search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corruption case"

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஊழல் வழக்கில் சிக்கியதையடுத்து அவரது சொத்துக்களை முடக்க சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது. #AsifAliZardari
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி. பதவி வகித்த போது ரூ.22 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு ஒரு விசாரணை குழு அமைத்தது.

    அந்த குழு சர்தாரி, அவரது சகோதரி பர்யால்தர்புர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தியது.

    அதுகுறித்த அறிக்கை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி சர்தாரி, அவரது தங்கை பர்யால் தர்பூர் மற்றும் சர்தாரி குரூப் சொத்துக்களை முடக்க பரிந்துரை செய்துள்ளது.

    அவற்றில், சர்தாரி, பெயரில் உள்ள வங்கி கணக்குகள், கராச்சி, லாகூர் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள புகழ் பெற்ற பிலாவல் ஹவுசுக்கு சொந்தமான 5 பிளாட்டுகள், அமெரிக்கா மற்றும் துபாயில் உள்ள சொத்துக்கள் அடங்கும். #AsifAliZardari
    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் மீதான மேலும் இரு ஊழல் வழக்குகளில் அந்நாட்டின் பொறுப்புடைமை நீதிமன்றம் வரும் 24-ம் தீர்ப்பு வழங்கவுள்ளது. #Pakistancourt #nawazsharif
    இஸ்லாமாபாத்:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் நோக்கத்தில் லண்டன் அவன்பீல்ட் பகுதியில் சொகுசு பங்களா வாங்கியது தொடர்பான ஊழல் வழக்கில் 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப், 8 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட அவரது மகள் மரியம் நவாஸ் மற்றும் ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்ட மருமகன் சப்தர் ஆகியோர் ராவல்பிண்டி நகரில் உள்ள அடிடாலா சிறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.
     
    ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து சிறையில் இருக்கும் மூன்று பேரும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

    பொறுப்புடைமை நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்தும், நவாஸ் ஷரிப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் சப்தர் ஆகியோரை சிறையில் இருந்து விடுதலை செய்தும் நீதிபதி அதார் மின்னாலா கடந்த 19-9-2018 அன்று உத்தரவிட்டார்.

    இதற்கிடையில், நவாஸ் ஷரிபுக்கு எதிராக பொறுப்புடைமை நீதிமன்றத்தில் பிலாக்‌ஷிப் முதலீட்டு ஊழல் வழக்கு மற்றும் அல் அஜிசியா இரும்பு ஆலை ஊழல் வழக்கு என மேலும் இரு ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகின்றன. 

    இந்த வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பை வரும் 24-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி முஹம்மது அர்ஷத் மாலிக் இன்று அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பு நவாஸ் ஷரிப்புக்கு பாதகமாக அமைந்தால் அதிகபட்சமாக 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Pakistancourt #nawazsharif
    ஐதராபாத்தில் ஊழல் வழக்கில் நீதிபதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #judgearrested #Hyderabadjudge

    நகரி:

    தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மாவட்ட நீதிமன்ற 14-வது கூடுதல் நீதிபதியாக உள்ளவர் வரபிரசாத். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் நீதிபதியின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் அவருக்கு தெலுங்கானா மற்றும் மும்பையில் பல சொத்துக்கள் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் நேற்று தெலுங்கானாவில் உள்ள நீதிபதி வரபிரசாத்திற்கு சொந்தமான கட்டிடங்கள் மற்றும் மும்பை தானேவில் உள்ள அவரது நண்பரின் வீடு, அலுவலகங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.3 கோடி அளவிலான கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ஐதராபாத்தில் சுக் நகரில் உள்ள வீட்டில் வைத்து நீதிபதி வரபிரசாத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


    அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து நீதிபதி வரபிரசாத் கஞ்சல் கூடா சிறையில் அடைக்கப்பட்டார்.

    நீதிபதி வரபிரசாத் ஊழலில் ஈடுபட்டு வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்து இருப்பது தெரியவந்தது.

    இந்த பணத்தை மும்பை தானேவில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தும் நண்பரிடம் கொடுத்து அதில் முதலீடு செய்திருக்கிறார். தனது குடும்பத்துடன் அடிக்கடி சீனா, அமெரிக்கா, ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா சென்று லட்சக் கணக்கில் செலவு செய்து வந்திருக்கிறார். #judgearrested #Hyderabadjudge

    ஊழல் வழக்கில் சிக்கியுள்ள சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
     
    இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி என்பவர் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரியாவார்.

    இன்னொரு தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.

    தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், அலுவலக நடைமுறைகளின்படி தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது. #CBIDSP #DevenderKumar #CBIcustody #DevenderKumarsauspended
    ஊழல் வழக்கில் கைதான சி.பி.ஐ., டி.எஸ்.பி. தேவேந்திர குமாரை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. #CBIDSP #DevenderKumar #CBIcustody
    புதுடெல்லி:

    சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இவ்விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவாகும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் மேல்நடவடிக்கை எடுக்க தடை விதித்து, மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்ற சோதனையில் பிரபல மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர் மொயீன் குரைஷி என்பவர் தொடர்பான வழக்கை விசாரித்த அதிகாரியாவார்.

    இன்னொரு தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சித்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.



    இந்நிலையில், தேவேந்திர குமாரை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்டு விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர்.

    இதைதொடர்ந்து, அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார். #CBIDSP #DevenderKumar #CBIcustody
    ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு எதிரான ஊழல் வழக்கில் 29-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. #VerdictonOctober29 #KhaledaZia
    டாக்கா:

    வங்காளதேசம் நாட்டின் பிரதமராக பதவி வகித்த கலிதா ஜியா ஆட்சிக் காலத்தின்போது அவரது கணவர் மறைந்த ஜியாவுர் ரஹ்மான் பெயரால் இயங்கிவரும் அறக்கட்டளைக்காக வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக சுமார் இரண்டரை லட்சம் அமெரிக்க டாலர்கள் நன்கொடை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் கலிதா ஜியா தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி மிகப் பெரிய நிதி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, டாக்காவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    சிறையில் அடைக்கப்பட்ட கலிதா ஜியா, இந்த வழக்கில் சரியான முறையில் விசாரணை நடத்தப்படவில்லை. ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மறு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டில் முறையீடு செய்திருந்தார். மேலும், தன்னை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதற்கிடையில், டாக்கா நகரில் உள்ள பிரிட்டிஷ் காலத்து தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

    அவரை மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என டாக்கா உயர்நீதி மன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவரது உடல்நிலையை பரிசோதிக்க 5 டாக்டர்கள் கொண்ட குழுவை அமர்த்தியது.

    அடிக்கடி கால் மற்றும் கை மரத்துப்போகும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள கலிதா ஜியாவை டாக்காவில் உள்ள பங்கபந்து ஷேக் முஜிப் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கடந்த 4-10-2018 அன்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    இதைதொடர்ந்து, சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்று அழைத்து வரப்பட்ட கலிதா ஜியா(73) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.



    ஏற்கனவே தண்டனை பெற்ற ஊழல் வழக்கை தவிர, ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தனது கணவரின் பெயரிலான அறக்கட்டளைக்கு நிதி சேர்த்ததாக கலிதா ஜியா மீது டாக்கா நீதிமன்றத்தில் அந்நாட்டின் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

    இந்த வழக்கில் அவரது ஆட்சிக்காலத்தில் அரசியல் செயலாளராக இருந்த ஹாரிஸ் சவுத்தரி, ஹாரிஸ் சவுத்தரியின் தனிஉதவியாளர் ஜியாவுல் இஸ்லாம் முன்னா மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் சாதிக் உசேன் கோக்கா ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர்.

    தனக்கு உடல்நலம் சரியில்லாததால் இவ்வழக்கின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என கலிதா ஜியா சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்றுகொள்ள டாக்காவில் உள்ள ஐந்தாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி முஹம்மது அக்தருஸ்ஸமான் மறுத்துவிட்டார். தொர்ந்து வழக்கு விசாரணையை அவர் நடத்தி வந்தார்.

    தற்போது விசாரணை முடிவடைந்த நிலையில் இவ்வழக்கில் வரும் 29-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு தவிர பஸ் மீது பெட்ரோல் குண்டுவீசி 8 பேரை கொன்ற வழக்கு மற்றும் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசினாவை கொல்ல முயன்ற வழக்கு ஆகியவற்றில் இணைக்கப்பட்டுள்ள கலிதா ஜியா தண்டனைகளை எதிர்நோக்கி காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. #VerdictonOctober29 #KhaledaZia #KhaledaZiagraftcase 
    ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்தனர். #NajibRazak #NajibRazakarrested
    கோலாலம்பூர்:

    மலேசியாவின் 14வது பாராளுமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக 60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து 92 வயதான மகாதிர் முகமது அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

    முன்னதாக, மலேசிய அரசின் நிதியில் இருந்து 680 மில்லியன் டாலர் அளவுக்கு முறைகேடு செய்து அந்த தொகையை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் மடைமாற்றி விட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரஜாக் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

    தற்போது அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் அவரது மனைவி வெளிநாடுகளுக்கு மலேசியா நாட்டின் குடியுரிமைத்துறை தடை விதித்துள்ளது.

    இந்நிலையில், ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை அந்நாட்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் இன்று கைது செய்தனர்.

    புட்ரஜயா பகுதியில் உள்ள ஊழல் தடுப்பு தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.13 மணிக்கு நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டதாகவும், நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணியளவில் கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #NajibRazak #NajibRazakarrested 
    அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப் கோர்ட்டில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். #NawazSharif #CorruptionCase
    இஸ்லாமாபாத்:

    பனாமா கேட் ஊழல் வழக்கில் சிக்கி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன் படி லண்டன் அவன்பீல்டு நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வாங்கியது, அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 3 ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடைமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

    இதில் அவன்பீல்டு வழக்கில் நவாஸ் ஷெரீப், அவருடைய மகள் மரியம் நவாஸ், மருமகன் முகமது சப்தார் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மரியம் நவாசுக்கு 7 ஆண்டுகள் மற்றும் முகமது சப்தாருக்கு ஓர் ஆண்டு சிறைதண்டனை விதித்து கடந்த மாதம் 6-ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் 3 பேரும் ராவல்பிண்டி நகரில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் அல்-அஜிசியா இரும்பு ஆலை மற்றும் ஹில் உலோக ஆலை தொடர்பான 2 ஊழல் வழக்குகள் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு நீதிபதி அர்ஷத் மாலிக் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. நவாஸ் ஷெரீப்பை விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறையில் இருந்து இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக கோர்ட்டிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வழக்கில் தொடர்புடையவர்கள், நீதிபதி மற்றும் வக்கீல்கள் தவிர மற்றவர்கள் யாரும் கோர்ட்டுக்குள் நுழைய அதிகாரிகள் தடைவிதித்தனர். பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

    கோர்ட்டில் நீதிபதி முன்பு நவாஸ் ஷெரீப் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதே சமயம் இந்த வழக்குகளில் தொடர்புடைய நவாஸ் ஷெரீப்பின் மகன்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. முந்தைய அவன்பீல்டு வழக்கிலும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை என்பதும், இதனால் அவர்கள் தலைமறைவாக இருப்பதாக கோர்ட்டு ஏற்கனவே அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.  #NawazSharif #CorruptionCase  #tamilnews
    ‘வழக்கு எண் 4000’ என குறிப்பிடப்படும் ஊழல் வழக்கு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிடம் போலீசார் இன்று பத்தாவது முறையாக விசாரணை நடத்தினர்.
    ஜெருசலேம்:

    யூதர்களின் நாடான இஸ்ரேலின் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2009-ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். ஏற்கனவே, 1996-99 முதல் அவர் பிரதமராக இருந்துள்ளார்.

    தனது பதவிக்காலத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பரிசுப்பொருள் பெற்றதாகவும், எதிர்க்கட்சிகளை விமர்சித்து செய்தி வெளியிட ஊடக நிறுவனம் ஒன்றிடம் டீல் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை உள்ளதா? என கடந்த 14 மாதங்களாக போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையில், தன் மீதான புகாரை அவர் மறுத்து வந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் திடீரென டெல் அவிவ் நகரின் முக்கிய பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டனர். நேதன்யாகுவிற்கு எதிராக குரல்களை எழுப்பிய அவர்கள், அவரை குற்ற விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

    இந்நிலையில், விசாரணையின் அறிக்கையை நேற்று வெளியிட்ட போலீசார், நேதன்யாகு கடந்த பத்து ஆண்டுகளில் 3 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகளை பெற்றுள்ளதாகவும், அவர் ஊழலில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் கூறினர்.

    ’வழக்கு எண் 4000’ என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் ஒரு ஊழல் வழக்கில் இஸ்ரேல் நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுனவமான ‘பெஸெக்’ நிறுவனத்துக்கு அரசின் சார்பில் சலுகைகளை வழங்கி, தனிப்பட்ட முறையில் பண ஆதாயம் பெற்றதாக பெஞ்சமின் நேதன்யாகு மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் நேதன்யாகுவின் நெருங்கிய நண்பரும் முன்னாள் ஊடக ஆலோசகருமான நிர் ஹெஃபெட்ஸ் மற்றும் இஸ்ரேல் தொலைத்தொடர்புத்துறை முன்னாள் இயக்குனர் ஷோல்மோ பில்பர் ஆகியோர் தற்போது நேதன்யாகுவுக்கு எதிரான அரசுதரப்பு சாட்சிகளாக மாறியுள்ளனர்.

    இந்நிலையில், இன்று பிரதமர் பெஞ்சமின் நேதயாகுவின் வீட்டுக்கு வந்த போலீசார், அவரிடம் வழக்கு எண் 4000 தொடர்பாக சுமார் நான்கு மணிநேரம் விசாரணை நடத்தினர். ஊழல் தொடர்பாக அந்நாட்டு போலீசார் அவரிடம் இதுவரை பத்துமுறை விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வழக்கு எண் 1000 எனப்படும் வழக்கில் நேதன்யாகுவின் மனைவியின் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சில சலுகைக்களுக்காக ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் அர்னான் மைக்கேல் மற்றும் ஆஸ்திரேலிய சொகுசு விடுதி உரிமையாளரான ஜேம்ஸ் பெக்கர் ஆகியோரிடமிருந்து நேதன்யாகுவும் அவரது மனைவியும் சுமார் 3 லட்சம் அமெரிக்க டாலர்கள் அளவில் சுருட்டுகள் மற்றும் மதுவகைகள் போன்றவற்றை லஞ்சமாக பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இஸ்ரேலிய சட்டப்படி விசாரணையை எதிர்கொள்ளும் பிரதமர் பதவி விலக வேண்டியது இல்லை. தண்டிக்கப்பட்டால் மட்டுமே பதவி பறிபோகும். இருந்தாலும், பெஞ்சமின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதனால், அவர் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளார். #Netanyahucorruption #Netanyahuquestioned
    லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #AvenfieldReference #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பணாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷ்ரீப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இந்த வழக்கில் உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    முதல் வழக்கான, லண்டன் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை அவர் ஊழல் செய்த பணத்தில் வாங்கியதாக உள்ள குற்றச்சாட்டை விசாரித்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் ஏற்கனவே 4 முறை தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கில் 100 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

    நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நவாஸின் மருமகன் சாப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    நவாஸ் ஷெரீப்புக்கு  10 மில்லியன் அமெரிக்க டாலர், மர்யம் நவாஸுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    தற்போது, லண்டனில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் மனைவி குல்சோம் நவாஸை கவனித்து கொள்வதற்காக, நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் நவாஸ் லண்டனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
    ×