என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நம்ம ஊரு சூப்பரு திட்ட விழிப்புணர்வு ஊர்வலம்
- ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி சின்னக் கடை வீதி வழியாக முக்கிய வீதிகளில் சென்றது.
- மக்கும் உரம் தயாரித்தல் குறித்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரி கள் எடுத்து ரைத்தனர்.
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பள்ளி வளாகத்தில் தொடங்கி சின்னக் கடை வீதி வழியாக முக்கிய வீதிகளில் சென்றது. இதில் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்து வழங்குதல் சுற்றுப்புற தூய்மையை பராமரித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் மக்கும் உரம் தயாரித்தல் குறித்தும் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதிகாரி கள் எடுத்து ரைத்தனர்.
பேரணியில்ராசிபுரம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் அருளப்பன், மற்றும் வனிதா, சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா மகுடீஸ்வரன், துணைத் தலைவர் சுரேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியைகள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.