search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகுருஜா"

    • நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.
    • 14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    22 கிராண்ட்சிலாம் பட்டம் வென்ற சாதனனயாளரும் , உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 3-வது சுற்று ஆட்டத்தில் பிரான்சை சேர்ந்த ரிச்சர்ட் கேஸ்குயிட்டை எதிர் கொண்டார்.

    இதில் நடால் 6-0 , 6-1, 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.கேஸ்குயிட்டுக்கு எதிரான 18 ஆட்டத்திலும் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

    நடால் 4-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ் டியாபோவை சந்திக்கிறார்.

    3-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3 , 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் ஜென்சனை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் 7-வது வரிசையில் உள்ள கேமரூன் நோரி (இங்கிலாந்து), 9-ம் நிலை வீரரான ரூபலேவ் (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

    14-வது வரிசையில் உள்ள டியாகோ சுவார்ட்ஸ மேன் ( அர்ஜென்டினா ) 3-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து) 3-வது சுற்றில் அமெரிக்காவை சேர்ந்த லாரன் டோவிசை எதிர்கொண்டார். இதில் இகா 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்னொரு ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா 6-2 , 6-7 (6-8), 6-0 என்ற நேர் செட் கணக்கில் யூவானை (சீனா) வீழ்த்தினார்.

    மற்ற ஆட்டங்களில் முன்னணி வீராங்கனைகளான ஷபலென்கா, அசரென்கா (பெலாரஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.

    9-வது வரிசையில் உள்ள கார்பன் முகுருஜா (ஸ்பெயின்) 7-5, 3-6, 6-7 (10-12) என்ற கணக்கில் பெட்ரோ கிவிட்டோவிடம் (செக்குடியரசு) தோற்றார்.

    இதேபோல் 13-வது வரிசையில் உள்ள பெலிண்டா பென்சிக்கும் (கனடா) அதிர்ச்சிகரமாக தோற்றார்.

    ×