search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crackers"

    • விதவிதமான உணவுகள் என செய்து அசத்தி கொண்டாடுகின்றனர்.
    • புதிய வகை ரக பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
    புதுச்சேரி:

    தீபாவளி என்றாலே புதிய ஆடை, இனிப்பு , காரம், விதவிதமான உணவுகள் என செய்து அசத்தி கொண்டாடுகின்றனர்.

    அதோடு ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு பட்டாசுகள் புதிய ரகங்கள் அறிமுகம் செய்வது வழக்கம்.இந்த முறை அதேபோன்று பல்வேறு புதிய வகை ரக பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இந்த ஆண்டு புதிதாக லியோ பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது. லியோ துப்பாக்கி, லியோ கிப்ட் பாக்ஸ் இந்த புதிய ரகம் சிறுவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. மஞ்சள் நிறத்தில் ரெடிமேடாக வெடி பொருத்திய பிளாஸ்டிக் தோட்டாவுடன் வந்துள்ளது. இதன் டிரிக்கரை அழுத்தினால் வெடிக்கும்.

    லியோ துப்பாக்கியை விற்பவரும் வாங்கியவரும் விஜய் படத்தில் துப்பாக்கிய தேய்ப்பது போல் தேய்த்து சுட்டு தங்களது குதுகலத்தை வெளிபடுத்துகின்றனர்.இதோடு மற்றொரு புதிய அறிமுகமாக டீன் பீர் வெடி. பல வண்ணத்தில் வந்துள்ளது.

    புதிய ரகங்களான மோட்டு பட்லு, கொரோனா, பாப்கார்ன், சூரியகாந்தி பூ,ட்ரோன், லேசர் ஷோ கோலிசோடா, காளான், மேஜிக் பஸ், சாட் சாட், கிராண்ட் சலாம்,வட்ட வடிவில் தொடர்ந்து 15 நிமிடம் வெடிக்கக் கூடிய கிராண்ட் ஸ்லாம், முதல் முறையாக 20 ஆயிரம் வாலா பட்டாசு, 4 அடி உயரத்தில் கம்பி மத்தாப்பு போன்ற எண்ணற்ற வகைகள் வழக்கம் போல் அணிவகுத்துள்ளன.




    • தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.
    • அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    நெல்லை:

    தீபாவளி பண்டிகை நெருங்குவதை ஒட்டி சென்னை, கோவை உள்ளிட்ட வெளி மாவட் டங்களில் இருந்து ஏராள மானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.

    அவ்வாறு வருபவர்கள் ரெயிலில் பட்டாசுகள் கொண்டு வருவதாக நெல்லை சந்திப்பு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த இன்டர்சிட்டி ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகளை ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது சரவணன் என்ற வாலிபர் 1-வது நடை மேடையில் சாக்கு பையில் பட்டாசுகள் கொண்டு வந்தார். அவற்றை போலீ சார் பறிமுதல் செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    இதே போல் அந்த ரெயிலில் ஏறி திருவனந்த புரம் செல்வதற்காக மோனு சுமன்(வயது 41) என்ற நபர் வந்தார். அவரை சோதனை செய்தபோது அவரிடம் 10 பெட்டிகளில் பட்டாசுகள் இருந்தன.

    இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் ரூ.13 ஆயிரம் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

    • அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.
    • பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்து கொள்ள வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் சார்பில் விபத்தில்லா தீபாவளி கொ ண்டாடுவது எப்படி? என்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சை விளார் சாலை பர்மா காலனி தில்லை நகரில் உள்ள தூய மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதற்கு டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற மாவட்ட தலைவர் வக்கீல் கோ. அன்பரசன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் ஆரோன்ராஜ், பள்ளித்தாளாளர் லாரன்ஸ், நிர்வாக அலுவலர் டோனி சுகந்த், தீயணைப்பு மற்றும் மீட்பு துறை நிலைய அலுவலர் (போக்குவரத்து) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாணவி ஷோபிகா வரவேற்று பேசினார்.

    இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சிறப்பு நிலைய அலுவலர் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசியதாவது:-

    அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க கூடாது.

    நீண்ட ஊதுபத்திகளை கொண்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். சிறுவர், சிறுமிகள் கண்டிப்பாக பெரியோர்கள் முன்னிலையில் தான் பட்டாசுகளை படிக்க வேண்டும்.

    பட்டாசுகள் வெடிக்கும் போது மணல், தண்ணீரை வாளியில் வைத்துக் கொள்ள வேண்டும்.

    செருப்பு அணிந்து கொண்டு வெடி வெடிக்க வேண்டும். முக்கியமாக வெடிக்காத பட்டாசுகளை கையில் எடுக்கக் கூடாது.

    பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் முதல் உதவியாக தீப்புண் மீது குளிர்ந்த தண்ணீரை ஊற்ற வேண்டும்.

    பின்னர் உடனே ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

    எந்த காரணம் கொண்டும் தீக்காயம் ஏற்பட்டால் பேனா மை, வாழைச்சாறு, பேஸ்ட் போன்றவற்றை தடவக்கூடாது.

    தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 200 தீ விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன.

    இவற்றில் 190 தீ விபத்துக்கள் அலட்சியம், கவனக் குறைவால் ஏற்பட்டது.

    எனவே அலட்சியம், கவனக்குறைவு இல்லாமல் விபத்தில்லா தீபாவளியை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஜோதி ,சக்தி, ஆசிரியை காயத்ரி மற்றும் மாணவ- மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஆசிரியை சுகன்யா நன்றி கூறினார். முன்னதாக பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும் எனவும், எப்படி வெடிக்க கூடாது எனவும் மாணவ- மாணவிகள் நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
    • அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டைப் போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.

    சுற்றுச் சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டமாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.
    • ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    சென்னை:

    தீபாவளி பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் சென்னை நகரம் முழுவதும் வியாபாரிகள் தற்காலிக பட்டாசு கடைகளை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்வது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு பட்டாசுகளை விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் சிறு வியாபாரிகள் பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தற்போது, சென்னை தீவுத்திடலில் மட்டும் பட்டாசுகள் விற்பனை நடந்து வருகிறது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசுகளை வாங்குவதற்கு பொதுமக்கள் ஏராளமானோர் தீவுத்திடலில் குவிந்தனர். அங்கு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தங்களுக்கு பிடித்த பட்டாசுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பல புதிய ரக பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக குழந்தைகளை கவரும் பட்டாசுகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில், கலர் கிரிஸ்டல், குடை கம்பி மத்தாப்பு, மயில் பட்டாசு, மல்டி ஷார்ட் துப்பாக்கி, கிரிக்கெட் பால் , பேட் , ஹெலிகாப்டர், கூல்டிரிங்க்ஸ் டின் பிளவர் பாட், தாமரை மலர், டாப் கன் 27, லெமன் சோடா, கோல்டன் லயன், ஒலிம்பிக் டார்ச், லிட்டில் டிராகன் உள்ளிட்ட பல்வேறு வகையான புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளன.

    புதிய ரக பட்டாசுகள் குறித்து பட்டாசு விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு குழந்தைகளுக்காக மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான புதிய ரக பசுமை பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதன்படி, பிளையிங் பேர்டு, பிளையிங் சக்கர், கலர் பென்சில், கோல்டன் டக், ஒரே நேரத்தில் 7 விதமாக வெடிக்கும் ரெயின்போ, ஒரே கம்பி மத்தாப்பில் 4 கலர் வரும் மல்டி கலர் கம்பி மத்தாப்பு உள்ளிட்ட பல்வேறு புதிய ரக பட்டாசுகள் அறிமுகமாகி உள்ளது.

    இந்த முறை பெரியவர்கள் வெடிக்கும் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வரவில்லை. முழுக்க முழுக்க குழந்தைகளை மட்டுமே இலக்கு வைத்து அவர்களுக்கான பசுமை பட்டாசுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்திருக்கிறது. அதே நேரத்தில் இரவு வான வெடிகள் இதுவரை இல்லாத வகையில் பல்வேறு புதிய வண்ணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

    அதன்படி, இரவு வான வெடிகள் 120 ஷாட் முதல் 1,000 ஷாட் வரை விற்பனைக்கு வந்திருக்கிறது. 1,000 ஷாட் சுமார் 2 மணி நேரம் வரை வானில் வெவ்வேறு வண்ணங்களில் வெடித்து கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. மேலும், 16 முதல் 70 எண்ணிக்கையிலான பட்டாசுகள் இருக்கும் வகையிலான கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு வந்துள்ளது. மொத்தம் 24 வகையிலான கிப்ட் பாக்ஸ்கள் உள்ளன. ரூ.250 முதல் ரூ.3,500 வரை கிப்ட் பாக்சுகள் விற்பனைக்கு உள்ளன. தற்போது தீவுத்திடலில் மட்டும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன.

    இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் 100 சதவீதம் பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு விடும் என எதிர் பார்க்கிறோம். தீவுத்திடலில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பட்டாசு களை வாங்கி செல்கின்றனர். கடையில் பட்டாசுகளை வாங்கினால், அதற்கான பில்லை பொதுமக்கள் கட்டாயம் கடைக்காரரிடம் கேட்க வேண்டும். ஆன்லைனில் சீன பட்டாசுகள் அதிகம் விற்பனையாவதால் பொதுமக்கள் யாரும் ஆன்லைனில் பட்டாசுகளை வாங்க வேண்டாம்.

    தமிழக அரசு கடந்த ஆண்டை விட தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதால் பட்டாசு கடைகளுக்கான ஷெட் அமைப்பதில் பல கெடுபிடிகள் உள்ளன. இதனால், சென்னையில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதற்கு தமிழக அரசு தளர்வு அளித்து, கடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது
    • புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    துறையூர்

    திருச்சி மாவட்டம் துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (45). இவரது வீட்டில் பட்டாசு பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எஸ்.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்.பி தனி படையினர் ராஜாவின் வீட்டை நேற்று இரவு அதிரடியாக சோதனையிட்டனர். சோதனையில் அரசின் உரிய அனுமதி இன்றி சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள பட்டாசு பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து பட்டாசை பறிமுதல் செய்த எஸ்.பி தனிப்படையினர், துறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் செய்தனர். புகாரின் பேரில் துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துறையூர் நகரத்தில் குடியிருப்புகள் அதிகமாக உள்ள பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பட்டாசு பறிமுதல் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
    • உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    நீடாமங்கலம்:

    கடந்த சில நாட்களில் தமிழகத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் குடோன்களில் ஏற்பட்ட விபத்தில் பலர் உயிர் இழந்தனர். இதையடுத்து பட்டாசு தயாரிக்கும் இடங்களின் பாதுகாப்பு குறித்து தமிழகம் முழுவதும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் பகுதி பட்டாசு கடை மற்றும் குடோன்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து, வலங்கைமான் பகுதியில் உள்ள 12 நாட்டு வெடிகள் உற்பத்தி கடைகள் மற்றும் தீபாவளிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள 48 பட்டாசு கடைகள் மற்றும் அக்ரஹாரம், உப்புக்கார தெரு, கீழத்தெரு, வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அரசு அனுமதிக்கப்பட்ட சட்ட விதிகளின் படி உரிய ஆவணங்களுடன் வெடி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறதா? பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளனவா? உரிமம் இல்லாமல் பட்டாசு தயாரிப்பு விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதா? என ஆய்வு மேற்கொண்டனர்.

    சோதனையில் விதி முறைகளை மீறி பல லட்சம் மதிப்பு வெடி பொருட்கள், பட்டாசுகள் இருப்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும், அனுமதி க்கப்பட்ட அளவை விட அதிக அளவு வெடிபொருட்கள் வைத்திருந்ததாக 9 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • தடை செய்யப்பட்ட பட்டாசுகள் விற்ற கணவர்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
    • வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி

    பட்டாசு ஆலைகளில் சரவெடி தயாரிக்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியில் கடந்த 3 ஆண்டுகளாக சரவெடி தயாரிப்பு பாதிக்கப் பட்டுள்ளது.

    இந்நிலையில் சரவெடி பட்டாசுகள் தள்ளுபடி விலையி்ல் கிடைக்கும் என சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்துள்ளனர். இது குறித்து போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படைக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சரவெடி பட்டாசுகள் வேண்டும் என சமூக வலைதளத்தில் வந்த விளம்பர செல்போன் நம்பரை தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். அவர்களும் சிவகாசி அருகே மீனம்பட்டிக்கு வரும்படி கூறியுள்ளனர். அங்கு சென்ற தனிப்படை போலீசார், அனுமதி பெறாத குடோனில் பெட்டி பெட்டியாக தடை செய்யப்பட்ட சரவெடி பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.

    சரவெடி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த சிவகாசி திருப்பதி நகரை சேர்ந்த நாகராஜ் (வயது40). அவரது மனைவி அழகு லட்சுமி (32) ஆகியோரை கைது செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது.
    • குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெம்பக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், மோகன்ராஜ் மற்றும் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிவகாசி-மடத்துப்பட்டி சாலையில், பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள குடோனில் அதிகளவில் பட்டாசுகள் வைத்திருப்பது தெரியவந்தது. அங்கு சுமார் 1150 பண்டல்களில் பட்டாசுகள் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்தன. இந்த பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ.35 லட்சம் ஆகும்.

    அங்கிருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த குடோன் சிவகாசி காக்கி வாடன்பட்டியை சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. இதையடுத்து கிரிதரன் மற்றும் குடோன் பணியாளர் மண்குண்டான் பட்டியை சேர்ந்த முருகேசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    • பட்டாசு வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
    • 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் ைகது செய்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அன்பில்நகரம் பகுதியில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த தகர செட்டில் பாதுகாப்பின்றி சாக்குமூடைகளில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் வெடிபொருள் தயாரிப்புக்கான மூலப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 15 கிலோ இரண்டு சாக்கு மூடைகள், ஒரு 10 கிலோ சாக்குமூடை, மூலப்ெபாருட்களை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை பதுக்கிவைத்திருந்த ராஜிவ்காந்தியை(38) ைகது செய்தனர்.

    சிவகங்கை நகர் பஸ் நிலையத்தில் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நகர் போலீசார் பஸ்நிலையப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி லாட்டரி விற்ற சகாய குளோரி, சிவசக்கரவர்த்தி, நாகவேல், துரைப்பாண்டியன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கேரள லாட்டரிகள், ரூ.1500 பறிமுதல் செய்யப்பட்டது.

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
    • தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பாதிப்புக்களுக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசுகள் அதிக அளவு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதனை மீறி பட்டாசு வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். பலர் அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்தனர். ஆனால் அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்த்து, 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    ×