என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம்
- மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
- இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
பெருந்துறை:
பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.
முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story






