search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "57 locations"

    • ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்–2ன் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 6-ந் தேதி நம்பியூர் தாலுகாவில் உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா திருவாச்சி அரசு உயர்நிலை பள்ளியிலும் 7-ந் தேதி நம்பியூர் தாலுகா எலத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி, பெருந்துறை தாலுகா திங்களூர் எம்.பி.டீ.அரசு மேல்நிலைப்ப ள்ளியிலும், வருகிற 9-ந் தேதி நம்பியூர் தாலுகா வேமாண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா விஜயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூ.டி.ஐ.டி.,) கட்டாயம் என்பதால், அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×