search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றுத்திறனாளிகளுக்கு"

    • கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது.
    • கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான கடன் மேளாவானது கடந்த 19-ந்தேதி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கட்டுபாட்டிலுள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும், கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அதன் கிளைகளிலும் நடத்தப்பட்டது. இந்த கடன் மேளாவில் 87 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.55 லட்சம் வட்டியில்லா மாற்றுத்திறனாளி கடன் வழங்கப்பட்டது. மேலும் 282 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து ரூ.1.28 கோடி மதிப்பிலான கடன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சிவகாமி தெரிவித்தார்.

    திருநந்திக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் மாற்றுத்திறனாளி கடன் விண்ணப்பம் சங்கத்தின் செயலாட்சியர் லீலா கூட்டுறவு சார்பதிவாளரால் பெறப்பட்டது.

    • ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்–2ன் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 6-ந் தேதி நம்பியூர் தாலுகாவில் உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா திருவாச்சி அரசு உயர்நிலை பள்ளியிலும் 7-ந் தேதி நம்பியூர் தாலுகா எலத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி, பெருந்துறை தாலுகா திங்களூர் எம்.பி.டீ.அரசு மேல்நிலைப்ப ள்ளியிலும், வருகிற 9-ந் தேதி நம்பியூர் தாலுகா வேமாண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா விஜயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூ.டி.ஐ.டி.,) கட்டாயம் என்பதால், அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • கடன் விண்ணப்பங்களை கே.சிகருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கிளை மேலாளர் வேலுமணி வரவேற்றார்.

    கடன் விண்ணப்பங்களை  கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மேலாளர்கள் லோகமுத்து, தர்மலிங்கம், கவுந்தி டெக்ஸ் மேலாளர் தண்டபாணி, டாக்டர் மனோகரன், ஜான், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஷ், ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.

    கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

    மாற்றுத்திறனாளிகள் அனைத்து நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு அவசியம் என்பதினால் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் விரைவில் தேசிய அடையாள அட்டைநகல் (நீலநிறம்), ஆதார் நகல், புகைப்படம் -1.

    மேலும் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் எவரேனும் நேரில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலஅலுவலகத்தில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக் கொண்டுள்ளார்.

    ×