search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "champion"

    உ.பி.யில் நடைபெற்ற சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சீன வீரரை வீழ்த்தி இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். #SyedModiInternational #SameerVerma
    லக்னோ:

    சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தரப்பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.

    இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சமீர் வர்மாவும், சீன வீரர் ஹீ லு குவாங்ஜுவும் மோதினர்.

    சீன வீரர் அபாரமாக ஆடியதால், 16-21 என்ற கணக்கில் சமீர் வர்மா முதல் செட்டை இழந்தார். ஆனாலும், மனம் தளராத சமீர் வர்மா இரண்டாவது செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது சுற்றில் சமீர் வர்மா சிறப்பாக ஆடினார். இதனால் அவர் 21 -14 என்ற கணக்கில் மூன்றாவது செட்டையும் கைப்பற்றினார். 

    இறுதியில், 16-21, 21-19, 21-14 என்ற கணக்கில் சீன வீரரை வீழ்த்திய இந்திய வீரர் சமீர் வர்மா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். 

    இது சமீர் பெற்ற மூன்றாவது சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே சுவிஸ் ஓப்பன் மற்றும் ஐதராபாத் ஓப்பன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #SyedModiInternational #SameerVerma
    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்த சுசீந்திரன், டப்பிங் பணிகளை துவங்கியிருக்கிறார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் `ஜீனியஸ்' திரைப்படம் வருகிற அக்டோபர் 26-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், சுசீந்திரன் தனது அடுத்த படமான `சாம்பியன்' படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் படத்தின் டப்பிங் பணிகளும் இன்று துவங்கியிருக்கிறது. 

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையமாக வெளியான `வெண்ணிலா கபடி குழு', `ஜீவா' படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சாம்பியன் படத்தை கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கி இருக்கிறார்.

    இதில் புதுமுகம் ரோஷன், மிர்னாலினி நாயகன் நாயகியாக நடித்துள்ளார்கள். இவர்களோடு ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஜெயப்பிரகாஷ், ஆர்.சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.



    அரோல் கோரொலி இசையமைக்கும் இந்த படத்துக்கு, சுஜித் சாரங் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் சார்பாக கே.ராகவி இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படம் டிசம்பரில் வெளியாக உள்ளது.

    சுசீந்திரன் இயக்கத்தில் `ஏஞ்சலினா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. #Champion

    அகில இந்திய ஆக்கி போட்டியில் ஐ.ஓ.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. #Hockey #IOC #Champion #Railway
    சென்னை:

    92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் (ஐ.ஓ.சி.), இந்தியன் ரெயில்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி அசத்திய ஐ.ஓ.சி. அணி 4-0 என்ற கோல் கணக்கில் ரெயில்வே அணியை தோற்கடித்து 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை உச்சிமுகர்ந்தது. ஐ.ஓ.சி. அணியில் ரோஷன் மின்ஸ் (14-வது நிமிடம்), குர்ஜிந்தர் சிங் (18-வது நிமிடம்), தல்விந்தர்சிங் (21-வது நிமிடம்), பாரத் சிக்ரா (52-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

    இந்த தொடரில் தோல்வியே சந்திக்காமல் வாகை சூடிய ஐ.ஓ.சி. அணிக்கு ரூ.5 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடத்தை பிடித்த ரெயில்வே அணிக்கு ரூ.2½ லட்சம் கிடைத்தது. இது தவிர, சிறந்த முன்கள வீரராக பர்தீப்சிங் (ரெயில்வே), சிறந்த நடுகள வீரராக பவால் லக்ரா (இந்திய ராணுவம்), சிறந்தகோல் கீப்பராக குர்விந்தர்சிங் (பஞ்சாப் சிந்து வங்கி), தொடரின் சிறந்த வளரும் வீரராக வீர தமிழன் (சென்னை ஆக்கி சங்கம்), ஆட்டநாயகனாக குர்ஜிந்தர்சிங் (ஐ.ஓ.சி.) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் மற்றும் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.  #Hockey #IOC #Champion #Railway
    மெட்ராஸ் ஜிம்கானா கிளப் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
    சென்னை:

    மெட்ராஸ் ஜிம்கானா கிளப் சார்பில் கிளப்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் ஆண்களுக்கான ஓபன் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் ஜிம்கானா கிளப் வீரர் ஷரண் ஸ்ரீதர் 11-5, 13-11, 11-7 என்ற செட் கணக்கில் ஆந்திரா கிளப் வீரர் சாய் தினேஷ்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதன் இரட்டையர் பிரிவில் ஷரண் ஸ்ரீதர்-சி.என்.ஸ்ரீதர் (ஜிம்கானா கிளப்) ஜோடி 11-5, 12-10, 11-5 என்ற செட் கணக்கில் எம்.ஏ.ஆர்யா-எம்.எஸ்.ஆதித்யா (மைலாப்பூர் கிளப்) இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் வித்யா ராமச்சந்திரனும் (மைலாப்பூர் கிளப்), வெட்ரன்ஸ் ஒற்றையர் பிரிவில் ஜேக்கப் ராஜ்குமாரும் (டி.என்.சி.ஏ. கிளப்) வெற்றி பெற்றனர். 
    மாநில சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா சாம்பியன் பட்டம் பெற்றார்.
    மாநில சீனியர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி கரூரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சென்னை வீராங்கனை லட்சுமி பிரியங்கா சாம்பியன் பட்டம் பெற்றார். அவர் இறுதிப் போட்டியில் 21-12, 21-6 என்ற கணக்கில் ஜெர்லின் அணிகாவை (மதுரை) வீழ்த்தினார். இவரது சகோதரர் சங்கர் முத்துசாமி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது இடத்தை பிடித்தார். அவர் 21-17, 10-21, 10-21 என்ற கணக்கில் சதீஷ்குமாரிடம் (கோவை) தோற்றார்.

    சிறந்த வீரருக்கான விருது சங்கர் முத்துசாமிக்கும், சிறந்த வீராங்கனைக்கான விருது லட்சுமி பிரியங்காவுக்கும் வழங்கபட்டது. இருவரும் ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். சங்கர் முத்துசாமியும், லட்சுமி பிரியங்காவும் முகப்பேரில் உள்ள பயர்பால் அகாடமியில் பயிற்சியாளர் அரவிந்தனிடம் பயிற்சி பெற்று வருகிறார்கள்.
    சென்னையில் நடந்த மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியில் நிகில், அம்ருதா சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றனர். #TableTennis
    5-வது இதயம்-மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் நிகில் 4-0 என்ற கணக்கில் சுஷ்மித் ஸ்ரீராமை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் பிரிவில் அம்ருதா புஷ்பக் 4-2 என்ற கணக்கில் ரிஷ்யாவை வீழ்த்தி சாம்பியன் ஆனார்.

    மற்ற பிரிவுகளில் பிரவீன் குமார், தீபிகா (யூத்), பியூஸ் சாகர், நித்யஸ்ரீ (ஜூனியர்) விஷ்வா, ஷிரேயா சிவக்குமார் (சப்-ஜூனியர்), பாலமுருகன் (5-வது பட்டம்), ஷிரேயா ஆனந்த் கேடட், குருசன்ஜித், ஹன்சினி (5-வது பட்டம்) மினி கேடட் ஆகியோர் வெற்றி பெற்றனர். #TableTennis
    மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னை வீரர் சுஷ்மித் ஸ்ரீராம் 4-0 என்ற கணக்கில் நிதின் திருவேங்கடத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
    4-வது இதயம் மாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடந்தது.

    இதன் ஆண்கள் பிரிவில் சென்னை வீரர் சுஷ்மித் ஸ்ரீராம் 4-0 என்ற கணக்கில் நிதின் திருவேங்கடத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் பிரிவில் ஷெரா ஜேக்கப் 4-1 என்ற கணக்கில் அம்ருதா புஷ்பக்கை வீழ்த்தி பட்டம் பெற்றார்.

    மற்ற பிரிவுகளில் ஆனந்த், கவுசிகா பிரேயேஷ், சித்தார்த், பாலமுருகன், விஸ்வா ஆகியோர் வெற்றி பெற்றனர். #tamilnews
    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். #Cincinnati #GarbineMuguruza #LesiaTsurenko
    சின்சினாட்டி:

    சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக விளையாட வாய்ப்பு பெற்ற நடப்பு சாம்பியனும், 2 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவருமான கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), 44-ம் நிலை வீராங்கனையான லிசி சுரென்கோவை (உக்ரைன்) எதிர்கொண்டார்.



    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கார்பின் முகுருஜா 6-2, 4-6, 4-6 என்ற செட் கணக்கில் லிசி சுரென்கோவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்ற ஆட்டங்களில் கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), விம்பிள்டன் சாம்பியன் ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி), ஆஷ்லே பார்ட்டி (ஆஸ்திரேலியா), மகரோவா (ரஷியா), எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), அரினா சபலென்கா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 55-வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ் 5-7, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் 4-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வீழ்த்தி 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செர்பியா) 4-6, 6-2, 6-1 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் அட்ரியன் மன்னாரினோவை தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார்.  incinnati #GarbineMuguruza #LesiaTsurenko
    தேனியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. #LoyolaCollege #Champion
    தேனி:

    தேனி எல்.எஸ்.எல்.மில் கூடைப்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 27-ந்தேதி தொடங்கியது. இந்த போட்டிகளில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்றன. இதில் 4 அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. நேற்று அரையிறுதி போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டி நடந்தது. இதில் சென்னை லயோலா கல்லூரி அணியும், சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியும் வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

    பரபரப்பான இறுதிப் போட்டி மாலையில் நடந்தது. ஆரம்பம் முதலே லயோலா கல்லூரி அணி ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இறுதியில் 73:44 என்ற புள்ளி கணக்கில் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணியை வீழ்த்தி லயோலா கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி 2-வது இடம் பிடித்தது. இந்த போட்டித் தொடரில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி 3-வது இடமும், சென்னை டி.ஜி. வைஸ்னவா கல்லூரி அணி 4-வது இடமும் பெற்றது.

    இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கி பாராட்டினார். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை எல்.எஸ்.எல்.மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், இணை நிர்வாக இயக்குனர் பிரபாகரன் மற்றும் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நிர்வாகிகள், கூடைப்பந்து கழக நிர்வாகிகள் செய்திருந்தனர். 
    மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப்போட்டியில் பாரதியார் (ஆத்தூர்) அணி, செயின்ட் மேரிஸ் (சேலம்) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    சென்னை:

    சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், சான் அகாடமி ஆதரவுடன் 2-வது மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் பாரதியார் (ஆத்தூர்) அணி 25-9, 25-18, 25-16 என்ற நேர்செட்டில் செயின்ட் மேரிஸ் (சேலம்) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    3-வது இடத்தை ரோட்லர் (சென்னை) அணியும், 4-வது இடத்தை ஜேப்பியார் (சென்னை) அணியும் பெற்றன. ஆண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் என்.ஜி.என்.ஜி. (பொள்ளாச்சி) அணி 25-20, 26-24, 25-17 என்ற நேர்செட்டில் காஜா மியான் (திருச்சி) அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் வேலம்மாள் (சென்னை) அணி 25-11, 25-23 என்ற நேர்செட்டில் சபர்பன் (கோவை) அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சிறந்த வீரர் விருதுக்கு நந்தகோபால் (என்.ஜி.என்.ஜி.), பாலகுமார் (வேலம்மாள்), ரிஜித் கண்ணா (என்.ஜி.என்.ஜி.) கோகுல் (காஜாமியான்), செல்வகணபதி (சபர்பன்) ஆகியோரும், சிறந்த வீராங்கனை விருதுக்கு எழில்மதி (பாரதியார்), ஜீவஜோதி (பிரசிடென்சி), சுவீனா (பாரதியார்), பிரியா (செயின்ட் மேரிஸ்), அனுப்பிரியா (ரோட்லர்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த வீரர்-வீராங்கனைகளுக்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு விருதுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    அத்துடன் முதல் 4 இடங்களை பிடித்த அணிகளுக்கு கோப்பையுடன், பரிசுகளும் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவுக்கு சான் அகாடமி அறங்காவலர் அர்ச்சனா ஆனந்த் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக சென்னை மாவட்ட கைப்பந்து சங்க சேர்மன் எஸ்.என்.ஜெயமுருகன், ரத்னா ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் எஸ்.ஆர்.சீனிவாசன், தமிழ்நாடு கைப்பந்து சங்க துணைசேர்மன் பி.பாலச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் டி.வசீகரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்கள். சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், பொருளாளர் ஏ.பழனியப்பன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். 
    சுசீந்திரன் அடுத்ததாக இயக்கும் `சாம்பியன்' படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கான காரணம் குறித்து சுசீந்திரன் டுவிட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளனர். #Champion #Suseenthiran
    விளையாட்டை மையப்படுத்திய வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா படங்களை தொடர்ந்து சுசீந்திரன் அடுத்ததாக `சாம்பியன்' என்ற படத்தை இயக்குகிறார். கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது. 

    இந்த நிலையில், இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாதது குறித்து இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    யுவன் ஷங்கர் - உடன் சாம்பியன் படத்தில் நான் பணியாற்ற முடியவில்லை... யுவன் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்... யுவனுடன் நான் பணியாற்ற முடியாத சூழ்நிலைக்கு காரணம் இப்பொழுது யுவனை சுற்றியுள்ள நண்பர்கள் தான் (புதிய நண்பர்கள்) காரணம்... இந்த தகவலை கூட நான் யுவனிடம் கூற முடியவில்லை. எதிர்காலத்தின் உறுதியாக நான் யுவனுடன் பணியாற்ற ஆவலுடன் உள்ளேன். 

    இவ்வாறு கூறியிருக்கிறார். 



    இந்த படத்தில் ரோஷன் என்ற புதுமுகம் நாயகனாகவும், மிருணாளினி நாயகியாகவும் நடிக்கிறார்கள். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன், ஆர்.கே.சுரேஷ், ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். அரோல் கொரலி இந்த படத்திற்கு இசையமைக்கிறார். #Champion #Suseenthiran

    சுசீந்திரன் இயக்கத்தில் விளையாட்டை மையப்படுத்தி உருவான வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா ஆகிய இரு படங்களும் வெற்றிபெற்ற நிலையில், தனது அடுத்த ஸ்போர்ஸ் படத்தை சுசீந்திரன் இன்று துவங்கியுள்ளார். #Champion
    சுசீந்திரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’.  இப்படம் எதிர்பார்த்தளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. இதனைத் தொடர்ந்து, புதுமுகங்களை வைத்து ‘ஏஞ்சலினா’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதேநேரத்தில் ‘ஜீனியஸ்’ என்ற படத்தையும் இயக்கி முடித்துவிட்டார்.

    இந்த நிலையில், சுசீந்திரன் அடுத்ததாக கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார். `சாம்பியன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியிருப்பதாக சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 



    சுசீந்திரன் கூறியிருப்பதாவது, 

    `இன்று கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து `சாம்பியன்' என்ற திரைப்படத்தை துவங்கி உள்ளோம். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் மூன்றாவது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இத்திரைப்படத்தில் ரோஷன் என்ற புதுதுமுக ஹீரோ அறிமுகமாகிறார். அஞ்சாதே நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளோம்' என்று கூறியிருக்கிறார். #Champion #Suseenthiran


    ×