search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரக்கர் சித்தர் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் தங்கத்தகடு பதிப்பு
    X

    தங்கத்தகடுகள் பதிக்கப்பட்ட கோரக்கர் சித்தர் கோவில் மூலஸ்தான கோபுரம்.

    கோரக்கர் சித்தர் கோவில் மூலஸ்தான கோபுரத்தில் தங்கத்தகடு பதிப்பு

    • தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.
    • சித்தருக்கு பால், மஞ்சள், சந்தனம், திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வடக்குபொய்கைநல்லூரில், போகரின் ஆசி பெற்ற 18 சித்தர்களில் முதன்மை சித்தரான கோரக்கர் சித்தர் கோவில் அமைந்துள்ளது.

    ஆன்மீகத்தையும், சித்த மருத்துவத்தையும் உலகுக்கு அறியச் செய்த கோரக்க சித்தர் ஜீவ சமாதி அடைந்த பிரசித்தி பெற்ற இக்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமி பரணி விழா மற்றும் ஒவ்வொரு பௌர்ணமி தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இந்நிலையில் இக்கோவிலின் மூலஸ்தான கோபுரத்திற்கு தங்கமுலாம் பூசப்பட்ட தகடு பதிக்க திட்டமிடப்பட்டது.

    அதன்படி 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவையை சேர்ந்த பக்தர் ஒருவரால் உருவாக்கப்பட்ட தங்க மூலம் பூசப்பட்ட தகடு சிறப்பு தீபாராதனை செய்து பதிக்கப்பட்டது.

    இதன் கல்வெட்டினை முன்னாள் வேளாண்துறை அமைச்சரும் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்த ம்திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பளபளவென மின்னிய கோரக்க சித்தர் கோயிலில் உள்ள சித்தருக்கு பால் மஞ்சள் சந்தனம் திருநீறு உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதன் பின்னர் சங்கொலி நாதம் முழங்க, கோவில் மணி ஒலிக்க மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதில் திரளான சாதுக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு கோரக்கர் சித்தரை வழிபட்டு தீபம் ஏற்றி வணங்கினர்.

    Next Story
    ×