search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவன்பீல்டு வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை
    X

    அவன்பீல்டு வழக்கு - நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை

    லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிய வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. #AvenfieldReference #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    பணாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷ்ரீப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இந்த வழக்கில் உள்ள பல்வேறு குற்றச்சாட்டுகள் தனித்தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 

    முதல் வழக்கான, லண்டன் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பில் 4 வீடுகளை அவர் ஊழல் செய்த பணத்தில் வாங்கியதாக உள்ள குற்றச்சாட்டை விசாரித்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் ஏற்கனவே 4 முறை தீர்ப்பு தேதியை ஒத்தி வைத்தது. இந்நிலையில், இன்று இவ்வழக்கில் 100 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை நீதிபதி வழங்கினார்.

    நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், நவாஸின் மருமகன் சாப்தாருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

    நவாஸ் ஷெரீப்புக்கு  10 மில்லியன் அமெரிக்க டாலர், மர்யம் நவாஸுக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    தற்போது, லண்டனில் புற்றுநோய் சிகிச்சை எடுத்து வரும் மனைவி குல்சோம் நவாஸை கவனித்து கொள்வதற்காக, நவாஸ் ஷெரீப் மற்றும் மர்யம் நவாஸ் லண்டனில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    பாகிஸ்தானில் வரும் 25-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு அந்நாட்டு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
    Next Story
    ×