search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled people"

    • மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப் பம் பெறும் முகாம் நடை பெற்றது.
    • இந்த முகாமை ஏற்காடு மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் தனித்துவ அடையாள அட்டைக்கான விண்ணப் பம் பெறும் முகாம் நடை பெற்றது. இந்த முகாமை ஏற்காடு மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன் ஏற்பாடு செய்திருந்தார்.

    இந்த முகாமில் ஏற்காடு மலை கிராமங்களை சேர்ந்த 65 மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை கொடுத்தனர். அதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் அந்த விண்ணப்பங்களின் ஆவணங்களை முகாமிலேயே சரிபார்த்து அடையாள அட்டை வழங்குவதற்கான ஒப்புதலும் வழங்கினார்.

    மேலும் முகாமில் விண்ணப்பம் கொடுத்த அனைவருக்கும் சில நாட்களில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

    • திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி நடைபெறுகிறது.
    • ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான இறகுபந்து போட்டி இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.

    இதில் திண்டுக்கல், கோவை, மதுரை உள்பட 27 மாவட்டங்களில் இருந்து 90 பேர் கலந்து கொண்டுள்ளனர். உடற்தகுதி அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒற்றையர், இரட்டையர், களப்பு இரட்டையர் ஆகிய 3 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

    ஒவ்ெவாரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ச

    க்கர நாற்காலியில் அமர்ந்தபடி இறகுபந்து போட்டியில் விளையாடிய வீரர்களுக்கு கூடியிருந்த நபர்கள் கரவொலி எழுப்பி வாழ்த்துகளை தெரிவித்தனர். வெற்றிபெற்றவர்களுக்கு நாளை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.
    • முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வருகிற 30-ந் தேதி முதல் தொடங்குகிறது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணங்கள் பெறுவதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. வருகிற 30-ந் தேதி உடுமலை ஜி.விசாலாட்சி கலை அறிவியல் கல்லூரியிலும், அடுத்த மாதம் 5-ந் தேதி ஊத்துக்குளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 6-ந் தேதி பல்லடம் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், 12-ந் தேதி பொங்கலூர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும் 13-ந் தேதி மூலனூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடக்கிறது.

    இதுபோல் 18-ந்தேதி திருப்பூர் எல்.ஆர்.ஜி. கலை அறிவியல் கல்லூரியிலும், 26-ந் தேதி வெள்ளகோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 27-ந் தேதி தாராபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், செப்டம்பர் மாதம் 2-ந் தேதி குண்டடம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 3-ந் தேதி பெதப்பம்பட்டி என்.வி.பாலிடெக்னிக் கல்லூரியிலும், 9-ந் தேதி மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 17-ந் தேதி அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 24-ந் தேதி காங்கயம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் தேசிய அடையாள அட்டை வழங்குதல், நலவாரியத்தில் பதிவு செய்தல், தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்குவதற்கு பதிவு செய்தல் பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்பு உதவித்தொகை, வங்கிக்கடன் மானியம், உதவி உபகரணங்கள், வருவாய்த்துறையின் மூலம் இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, புதுப்பித்தல், தனியார் துறை வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்படும். மாவட்ட தொழில் மையம் மூலம் கிடைக்கும் உதவிகள் உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் இந்த முகாமில் வழங்கப்படும்.

    முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவம் வாய்ந்த ஸ்மார்ட் கார்டு, அடையாள அட்டை, ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் 5 புகைப்படங்களை எடுத்து வர வேண்டும் .இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார்.
    • மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது.

    உடுமலை:

    உடுமலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான திருப்பூர் மாவட்ட மாநாடு நடந்தது.மாவட்டத்தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் குருசாமி கொடியேற்றினார். மாநிலச்செயலாளர் வில்சன் மாநாட்டை துவக்கி வைத்தார்.

    தீர்மானங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் பேசினார்.இதில் சமூக நலத்துறை சார்பில் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை 1,000 ரூபாயிலிருந்து 3 ஆயிரமாகவும், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, 2 ஆயிரத்திலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும், சிறு, குறு தொழில் வணிக கடன் அலைக்கழிக்காமல் எளிதாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவும், 100 நாள் வேலை உறுதித்திட்டத்தில் பாரபட்சமின்றி வேலை வழங்கவும், சமையல் கியாஸ் இணைப்பு உள்ளவர்களுக்கு, மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க மறுக்கக்கூடாது.மருத்துவச்சான்று வழங்குவதை எளிமைப்படுத்தவும், செயற்கை அவையங்கள் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம்.
    • தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் வருகிற 22-ந் தேதி மதியம் 12 மணிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மட்டும் தங்களுடைய கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
    • இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமை கலெக்டர் வினீத் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ், ரெயில் பாஸ் வழங்குவதில் தாமதம் செய்யக்கூடாது. விரைந்து வழங்க வேண்டும். ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனை செய்ய அலைக்கழிக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

    மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாமுக்கு வரும்போது, மற்ற தகவல்களை அவர்கள் பெறும் வகையில் தகவல் மையத்தை அமைத்தால் விண்ணப்பிக்கும் முறை, மனு எழுதுவது, மற்ற துறைகளுக்கு செல்வது போன்ற விவரங்களை கேட்டு அறிய முடியும். அதுபோல் மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பான மனுக்களையும் இந்த முகாமில் பெற்றுக்கொண்டால் அவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய நிலை இருக்காது. இதனால் கோரிக்கை மனுக்களையும் பெற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    • ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • கடன் விண்ணப்பங்களை கே.சிகருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கிளை மேலாளர் வேலுமணி வரவேற்றார்.

    கடன் விண்ணப்பங்களை  கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மேலாளர்கள் லோகமுத்து, தர்மலிங்கம், கவுந்தி டெக்ஸ் மேலாளர் தண்டபாணி, டாக்டர் மனோகரன், ஜான், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஷ், ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.

    கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது

    திருச்சி :

    திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 2005 ஆம் ஆண்டு முதல் உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாத வாய்பேச இயலாதோர், பார்வையற்றோர், அறிவுசார் குறைபாடுடையோர், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோர், மனநலம் குன்றியோர், புற உலகு சிந்தனையற்றோர் மற்றும் பல்வகை மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    அவ்வாறு அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை பெற்றிட தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையின் அனைத்து பக்கங்களின் நகல்கள், ஆதார் அட்டை, தற்போதைய புகைப்படம், கையொப்பம் (அ) கைவிரல் ரேகை ஆகியவற்றின் ஒளி நகலுடன் இ-சேவை மையங்களில் இதுவரை 47,159 நபர்கள் விண்ணப்பித்து அதில் சான்றுகள் சரியாக உள்ள 37,541 நபர்களுக்கு நேரடியாகவும், அஞ்சல் மூலமாகவும் அவரவர் முகவரிக்கு தனித்துவ அடையாள அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மீதம் 896 தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பம் குறைபாடாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த விண்ணப்பதாரர்கள் வருகிற ஜூலை 20-ந்தேதிக்குள் நேரடியாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வந்து குறைபாடாக விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்களை சரிசெய்து தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டையை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுநாள் வரை விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    எனவே தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற்றிட ஏற்கனவே விண்ணப்பித்து இதுவரை பெறப்படாத மாற்றுத்திறனாளிகளும், புதியதாக தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளும் உடனடியாக தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கலர் நகல், ஆதார் அட்டையின் கலர் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கலர்-1 ஆகிய சான்றுகளுடன் திருச்சி கண்டோன்மென்ட், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    அல்லது நேரில் மாற்றுத்திறனாளிகள் வராமல் அவருடைய குடும்பத்தில் யாராவது ஒருவர் ஆவணங்களுடன் வந்து பயனடையுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590 ல் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.
    • 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்கள் வாரியாக நடைபெற உள்ளது.

    பெரம்பலூர் வட்டத்தில் வேலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வருகிற 15-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், பொம்மனப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 19-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கவுள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 20-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், கோனேரிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21.07.2022 காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    வேப்பந்தட்டை வட்டத்தில் தேவையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 22-ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணிவரையிலும், கை.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 26-தேதி காலை 9.00மணி முதல் 2.00 மணி வரையிலும், பசும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 27-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 28-ந் தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், வெண்பாவூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29- ந்தேதி காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், அகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2.08.2022 அன்று காலை 9.00 மணி முதல் 2.00 மணி வரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    தமிழக வாக்குச்சாவடிகளில் முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதற்காக 67 ஆயிரத்து 720 தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    சென்னை:

    தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

    தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர், ஆசிரியர்கள் 3 லட்சத்து 27 ஆயிரத்து 903 பேருக்கு தபால் ஓட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவர்களில் 47 ஆயிரத்து 610 பேரிடம் இருந்து வாக்களிக்கப்பட்ட தபால் ஓட்டுகள் பெறப்பட்டுள்ளன.

    தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் அல்லாதவர்களுக்கும் தேர்தல் பணி சான்றிதழ் வழங்கப்படுகின்றன. அவர்களும் வாக்குப்பதிவு நாளன்று சொந்த தொகுதிக்குள் வேறு வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க முடியும். அந்த வகையில் மொத்தம் 2 லட்சத்து 38 ஆயிரத்து 51 தேர்தல் பணி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. ராணுவ வீரர்களுக்கான சர்வீஸ் ஓட்டுகள் 67 ஆயிரம் உள்ளன. அவர்களுக்கு சர்வீஸ் ஓட்டுகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டுவிட்டன.



    தேர்தல் பணியில் இருக்கும்போது ஊழியர் யாருக்காவது மரணம் நேரிட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். தேர்தல் பணி காலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடந்து கொலை செய்யப்பட்டுவிட்டால், அவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்கப்படும். இந்த தொகையை மத்திய அரசு அளிக்கும். போலீஸ் ஓட்டுகள் (விண்ணப்பித்தவர்கள்) 24 ஆயிரத்து 971 உள்ளன. அவர்களில் 10 ஆயிரத்து 657 பேர் தேர்தல் பணி சான்றிதழ் பெற்றுள்ளனர்.

    தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதி மீறல்களுக்காக 4 ஆயிரத்து 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    வேலூரில் நடந்த வருமான வரித்துறையின் சோதனை குறித்து அவர்களின் அறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. அனேகமாக அதை அவர்கள் அளித்திருக்க வேண்டும். அதுபோல ஆணையம் கோரியபடி போலீசில் அறிக்கையும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். நான் எந்த அறிக்கையையும் இதுவரை சமர்ப்பிக்கவில்லை.

    அது மிகுந்த ரகசியத்துக்கு உட்பட்ட அறிக்கை என்பதால் அதுபற்றி வெளிப்படையாக பேசிவிட முடியாது. அந்த அறிக்கையில் உள்ள கருத்துகளின்படி தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும்.

    ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. முன்வைத்துள்ளது. அதுபற்றி தேர்தல் ஆணையத்துடன் பேசிக்கொண்டிருக்கிறோம்.

    இந்த தேர்தலில் மொத்தமுள்ள 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடிகளில், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு சக்கர நாற்காலி வைக்கப்பட்டு இருக்கும். அதை இயக்குவதற்கு ரூ.250 சம்பளத்தில் தன்னார்வலர் ஒருவர் நியமிக்கப்பட்டு இருப்பார். எனவே மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் தேவைப்பட்டால் அதை பயன்படுத்திக்கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #SatyabrataSahoo
    ×