search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "dharmendra pradhan"

    • கொரோனா தொற்றுக்குப் பிந்தைய கால பாதிப்புகளை போக்க யோகா பேருதவியாக இருந்தது.
    • 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

    மத்திய கல்வி அமைச்சகமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலும் இணைந்து இன்று முதல்  20-ந் தேதி வரை தேசிய யோகா ஒலிம்பியாட்-ஐ நடத்துகின்றன. இந்த ஆண்டு 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 600 மாணவர்கள் இதில் கலந்து கொள்கிறாரகள்.

    இந்நிலையில்,மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தேசிய யோகா ஒலிம்பியாட்- 2022 மற்றும் வினாடி வினா போட்டியைத் தொடங்கி வைத்தார். மத்திய கல்வி இணை மந்திரி சுபாஷ் சர்க்காரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    நிகழ்ச்சியில் பேசிய மந்திரி பிரதான், பள்ளி பாடத் திட்டத்தில் யோகாவை சேர்க்குமாறு கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சிலுக்கு  பரிந்துரைத்தார்.

    கொரோனா தொற்றுக்குப் பிந்தைய கால பாதிப்புகளை போக்கவும், இயல்புத்தன்மையை கட்டமைக்கவும், மனித இனத்திற்கு யோகா பேருதவியாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

    தேசிய கல்வி கொள்கையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்து வகை செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    தேசிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு வரும் வேளையில், ஆரம்பகால குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் கல்வி முதல் 12-ஆம் வகுப்பு வரை யோகாவிற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்‌.

    வட்டம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் பள்ளிகளில் யோகா ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தவும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.

    ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார். #CycloneFani
    புவனேஷ்வர்:

    வங்கக் கடலில் உருவான பானி புயல் ஒடிசா மாநிலத்தில் கரையை கடந்தது. அப்போது வீசிய பலத்த காற்றால் மாநிலம் முழுவதும் மரங்கள், மின் கம்பங்கள் கீழே விழுந்தன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பானி புயலால் பாதிப்பு அடைந்த ஒடிசா மாநிலத்துக்கு பல்வேறு மாநிலங்கள் நிடி அளித்து வருகின்றன.



    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் புரியில் பானி புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் இன்று பார்வையிட்டார்.

    இன்று ஒடிசாவின் புரி நகருக்கு வந்த மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான். புயலால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினார். #CycloneFani
    ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். #DharmendraPradhan #BJP
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களின் சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தின் கட்டாக் மாவட்டத்திற்குட்பட்ட சவுத்வார் நகரில் இன்று நடைபெற்ற பாஜக பிரசார கூட்டத்தில் மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பங்கேற்று பேசினார்.



    ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் 5 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு மற்றும் உப்பு ஆகியவை  ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் வாக்குறுதி அளித்தார்.

    தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் இவற்றால் மாநிலத்தில் உள்ள சுமார் 3.26  கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். #BJPwillprovide #5kgrice #5kgriceOdisha #DharmendraPradhan 
    சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே விலையை தொடர்ந்து நிர்ணயிக்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #FuelPrice #DharmendraPradhan
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததை அடுத்து, சமீபத்தில் லிட்டருக்கு தலா ரூ.2.50-ஐ குறைத்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களும் தங்கள் வரியில் சிறிது குறைத்தன. இதனால் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 வரை குறைந்தது.

    இதற்கிடையே, பெட்ரோல், டீசல் விலை மீண்டும் சிறிது சிறிதாக உயரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய அரசு மீண்டும் விலை குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுமா என்ற கேள்வி எழுந்தது.
     
    இந்நிலையில், டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை மந்திரி தர்மேந்திர பிரதான் இது தொடர்பாக கூறியதாவது,



    பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள்தான் நிர்ணயித்து வருகின்றன. இந்த நடைமுறை தொடரும். இதில் அரசின் தலையீடு எதுவும் இருக்காது.

    மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 ரூபாய் வரை குறைத்தது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று பல்வேறு மாநில அரசுகளும் விலையை மேலும் ரூ.2.50 குறைக்க நடவடிக்கை எடுத்தன.

    ஆனாலும், டெல்லி உள்ளிட்ட சில அரசுகள் எரிபொருள் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அது ஏன் என்று சம்பந்தப்பட்ட அரசுகளிடம்தான் கேட்க வேண்டும் என தெரிவித்தார். #FuelPrice #DharmendraPradhan #PetrolDieselPriceHike 

    பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார். #MPpolls
    போபால்:

    பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டுள்ளார்.

    நாடுமுழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் 5 மாநில தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்திற்கு இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதல் கட்டமாக நவம்பர் 12-ம் வாக்குப்பதிவு  நடைபெறும். இரண்டாம் கட்டமாக நவம்பர் 20-ம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ளது.

    தர்மேந்திர பிரதான்

    மத்தியப்பிரதேசம், மிஜோரம் மாநிலங்களில் ஒரே கட்டமாக நவம்பர் 28-ம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடத்தப்படும்.  அடுத்ததாக ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையர்  தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் இன்று அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மத்தியப்பிரதேசம் மாநில பா.ஜ.க. தேர்தல் குழு பொறுப்பாளரும் மத்திய பெட்ரோலியத்துறை மந்திரியுமான தர்மேந்திர பிரதான், மத்தியப்பிரதேசம் சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, பிரதமர் மோடியின் செயல்திறனால் மத்தியப்பிரதேசம் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றிபெறும். முதல் மந்திரியாக சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் பதவி ஏற்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். #MPpolls #ShivrajSinghChouhan #MPCM #DharmendraPradhan 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #DharmendraPradhan #FuelPrice
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.13, டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.71.32 என விற்பனையானது.

    நாட்டின் நிதித்தலைநகர் என்று அழைக்கப்படுகிற மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.07, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.94. ஆகும். இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பதால் சாமானிய மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி இருப்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “எரிபொருட்கள் விலை உயர்வால் இந்திய குடிமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வருகிற விலை உயர்வுதான் இதற்கு காரணம். இதற்கு மத்திய அரசால் விரைவில் தீர்வு காணப்படும்” என்று குறிப்பிட்டார்.  #DharmendraPradhan #FuelPrice
    இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக மந்திரியை சந்தித்து பேசினார்.
    அபுதாபி:

    இந்திய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் நேற்று அமீரகத்தின் தலைநகர் அபுதாபிக்கு வந்தார். அபுதாபி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த அவரை இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று வரவேற்றனர்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரி மாதம் அமீரகம் வந்தார். அப்போது இந்தியா மற்றும் அமீரகத்துக்கும் இடையே எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.


    இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமான அட்நாக் 20 லட்சம் பேரல்கள் கொண்ட கச்சா எண்ணெய்யை முதலாவதாக மங்களூர் துறைமுகத்துக்கு அனுப்பி வைத்தது. இந்த பணியை இந்திய மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான், அமீரக எரிசக்தித்துறை துணை மந்திரி சுல்தான் அல் ஜாபர் ஆகியோர் பார்வையிட்டனர்.

    இந்த கச்சா எண்ணெயை தேக்கி வைக்கும் வகையில் மங்களூரில் 1 கோடியே 10 லட்சம் பேரல்களும், விசாகப்பட்டினத்தில் 97 லட்சத்து 77 ஆயிரம் பேரல்களும் மற்றும் பாடூரில் 1 கோடியே 83 லட்சத்து 70 ஆயிரம் பேரல்களும், அதனை தேக்கி வைக்கக்கூடிய இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தேக்கி வைக்கப்படும் கச்சா எண்ணெய்யை தனது தேவைக்கு இந்திய அரசு பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலை பார்வையிட்ட பின்னர் அமீரக எரிசக்தித்துறை துணை மந்திரி சுல்தான் அல் ஜாபருடன், இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் பேசினார்.

    அதில் எரிசக்தித்துறையில் இரு தரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, பெட்ரோலியம் தொடர்பான உள்கட்டமைப்பு பணிகளில் அமீரக நிறுவனங்களின் பங்களிப்பு ஆகியவை குறித்து பேசப்பட்டது. இந்திய எரிசக்தித்துறையின் மேம்பாட்டு பணிகளில் பங்கேற்குமாறு அமீரகத்தைச் சேர்ந்த பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இந்திய மந்திரி அழைப்பு விடுத்தார்.

    இந்த சந்திப்பை தொடர்ந்து இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டின் பேரில் இந்திய மந்திரி, இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகளை சந்தித்து பேசினார். இந்த நிகழ்ச்சிகளில் இந்திய தூதர் நவ்தீப்சிங் உடன் இருந்தார்.

    இதில் அபுதாபியில் உள்ள இந்திய சார்டர்ட் அக்கவுண்டண்ட் அமைப்பு, இந்திய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    துபாயில் நாளை (திங்கட்கிழமை) எரிசக்தி துறையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் இந்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கலந்து கொள்கிறார். இதில் அமீரகம், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

    அவர்களுக்கு இந்திய எரிசக்தி துறை குறித்து காணொலிக்காட்சி காண்பிக்கப்படும்.  #DharmendraPradhan
    ×