search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Deeparathana"

    • தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் நடக்கிறது.
    • 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மேலவீதியில் புகழ்பெற்ற மூலை அனுமார் கோவில் அமைந்துள்ளது.

    தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தை சார்ந்த 88 கோவிலில் ஒன்றாகத் திகழ்கிறது.

    மூலை அனுமார் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவக்கிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

    இங்கு பிரதி அமாவாசை தோறும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

    இந்த வருடம் மகாளய அமாவாசை சனிக்கிழமை வருவதால் அன்றைய தினம் மூலை அனுமாரை தரிசனம் செய்தால் வாழ்வில் ஏற்றத்தை பெறலாம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் நாளை ( சனிக்கிழமை ) மகளாய அமாவாசையை முன்னிட்டு காலை7.30 இலட்சம் ராம நாமம் ஜெபமும் அதனை தொடர்ந்து மூலை அனுமாருக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாகும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம் , அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 6 மணிக்கு மூலை அனுமாருக்குபழங்களான சிறப்பு அலங்காரம் நடக்கிறது.

    இதையடுத்து அல்லல் போக்கும் அமாவாசை 18 வலம் நிகழ்ச்சியும் அதையடுத்து 1008 எலுமிச்சை பழங்களான மாலை சாற்றி தீபாராதனை நடக்கிறது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே ,உதவி ஆணையர் கவிதா,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் அமாவாசை கைங்கர்யம் குழுவினர் செய்து வருகின்றனர்.

    • வருகிற 25-ந் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
    • பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் பெரியகோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழா வரும் 24 மற்றும் 25 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

    சதயவிழா

    பார் போற்றும் புகழுடைய தஞ்சை பெரியகோவிலைக் கட்டித் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்த மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அவர் பிறந்த விண்மீனாகிய ஐப்பசி சதய நாளன்று சதய விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038 -வது சதய விழா வரும் 24 ஆம் தேதி தொடங்குகிறது.

    சதய நட்சத்திர நாளான 25 ஆம் தேதி ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தபடி, இவ்விழா அரசு விழாவாக நடைபெற உள்ளது.

    இதனை முன்னிட்டு சதய விழாவுக்கான பந்தல் கால் நடும் நிகழ்ச்சி இன்று பெரிய கோவிலில் நடைபெற்றது.

    பந்தக் காலுக்குப் பல்வேறு பூஜைகளும், தீபாராதனையும் செய்யப்பட்டன.

    பின்னர் பந்தக்கால் நடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுத் தலைவர் து. செல்வம், துணை தலைவர் மேத்தா, அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரன், உதவி ஆணையர் கவிதா, கோயில் செயல் அலுவலர் மாதவன், நகை சரிபார்ப்பு துணை ஆணையர் சூரியநாராயணன், நகை சரிபார்ப்பு அதிகாரி சுப்பிரமணியன், கவிஞர் செழியன் உளபட பலர் கலந்து கொண்டனர்.

    வரும் 24, 25 ஆகிய இரு நாட்கள் நடக்கும் சதய விழாவில் பட்டிமன்றம், நாட்டிய நாடகம், திருமுறை அரங்கம், கருத்தரங்கம், கவியரங்கம், நாட்டிய நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், பெருவு டையார், பெரியநாயகிக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. 

    • 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை அடுத்த திருமருகல் ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் ராகு- கேது பெயர்ச்சி விழா நடைபெற்றது.

    மூலவர் ரத்தினகிரீஸ்வரர்- வண்டுவார்குழலி அம்மன் மற்றும் நவக்கிரகங்களுக்கு சிறப்பு ஹோம பூஜைகள் நடைபெற்றது.

    தொடர்ந்து, பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் திருமார்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், கணக்கர் சீனிவாசன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • நாளை மாலை 3.40 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.
    • கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கீழப்பெரு ம்பள்ளம் நாகநாதசுவாமி கோவிலில் கேது பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது.

    கேது பெயர்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.40 மணிக்கு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசிக்கிறார்.

    இந்நிலையில் இந்த கோவிலில் கேது பகவான் பரிகார தலத்தில் கேது பகவானுக்கு மஞ்சள், சந்தனம் ,திரவிய பொடி, விபூதி, பால்,பன்னீர் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து கேது பகவானுக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    திரளான பக்தர்கள் வழிபாடு செய்து வருகி ன்றனர். கேது பெயர்ச்சியை முன்னிட்டு கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பிரவேசி க்கிறார்.

    இதனைத் தொடர்ந்து பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகளான ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிகள் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள் ஆகும்.

    கேது பகவானுக்கு எமகண்ட நேரத்தில் பரிகாரம் செய்தால் சிறப்பு ஆகும்.

    • தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
    • பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.

    தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

    இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.

    அதன்படி நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது.
    • கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

    கடலூர்:

    திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மாலை 4மணிக்கு மூலவர் வீரட்டானே ஸ்வரர்க்கு பால், தேன், தயிர், சந்தனம் , பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை நடைபெற்றது. கூடவே சிவனின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய எண்ணை, பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடை பெற்றது. பின்னர் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு தீபாராதனை நடைபெற்றது. நந்தியின் 2 கொம்புகளுக்கிடையே தரிசின காட்சி காணும் வைபவம் நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு பிரதோஷ நாதர் ரிஷப வாகனத்தில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுகாகவும் பிரதோஷ கால சுற்று முறையில் கோவிலை வலம் இடமாகசுற்றி வந்துவிளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதில் செயல் அலுவ லர் தின்ஷா மற்றும் உற்சவ தாரர்கள், சிவனடி யார்கள், சிவதொண்டர்கள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
    • விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நகர் பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பாக பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட 10 சிலைகள் போலீஸ் பாதுகாப்போடு விதிமுறைகளுடன் ஆட்டோ, டிராக்டர் போன்ற வாகனங்களில் நாகை புதிய கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது.

    அங்கு விநாயகர் சிலைக்கு தேங்காய், பழம் படைத்து தீபாராதனை காண்பித்து வழிபட்டனர். தொடர்ந்து சிலைகளை படகு மூலம் கொண்டு கரைப்ப தற்காக திட்டமிட்டனர்.

    ஆனால் படகு ஏற்பாடு செய்ய காலதாமதம் ஆனதால் சிலைகளை உடனே கரைக்க வேண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுப்ரியா, வெற்றிவேல் ஆகியோர் அவர்களிடம் வலியுறுத்தினார்.

    கையில் எடுத்து சென்றால் சிலைகளை முறையாக கடலில் கரைக்க முடியாது. எனவே படகு வந்ததும் அதில் கொண்டு சென்று கரைக்கிறோம் என்று தெரிவித்தனர்.

    தொடர்ந்து வற்புறுத்தியதால், இந்து முன்னணி அமைப்பு பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிய சிலைகளை பெண்களே கையில் கொண்டு சென்று கடலில் கரைத்தனர்.

    பின்னர் படகு வந்ததும் அதில் கொண்டு சென்று நடுக்கடலில் விநாயகரை விஜர்சனம் செய்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் ஊர்க்காவல் படையினர் தீயணைப்பு துறையினர் கடலோர காவல் குழும போலீசார் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும்.
    • பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் அருகே ஒப்பிலியப்பன் கோயில் என அழைக்கப்படும் வேங்கடாஜலபதி பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 13-வது திவ்ய தேசமாகும். மேலும், இக்கோவில் தென் திருப்பதி எனவும் போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கினர். வேங்கடாஜலபதி பெரு மாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை செய்தும், துளசி மாலை அணிவித்தும் பெருமாளை வழிபட்டனர்.

    சேங்கனூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில்

    இதேபோல், திருப்பனந்தாள் அருகே சேங்கனூர் எனும் கிராமத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பதி பெருமாளை நேரில் காண்பது போலவே அமையப்பெற்ற சுயம்புவாக தோன்றிய சீனிவாச பெருமாள் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் அபய ஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார்.

    இத்த லத்தில் சக்கரத்தாழ்வார், விஜயவள்ளி தாயார் மற்றும் சுதர்சனவள்ளி தாயாருடன் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கிறார். திருப்பதி செல்ல இயலாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வது திருப்பதி சென்று வந்த பலனை தரும் எனவும் கூறுகின்றனர்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை யொட்டி இன்று ஸ்ரீனிவாச பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர்.

    • மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது.
    • கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொன்றைக்காடு அருள்மிகு ஸ்ரீ மாயம் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கொன்றைக்காடு கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ மாயம் பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு திங்கட்கிழமை காலை விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, வாஸ்து சாந்தி, செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் மருந்து சாற்றுதல், மூன்றாம் கால யாக பூஜை, நான்காம் கால யாக பூஜை, ரக்ஷா பந்தனம், கோமாதா பூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், பூர்ணா குதி தீபாராதனை நடைபெற்று.

    மங்கல இசையுடன் கடம் புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர் சிவாச்சாரியார்கள் கடத்தை சுமந்து கொண்டு கோயிலை சுற்றி வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்கினர்.

    வானத்தில் கருடன் வட்டமிடும் போது கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை காண கொன்றைக்காடு, திருப்பூரணிக்காடு, தென்னங்குடி, காலகம், ஆணைக்காடு, கள்ளங்காடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

    • தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.
    • சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரில், போகரின் ஆசி பெற்ற 18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்கர் சித்தர் கோவில் அமைந்துள்ளது.

    ஆன்மீகத்தையும், சித்த மருத்துவத்தையும் உலகுக்கு அறியச் செய்த கோரக்க சித்தர் ஜீவ சமாதி அடைந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பரணி விழா மற்றும் ஒவ்வொரு பௌர்ணமி தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் இக்கோவிலின் மூலஸ்தான கோபுரத்திற்கு தங்கமுலாம் பூசப்பட்ட தகடு பதிக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.

    இதன் கல்வெட்டினை முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்த ம்திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பளபளவென மின்னிய கோரக்க சித்தர் கோயிலில் உள்ள சித்தருக்கு பால் மஞ்சள் சந்தனம் திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் சங்கொலி நாதம் முழங்க, கோவில் மணி ஒலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கினர்.

    • தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது.
    • கிருஷ்ணர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜ கோபால சுவாமி கோயில் உள்ளது.

    இந்த கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    இங்குள்ள கிருஷ்ணர்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை தரிசனம் செய்தனர்.

    • கிருஷ்ணன் ஜெயந்தி உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலவீதியில் புகழ்பெற்ற நவநீதகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று நவநீதகிருஷ்ணனுக்கு காலை 7 மணிக்கு குபேர சம்பத்துகள வேண்டி பல்வேறு திரவியங்களால் சிறப்பு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடந்தது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கிருஷ்ணனை தரிசனம் செய்தனர்.

    இக்கோவிலில் கிருஷ்ணன் ஜெயந்தி உற்சவம் நேற்று தொடங்கி வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இன்று (வியாழக்கிழமை) 2-ம் நாள் காலை 8 மணிக்கு புகழ்பெற்ற தொட்டில் உற்சவம் நடைபெற்றது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் ஆஸ்திக மகா சபை கைங்கர்ய குழுவினர் செய்து வருகிறார்கள்.

    கிருஷ்ண ஜெயந்தியை யொட்டி தஞ்சை மேலவீதியில் உறியடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி 23-ம் ஆண்டு உறியடி திருவிழா நேற்று நடந்தது.

    முன்னதாக கிருஷ்ணருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் பக்தி இசை பாடினார்.

    அதைத்தொடர்ந்து வழுக்கு மரத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டதையடுத்து உறியடி திருவிழா தொடங்கியது. இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வழுக்குமரம் ஏறினர்.

    இறுதியில் ஒரு வாலிபர் வழுக்குமரம் ஏறினார்.

    இதனை திரளான பொது மக்கள் கண்டுகளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் கோபால், சரத் யாதவ், ரவி யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×