பெட்ரோல், டீசல் விலை குறையுமா?: பெட்ரோலிய மந்திரி விளக்கம்

பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.
பெட்ரோல், டீசல் விலை குறையுமா?: பெட்ரோலிய மந்திரி விளக்கம்
Published on

புதுடெல்லி:

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதிக்கு பிறகு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தொடர்ந்து, 592-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை ஒரே விலையில் நீடிக்கிறது.

இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தெற்காசிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தற்போதைக்கு இல்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com