search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cleaning staff"

    • டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.
    • மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    திருப்பூர்:

    நல்லாட்சி வாரவிழாவையொட்டி திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை வகித்தாா்.கூட்டத்தில் தூய்மை பணியாளா் நலவாரிய துணைத்தலைவா் கு.கோவிந்தராஜ் பேசியதாவது:-

    அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பா் 19 ந் தேதி முதல் டிசம்பா் 25 ந் தேதி வரையில் நல்லாட்சி வார விழா நடைபெற்று வருகிறது.

    இதன் நோக்கம் நாட்டின் கடைகோடி மக்களுக்கு அரசின் நிா்வாகத்தை கொண்டு செல்லும் விதமாக பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்தல் மற்றும் இணையதளம் வாயிலாக பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு தீா்வு காணுதல், நல்ல நிா்வாகம் நடைபெற நடைமுறைகளை செயல்படுத்த நாட்டின் குடிமக்களை மையப்படுத்தி அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல் என்பதே நமது நோக்கம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்றாா்.

    முன்னதாக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளை 100 பணியாளா்களுக்கு வழங்கினா்.இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். 

    • தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும்
    • சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    மயிலாடுதுறை நகராட்சியில் 80 பேர் தூய்மை பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். தனியார் கம்பெனி மூலம் ஒப்பந்த முறையில் பணி செய்து வருகின்றனர்.

    இவர்களுக்கு மாதம் தோறும் 15 தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. தினம்தோறும் 340 ரூபாய் கணக்கில் சம்பளம் வழங்கப்படும் நிலையில் மாதத்தின் கடைசி வாரத்தில் போராட்டம் செய்தால் மட்டுமே சம்பளத்தை வழங்குகின்றனர்.

    போராட்டம் செய்யும் நாட்களுக்கு சம்பள பிடித்தம் செய்வது மேலும் சாக்கடைகளில் இறங்கி வேலை பார்க்கும் தங்களுக்கு கையுறை, காலுறை உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை

    தங்களிடம் பிடித்தம் செய்யும் பிஎஃப் பணத்திற்கு ரசீது கொடுக்காமல் பணத்தை வழங்காமல் மிகுந்த மோசடி செய்து வருவதாக குற்றம் சாட்டி நேற்று நகராட்சி வாசலில் முற்றுகையிட்டு கீழே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அப்போது நகராட்சி ஆணையர் பாலாஜி பேச்சுவார்தை செய்தார். முன்தகவல் கொடுக்காமல் இதுபோன்ற செயலில் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டார். இதனை தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    • பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவு குப்பைகளை தூய்மை பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்
    • சுமார் 250 டன் குப்பைகள் சேகரித்து 40 கனரக வாகனங்களில் குப்பைகளை கிடங்கில் கொட்டப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் வழக்கமாக நாளொன்றிற்கு சுமார் 110 முதல் 120 டன் குப்பை சேரும்.

    இந்த குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் சேர்க்கப்படுவது வழக்கம். தற்போது கடந்த இரண்டு நாட்களாக தீபாவளி விற்பனை மாநகரம் முழுவதும் நடைபெற்றது. இதனை அடுத்து திடக்கழிவு மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு நகர் முழுவதும் குவிந்துள்ளன.

    நேற்று தீபாவளி தினத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

    இதனால் பல இடங்களில் பட்டாசு கழிவுகள் குவிந்தன. இது தவிர சாலையோர கடைகளில் கடந்த சில நாட்களாக புத்தாடை விற்பனை மும்முரமாக நடந்தது. அதில் தேவையில்லாத பிளாஸ்டிக் கவர் உள்ளிட்ட பல்வேறு குப்பைகளும் சாலையோரம் குவிந்தன.

    இப்படி பட்டாசு வெடி த்தது மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் என வழக்கத்தை விட கூடுதலாக 110 டன் அளவிற்கு குப்பை சேர்ந்து உள்ளது . அதாவது சுமார் 250 டன் குப்பைகள் குவிந்தன.

    இதனை தொடர்ந்து இன்று காலையில் தஞ்சை மாநகர் முழுவதும் குவிந்திருந்த குப்பைகளை 500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அள்ளி தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தூய்மை செய்தனர். சேகரிக்கப்பட்ட குப்பைகள் 40 கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு குப்பை கிடங்கில் கொட்டப்பட்டன.  

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.
    • மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட வழங்கினார்‌.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள் சுப்பராமன், ராமச்சந்திரன், கோவிந்தராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகராட்சி மேயர் சண் ராமநாதன் கலந்து கொண்டு 100 தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி ,சேலை, வாளி உள்பட பல்வேறு வகையான பொருட்களை வழங்கி பாராட்டினார் ‌‌.

    இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தூய்மை பணவர்களுக்கான உதவிப் பொருட்கள் அனைத்தையும் மாநகராட்சி 30-வது வார்டு கவுன்சிலர் யு.என். கேசவன் தனது சொந்த நிதியில் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தூய்மை பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க ேகாரி ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப்பணியாளர் சங்கத்தின் திருப்புல்லாணி ஒன்றியத்தில் நடந்தது.

    ராமநாதபுரம்

    ஊரக வளர்ச்சித்துறை அனைத்துப் பணியாளர் சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் சார்பில் ஒன்றியத்தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஓ.எச்.டி. ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம், தூய்மை காவலர்களுக்கு 100 நாள் பணியாளருக்கு வழங்கப்படும் தினக்கூலி தொகை ரூ.281 வழங்கப்பட வேண்டும்.

    தூய்மை பணியாளருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    செயலாளர் தர்மராசு, பொருளாளர் பானுமதி, மாவட்ட செயலாளர் குணசேகரன், பொருளாளர் ஜெயபால், ஊராட்சி செயலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சேகு ஜலாலுதீன், பொருளாளர் மங்களசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள், ஓ.எச்.டி. ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • கொரோனா ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
    • கோரிக்கையை அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலருக்கான கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடக்கோரி பிரசார பயணம் துவங்கியுள்ளது.

    கொரோனா ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடிநீர் ஆப்ரேட்டர்,தூய்மை பணியாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆபரேட்டர் அனைவருக்கும் 7,040 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.1972 பணிக்கொடை பட்டுவாடா சட்டப்படி ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

    சிறப்பு காலமுறை ஊதியம் அனைவருக்கும் வழங்கி, அதுதொடர்பான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். தாமதமின்றி சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்க வேண்டும். வாரிசு வேலை மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஊராட்சிகளில் எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வரும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கும், தூய்மை பணியாளர், தூய்மை காவலருக்கான கோரிக்கையை அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோரிக்கையை விளக்கியும், கோரிக்கைக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தியும் மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பிரசார பயணம் நடந்துள்ளது.

    • ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி சின்னக் கடை வீதி வழியாக முக்கிய வீதிகளில் சென்றது.
    • மக்கும் உரம் தயாரித்தல் குறித்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரி கள் எடுத்து ரைத்தனர்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி சின்னக் கடை வீதி வழியாக முக்கிய வீதிகளில் சென்றது. இதில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல் சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் மக்கும் உரம் தயாரித்தல் குறித்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரி கள் எடுத்து ரைத்தனர்.

    பேரணியில்ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அருளப்பன், மற்றும் வனிதா, சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
    • “நம்ம ஊரு சூப்பரு” சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகன பயணத்தை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணாி வட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியம், எஸ்.புதூர் ஊராட்சியில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமையில், "நம்ம ஊரு சூப்பரு" சிறப்பு விழிப்புணர்வு பிரசார வாகனம் மற்றும் இலவச நடமாடும் மருத்துவ மைய வாகனத்தினை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் தூய்மைப்ப ணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், மீண்டும் மஞ்சள் பை திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு மஞ்சள் பை போன்றவைகளை வழங்கி, எஸ்.புதூர் ஊராட்சியில் உள்ள சீலப்ப நாயக்கர் ஊரணியை சுற்றியுள்ள பகுதிகளில் "நம்ம ஊரு சூப்பரு" திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு வைத்து, ஊரணியை சுற்றி மேற்கொள்ளப்படவுள்ள சுகாதார தூய்மைப் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் "நம்ம ஊரு சூப்பரு" தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தலைமையில் ஏற்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பொன்.மணிபாஸ்கரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.ராம்கணேஷ், அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் நாராயணன், வொக்கார்ட் அறக்கட்டளை மருத்துவ இயக்குநர் ஸ்ரீராம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட இயக்குநர் விசாலாட்சி, ஒன்றியக்குழுத் தலைவர் விஜயாகுமரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வீரம்மாள், சிங்கம்புணரி வட்டாட்சியர் கயல்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, ஊராட்சி மன்றத்தலைவர் ராதாகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கிய பல்த்சர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.
    • அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது.

    அவிநாசி :

    அமைப்பு சாரா தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வேலை வாய்ப்பு உருவாக்கும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் இ-ஷ்ராம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள இணைய தளத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களை பதிவு செய்யும் பணி நடக்கிறது.

    பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, நடைபாதை வியாபாரிகள், ரிக்‌ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர் வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர் ஆகியோர் பதிவு செய்து கொள்ளலாம்.

    அதன்படி அவிநாசி பேரூராட்சியில் பணிபுரியும் 134 தூய்மை பணியாளர்களை இத்திட்டத்தில் இணைப்பதற்கான பணி நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இருந்து வந்திருந்த ஊழியர்கள், இணைய தளத்தில் பயனாளிகளின் விவரங்களை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் கருப்புசாமி உள்ளிட்ட அலுவலர்கள் முகாம் பணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வருகின்றனர்.
    • குப்பைகளை சேகரிக்க ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போட பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த பணியாளர்கள் தள்ளு வண்டி மூலமாக சென்று வரும் பொழுது மிகுந்த காலதாமதமும், பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக 14 மற்றும் 15-வது நிதிக் குழு மானியம் திட மற்றும் திரவ கழிவு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி ஊராட்சி செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், முன்னாள் கிளைச் செயலாளர் கவின் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தஞ்சையில் 14 வருடங்களாக துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.6 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது எனவும் கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும் எனவும் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:

    தஞ்சை வடக்கு வாசல் ரோகிணி காலனியில் வசிக்கும் துப்புரவு பணியாளர்கள் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் தற்காலிக துப்புரவு பணியாளர்களாக கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் தான் வழங்கபடுகிறது.

    இதை வைத்து எங்களது குழந்தைகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. மற்றும் வீட்டு வாடகை, குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வருகிறோம். நாங்கள் வாங்கும் ஊதியத்துக்கு மேலாக அதிகமாக வேலை பார்த்து வருகிறோம்.

    எங்களது நலனை கருத்தில் கொண்டு கூடுதல் சம்பளம் வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. #tamilnews
    ×