search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "disabled people"

    • 29 மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    • வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

    திருப்பூர் :

    திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிதிட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கினார். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார்.

    கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது:- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துத்துறை அலுவலர்களும்ஒருங்கிணைந்து பொது மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் வசதி,சாலைவசதி, தெரு விளக்கு, மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படைதேவைகளையும் உடனுக்குடன் நிறைவேற்றிட வேண்டும். மேலும், தமிழகஅரசின் அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் அனைத்து தரப்பு மக்களும்பயன்பெறும் வகையில் தங்களது பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டுநமது மாவட்டம் முன்னோடி மாவட்டமாக திகழ அனைவரும் ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்றார்.

    முன்னதாக மாற்றுத்திறனாளிநலத்துறையின் சார்பில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83,500 வீதம்ரூ.24.21 லட்சம் மதிப்பீட்டில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட விலையில்லாபெட்ரோல் ஸ்கூட்டர்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.

    இந்த ஆய்வுக்கூட்டத்தில், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன் மற்றும்நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரட்சி ஒன்றியங்களை சார்ந்த அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

    • அரசு திட்டங்களும் எளிதாக மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.
    • ரைட்ஸ் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும்.

    தாராபுரம் :

    மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கி நிதியுதவியுடன் ரைட்ஸ் திட்டம் துவங்கப்படும் என 2021 பட்ஜெட்டில் நிதியமைச்சர் தியாகராஜன் அறிவித்தார். நோய் தடுப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு சேவை, வேலைவாய்ப்பு உள்பட அனைத்து அரசு திட்டங்களும் எளிதாக மாற்றுத்திறனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கம்.இதற்காக ஒன்றிய அளவிலான சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.திட்டத்துக்காக உயர்மட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் திட்டம் முழு செயல்வடிவம் பெறாமலேயே உள்ளது.

    வருகிற 17ந் தேதி சட்டசபையில் மாற்றுத்திறனாளிகள் துறைக்கான மானிய கோரிக்கையில் ரைட்ஸ் திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்கப்படவேண்டும் என்கின்றனர் திருப்பூர் மாற்றுத்திறனாளிகள்.

    இது குறித்து அவர்கள் கூறுகையில், அடையாள அட்டை பெறுவது உள்பட எந்த ஒரு அரசு திட்டங்களை பெறுவதற்கும் மாவட்ட அளவிலான அலுவலகத்தையே நாடவேண்டியுள்ளது. ரைட்ஸ் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும். ஒன்றிய அளவில் மையங்கள் அமைவதால் அனைத்து அரசு திட்டங்களையும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் அருகாமையிலேயே எளிதில் பெறமுடியும் என்றனர்.

    • சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு செல்ல லிப்ட் வசதி அமைத்து தரப்படும்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.

    முன்னதாக கோவில் செயல் அலுவலர் உமாதேவி வரவேற்றார்.

    கோவிலில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்ய லிப்ட் வசதி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கோவில் பிரசாத ஸ்டாலுக்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து மேலும் உயர்தரத்துடன் வழங்க அறிவுரை வழங்கினார்.

    கோவிலில் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற செங்கல் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது இணை ஆணையர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து விண்ணப்பம் அளித்தனர்.

     திருப்பூர் :

    காதுகேட்காத, வாய்பேசாத மற்றும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு சார்பில் ஸ்மார்ட் போன் வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நடப்பாண்டு முதல்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் 86 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளது.

    இரண்டாம் கட்டமாக ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான பயனாளிகள் தேர்வு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் தலைமை வகித்தார். பார்வையற்றோர் சங்க பிரதிநிதி சக்கரையப்பன், காதுகேளாதோர் சங்க பிரதிநிதி ரமேஷ் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த காது கேளாத, வாய் பேச முடியாத மற்றும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

    மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களை இணைத்து, ஸ்மார்ட் போனுக்கான விண்ணப்பம் அளித்தனர். மொத்தம் 100 பேர் ஸ்மார்ட் போன் கேட்டு விண்ணப்பித்தனர்.

    • மார்ச் 1 ந்தேதி முதல் மார்ச் 10 ந்தேதி வரை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • ஊராட்சி செயலர் எ.மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சே.என். சாந்தமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 1 ந்தேதி முதல் மார்ச் 10 ந்தேதி வரை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அவினாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி மன்ற அலு வலகத்தில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கே.சி வரதராஜன் தலைமையில் மூன்று மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் அடையாள அட்டை வழங்க ப்பட்டது. உடன் ஊராட்சி செயலர் எ.மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சே.என். சாந்தமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.
    • 10 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.1,35,490 மதிப்பிலான நவீன செயலிகளுடன் கூடிய கைபேசிகளை வழங்கினார்.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்று த்திறனாளிகள் உதவி த்தொகை, மாற்றுத்திற னாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்வி க்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் மற்றும் காவல்துறை தொடர்பான மனுக்கள் என 273 பல்வேறு கோரிக்கை மனுக்களை பொது மக்களிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.

    மேலும், தகுதி வாய்ந்த மனுக்கள் மீது எந்தவித காலதாமதமின்றி உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலெக்டர் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும், முதல்-அமைச்சரின் முகவரி திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களின் நிலை தொடர்பாகவும், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு, உரிய நட வடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு தலா ரூ.13,549 வீதம் ரூ.1,35,490 மதிப்பிலான நவீன செயலிகளுடன் கூடிய கைபேசிகளையும், ஆணை மலையான் பட்டியில் வசித்து வந்த 108 ஆம்புலன்ஸ் டிரைவர் உயிரிழந்ததையொட்டி அவரது குடும்பத்தாருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ.5 லட்சத்திற்கான காசோலையினையும் கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தனித்துணை ஆட்சியர் சாந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டினள் அனைத்து வயது பிரிவினருக்கும் பாளை அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
    • மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    மாற்றுத் திறனாளி களுக்கான 2022-23-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி கள் அனைத்து வயது பிரிவினருக்கும் பாளை அண்ணா விளை யாட்டரங்கில் நடைபெற்றது. இதனை நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தொடங்கி வைத்தார். கை, கால் ஊனமுற்றோர் பிரிவினருக்கு 50 மீட்டர் ஓட்டம் மற்றும் இறகுபந்து விளையாட்டு, காது கேளாதோருக்கான 100 மீட்டர் ஓட்டம், கபாடி போட்டிகள், மனவளர்ச்சி குன்றியோர்களுக்கு 100 மீட்டர் ஓட்ட பந்தயம் மற்றும் எறிபந்து போட்டிகள், பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் மற்றும் சிறப்பு கையுந்துபந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டியில் முதல் இடம் பிடிப்பவருக்கு ரூ.3 ஆயிரமும், 2-வது பரிசு பெறுபவரக்கு ரூ.2 ஆயிரம், மற்றும் 3-வது பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். மாவட்டத்தில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். மாநில அளவிலான போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

    மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ள திமுக அரசின் மனச்சான்றற்ற செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

    மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்குப் பலமுறை கோரிக்கை வைத்தும், வீதியில் இறங்கி போராடியும் கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போலத் தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றவில்லை என்பது கொடுங்கோன்மையாகும்.

    ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..

    * அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    * அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * அனைத்து மாற்றுத்திறனாளிகளின் குடும்ப அட்டையையும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான குடும்ப அட்டையாக மாற்றித் தரவேண்டும்.

    * பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் அளிக்கும் நரம்பியல் மருத்துவர்கள் பற்றாக்குறையைப் போக்கி, அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் நரம்பியல் மருத்துவர்கள் உறுதியாகப் பணியமர்த்தப்பட வேண்டும்

    * மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழ்நாடு முழுவதும் சுழற்சி முறையில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்துவதோடு, அம்மருத்துவ முகாம்களிலேயே அவர்களுக்கான பேருந்து மற்றும் ரயில் பயண, கட்டண சலுகை அட்டையைப் புதுப்பிக்கும் வசதியை செய்துதர வேண்டும்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான மின்கல சக்கர நாற்காலிகளைப் பழுதுபார்க்கும் சேவை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

    * உள்ளாட்சித் தேர்தல்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    * அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் மற்றும் கழிவறை வசதிகளை உடனடியாக அமைத்துதர வேண்டும்.

    அடிப்படை உரிமைகளான மேற்கண்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

    • நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
    • வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது, ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    எனவே தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டத்தில் வசிக்கும் ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.
    • மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஆதார் எண் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலம் மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெறும் அனைத்து பயனாளிகளும் ஆதார் எண் விவரத்தை சமர்பித்து இணைக்கப்படவேண்டும்.

    திருப்பூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வரும் மனவளர்ச்சி குன்றியோர், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டு வடம், பார்க்கின்சன் மற்றும் நாள்பட்ட நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோர் ஆகிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் நபர்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை அறை எண் 23, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், திருப்பூர் என்ற முகவரியில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மூலம் 27.12.2022 ந்தேதிக்குள் அரசு அலுவலக வேலை நாட்களில் சமர்பிக்க வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    • வாகன பதிவு, மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • சங்க நிர்வாகிகள் அம்சவேணி,ஜோதிமணி,முருகன்,சித்திரை செல்வி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம், பல்லடம் அரிமா சங்கம்,கோல்டன் வீல்ஸ், ஈரோடு பினீக்ஸ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, ஆகியோர் இணைந்து நடத்திய மாற்றுத் திறனாளிகள் வாகன பதிவு, மற்றும் ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலாதேவி, பல்லடம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, அரிமா சங்கத் தலைவர் நடராஜன், மற்றும் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் அம்சவேணி,ஜோதிமணி,முருகன்,சித்திரை செல்வி, ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நிர்மலா தேவி ,மாற்றுத்திறனாளிகளுக்கான வாகனம் பதிவு செய்தல், ஓட்டுநர் உரிமம் பெறுதல் குறித்து விளக்கி பேசினார்.பின்னர் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வு குறித்த வாகன ஊர்வலம் நடைபெற்றது.

    • மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா்.

    திருப்பூர்:

    உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி, திருப்பூா் ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது.விழாவுக்குத் தலைமை வகித்து மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைத்த பின்னா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். திருப்பூா் மாவட்டத்தில் அனைத்து அரசு துறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற வகையில் 13 வட்டங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. திருப்பூா் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலமாக 59 மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தற்போது வரையில் 31,142 மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தின்கீழ் 40 சதவீத மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், 75 சதவீதத்துக்கும் மேல் கை, கால் பாதிக்கப்பட்டோா் என மொத்தம் 5,670 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் மாதந்தோறும் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி, கல்லூரி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகள் 277 பேருக்கு நிகழாண்டு ரூ.8.37 லட்சம் வழங்கப்படவுள்ளது. அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

    இதைத் தொடா்ந்து மாற்றுத் திறனாளிகள் தின விழா விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினாா்.

    இந்த நிகழ்ச்சியில், மாற்றுதிறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    ×