளை வழங்குகின்றன.

    அந்த வகையில் ஹூன்டாய் தனது கார்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகிறது. பண்டிகை கால சலுகைகள் அக்டோபர் 31, 2018 வரை வழங்கப்படுகிறது.



    ஹூன்டாய் இயான் மாடலுக்கு ரூ.60,000 வரை சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் ரூ.45,000 தள்ளுபடி, ரூ.10,000 எக்சேன்ஜ் சலுகை மற்றும் ரூ.5,000 வரை கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹூன்டாய் இயான் போன்று ஐ20, ஐ20 ஆக்டிவ், வெர்னா, , கிரான்ட் i10, எக்ஸ்-சென்ட், எலான்ட்ரா மற்றும் டக்சன் உள்ளிட்ட வாகனங்களுக்கும் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகின்றன.

    இவற்றில் ஹூன்டாய் எலான்ட்ரா மற்றும் டக்சன் வாகனங்களுக்கு அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த மாடல்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கான இன்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

    சிறப்பு தள்ளுபடி மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் எக்சேன்ஜ் சலுகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
    ஓட்டலுக்கு உணவு பொருட்களை வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #Hotels
    சென்னை:

    தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பைகளுக்கு வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதையடுத்து பிளாஸ்டிக் பைகள், கப் போன்றவற்றின் பயன்பாட்டை பொதுமக்கள் தவிர்க்கவும், வியாபாரிகள் விற்கவும் வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் ஓட்டலில் உணவு வாங்க பாத்திரத்துடன் வந்தால் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தினர் தீர்மானமும் நிறைவேற்றி உள்ளனர். இதுகுறித்து சென்னை ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.ரவி கூறியதாவது:-

    ஓட்டல்களில் உணவு பார்சலுக்காக 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை செலவு செய்கிறோம். வாடிக்கையாளர்கள் பார்சலுக்கு பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பாத்திரங்களை கொண்டு வந்தால் பில் தொகையில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்க தயாராக இருக்கிறோம். இதுபற்றி அறிவிப்பு பலகைகளை வைக்குமாறு சென்னை ஓட்டல்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக உணவுகளை பார்சல் செய்ய மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள். அலுமினிய படலம் கொண்ட காகிதங்களை பயன்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் வாழை இலை மற்றும் தையல் இலைகளை சில ஓட்டல்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளன. பிளாஸ்டிக்குகளுக்கு பதிலாக காட்போர்டு அட்டைகளை பயன்படுத்தவும் யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Hotels #PlasticBan
    ×