என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு பால், மஞ்சளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதையும் திரளான பக்தர்கள்.
பெரிய கோவிலில் பிரதோஷ வழிபாடு
- தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
- பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
அதன்படி நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
Next Story






