search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "congress mp"

    நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார். #VijayMallya #ArunJaitley
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

    நேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.

    இதனால், அருண் ஜெட்லியை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்ற மத்திய ஹாலில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாக காங்கிரஸ் எம்.பி புனியா இன்று தெரிவித்துள்ளார்.

    சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் அது உண்மை என தெரியவரும் எனவும் புனியா கூறியுள்ளார். 
    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில், பசுவை கடத்தியதாக வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியில் உள்ள லாலாவாண்டி காட்டுப் பகுதியில் பசுக்களை கடத்தியதாக கூறி ரக்பர்கான் என்ற வாலிபர் சமீபத்தில் அடித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

    ரக்பர்கான் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், இருக்கும்போது அங்கு வந்த ராம்நகர் போலீசார் அடிபட்டவரை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தாமல், பசுக்களை பாதுகாப்பதிலும், அவற்றை  கோஷாலாவுக்கு கொண்டு செல்வதிலுமே கவனம் செலுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.



    இந்நிலையில், இதுதொடர்பாக இன்று பாராளுமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி கரன் சிங் யாதவ் கேள்வி எழுப்பினார். பசுக்களை கடத்துவதாக பாஜகவினர் சிலர் போராட்டம் நடத்தினர், ஆனால் ரக்பர்கான் கொலை வழக்கில் அவர்களிடம் எவ்வித கேள்வியும் எழுப்பப்படவில்ல எனவும் அவர் குற்றம்சாட்டினார். 4 மணி நேரமாக ரக்பர்கானை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், போலீசார் காட்டிய அஜாக்கிரதை காரணமாகவே அந்த வாலிபர் இறந்ததாகவும் எம்.பி கரன் சிங் தெரிவித்தார்.

    மேலும், உன்னாவோ கற்பழிப்பு வழக்கை மேற்கோள் காட்டிய எம்.பி கரன் சிங் குற்றவாளிக்கு ஆதரவாகவே பா.ஜ.க தலைவர்கள் இருந்தார்கள் என தெரிவித்தார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பாராளுமன்றத்தில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.

    பசு பாதுகாப்பு என்ற பெயரில் அல்வார் பகுதியில் நடைபெற்ற இந்த கொடூர கொலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ராஜஸ்தான் அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. #MobLynching #CowRakshaks #AlwarLynching
    திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
    திருவனந்தபுரம்:

    மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படும் என்றும், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆகிவிடும் என்றும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், “பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்துக்கு வந்து பெயர் பலகை, நுழைவாயில் கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற என்ஜின் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியதோடு, நான் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்று கோஷம் எழுப்பிவிட்டு சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார். 
    ×