search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fuel Prices"

    • பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
    • பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து, 592-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஒரே விலையில் நீடிக்கிறது.

    இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

    பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும் என தேவஸ்தான துறை மந்திரி ராஜ்குமார் ரின்வா கூறியுள்ளார். #PetrolDieselPriceHike #FuelPriceHike #RajkumarRinwa
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் பா.ஜனதா ஆட்சியில் தேவஸ்தான துறை மந்திரியாக இருப்பவர் ராஜ்குமார் ரின்வா. இவர், பொதுமக்களுக்கு கூறிய அறிவுரை, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது:-

    பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதால், அவற்றின் விலை உயர்கிறது. இது, பொதுமக்களுக்கு புரியவில்லை. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை சமாளிக்க, மக்கள் தங்களது வீட்டு செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். இதையும் அவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.



    நாடு முழுவதும் வெள்ள நிவாரண பணிகளுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவாகும். அதற்கெல்லாம் பணம் தேவைப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை, உலக சந்தையில் தீர்மானிக்கப்படுகிறது. அதற்கும், அரசுக்கும் சம்பந்தம் இல்லை.

    இவ்வாறு ராஜ்குமார் ரின்வா கூறினார்.

    அவரது கருத்து, ஆணவம் நிறைந்தது, மனிதத்தன்மை அற்றது என்று மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கண்டனம் தெரிவித்துள்ளார்.  #PetrolDieselPriceHike #FuelPriceHike #RajkumarRinwa 
    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்த நிலையில் நேற்று 14 காசு குறைந்து ரூ.80.80க்கு விலை குறைக்கப்பட்டது. #Petrol #Diesel
    புதுடெல்லி:

    ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது இறங்குமுகமாக உள்ளது.

    சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.80.94 ஆகும். நேற்று 14 காசு குறைந்து இது ரூ.80.80 ஆனது.

    இதே போன்று நேற்று முன்தினம் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 72.82-க்கு விற்பனையானது. நேற்று இது 10 காசு சரிந்து ரூ.72.72 ஆனது.

    நேற்று பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 7-வது நாளாக சரிவை சந்தித்து இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலைச்சரிவு அமைந்து உள்ளது. 
    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். #DharmendraPradhan #FuelPrice
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.79.13, டீசல் ஒரு லிட்டர் விலை ரூ.71.32 என விற்பனையானது.

    நாட்டின் நிதித்தலைநகர் என்று அழைக்கப்படுகிற மும்பையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.84.07, ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.71.94. ஆகும். இப்படி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பதால் சாமானிய மக்கள் பெரும் கஷ்டத்துக்கு ஆளாகி இருப்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி தர்மேந்திர பிரதானிடம் கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், “எரிபொருட்கள் விலை உயர்வால் இந்திய குடிமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவுக்கு மத்தியில், சர்வதேச சந்தையில் ஏற்பட்டு வருகிற விலை உயர்வுதான் இதற்கு காரணம். இதற்கு மத்திய அரசால் விரைவில் தீர்வு காணப்படும்” என்று குறிப்பிட்டார்.  #DharmendraPradhan #FuelPrice
    ×