search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு
    X

    கோப்புபடம்.

    அரசு அனுமதித்த நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக 159 பேர் மீது வழக்கு பதிவு

    • 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
    • தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பாதிப்புக்களுக்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் பட்டாசுகள் அதிக அளவு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடும் என்பதை கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகை தினத்தன்று பட்டாசுகள் வெடிக்க குறிப்பிட்ட நேரம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் அறிவுரைப்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதனை மீறி பட்டாசு வெடிக்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர். பலர் அரசு அனுமதித்த நேரத்தில் பட்டாசுகளை வெடித்தனர். ஆனால் அரசு அனுமதித்த நேரத்தையும் மீறி பட்டாசு வெடித்ததாக நேற்று ஒரே நாளில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் சேர்த்து, 159 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×