search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகளை"

    • அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வருகின்றனர்.
    • குப்பைகளை சேகரிக்க ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சங்கராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகளை சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் மற்றும் பீங்கான் கழிவுகளை மறுசுழற்சி செய்து தார்சாலை போட பயன்படுத்துவதற்காக அனுப்பி வைக்கின்றனர்.

    இந்த பணியாளர்கள் தள்ளு வண்டி மூலமாக சென்று வரும் பொழுது மிகுந்த காலதாமதமும், பணியாளர்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனை களையும் விதமாக 14 மற்றும் 15-வது நிதிக் குழு மானியம் திட மற்றும் திரவ கழிவு திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் 2 பேட்டரி வாகனங்களை மக்கள் பயன்பாட்டிற்கு அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. வழங்கி தொடங்கி வைத்தார்.

    இதில் சங்கராபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி ஊராட்சி செயலாளர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வைத்தீஸ்வரன், முன்னாள் கிளைச் செயலாளர் கவின் மற்றும் கவுன்சிலர்கள் அலுவலகப் பணியாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×