search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரசார பயணம்"

    • ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வலியுறுத்தல்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற தலைப்பில் இளைஞர் எழுச்சி தொடர் பரப்புரை பயணம் விளக்க கூட்டம் திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் நடைபெற்றது.

    இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் முரளி தலைமை வகித்தார்.தொடர் பிரசார பயணத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எம்.சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.சி.சாமிக்கண்ணு, எம்.நந்பி, ஆர்.முல்லை, எஸ்ஆர். தேவதாஸ், எம்சி. முருகன், ஆனந்தன், சங்கர் உட்பட பலர் பேசினார்கள்.

    தேசிய வேலை உறுதியளிப்புச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும், வேலை கொடு அல்லது வேலை கொடுக்கிற வரை மாதம் ரூ.10 ஆயிரம் நிவாரணம் கொடுக்க வேண்டும்.

    புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்குவதோடு வேலை வாய்ப்புகளில் உள்ளூர் தொழிலா ளர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் வேலை வாய்ப்புகளில் ஒப்பந்த மற்றும் அவுட் சோர்சிங் முறையினை ரத்து செய்து, நிரந்தர பணியிடங்களாக மாற்றி அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி பேசினார்கள்.

    மாதனூரில் தொடங்கிய பிரசார பயணம் சோமலாபுரம், ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, கந்திலி, வழியாக திருப்பத்தூரில் முடிவடைந்தது கூட்டத்தில் ஏராளமானோல் கலந்து கொண்டனர். இறுதியில் நகர துணைச் செயலாளர் ஆர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • கொரோனா ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.
    • கோரிக்கையை அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஊராட்சி குடிநீர் ஆபரேட்டர், தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலருக்கான கோரிக்கைகளுக்கு அரசாணை வெளியிடக்கோரி பிரசார பயணம் துவங்கியுள்ளது.

    கொரோனா ஊக்கத்தொகையாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். குடிநீர் ஆப்ரேட்டர்,தூய்மை பணியாளர் காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆபரேட்டர் அனைவருக்கும் 7,040 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்.1972 பணிக்கொடை பட்டுவாடா சட்டப்படி ஆபரேட்டர்களுக்கு பணிக்கொடையும், ஓய்வூதியமும் வழங்க வேண்டும்.

    சிறப்பு காலமுறை ஊதியம் அனைவருக்கும் வழங்கி, அதுதொடர்பான பதிவேடுகளை பராமரிக்க வேண்டும். தாமதமின்றி சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்க வேண்டும். வாரிசு வேலை மற்றும் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது.

    இதுகுறித்து திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள்,தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    ஊராட்சிகளில் எவ்வித பணி பாதுகாப்பும் இல்லாமல் பணியாற்றி வரும் குடிநீர் ஆபரேட்டர்களுக்கும், தூய்மை பணியாளர், தூய்மை காவலருக்கான கோரிக்கையை அரசாணையாக வெளியிடக்கோரி, போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கோரிக்கையை விளக்கியும், கோரிக்கைக்கு அரசாணை வெளியிட வலியுறுத்தியும் மாவட்டம் வாரியாக பிரசார பயணம் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் பிரசார பயணம் நடந்துள்ளது.

    • அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    அவிநாசி

    சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து, அவிநாசியில், விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது.சமூகக்கல்வி மற்றும் முன்னேற்ற மையம் (சி.எஸ்.இ.டி.,), திருப்பூர் சைல்டுலைன் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியன இணைந்து, வளரிளம் மற்றும் பெண் தொழிலாளர்களுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1800 425 1092 மற்றும் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 குறித்த விழிப்புணர்வு வாகன பிரசார பயணம் அவிநாசியில் துவங்கியது.ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஒன்றிய குழுத்தலைவர் ஜெகதீசன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    தொடர்ந்து பழங்கரை, புதுப்பாளையம், வேலாயுதம்பாளையம் சேவூர், கருவலூர், தெக்கலூர், பகுதிகளில் பிரசார பயணம் நடைபெறுகிறது.இதில் சி.எஸ்.இ.டி., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணக்குமார், கருணாம்பிகை, நயினான், சின்னச்சாமி, சி.எஸ்.இ.டி., சைல்டுலைன் அமைப்பின் வைஷ்ணவி மற்றும் களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.

    ×