search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "case"

    • சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என வகுப்பு ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே புளியம்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அதே பகுதியை சேர்ந்த சகோதரர்கள் 7 மற்றும் 6-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 6-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் 7-ம் வகுப்பு படிக்கும் அண்ணனின் வகுப்பிற்கு சென்று அவரை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து நேற்று பள்ளி யின் 7-ம் வகுப்பு ஆசிரியர் அன்புமணி 6-ம் வகுப்பிற்கு சென்று சம்பந்தப்பட்ட மாணவரின் சட்டையை கழற்ற வைத்து முதுகில் சரமாரியாக அடித்துள்ளார். மாணவன் கதறி அழுத நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார்.

    இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற மாணவரின் முதுகு வீங்கி இருந்ததை பார்த்த பெற்றோர் விசாரித்தபோது சிறுவன் நடந்தவற்றை கூறியுள்ளான். இதையடுத்து அவனை ஓமலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த பெற்றோர் ஆசிரியர் அன்புமணி மீது ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் அன்புமணி மீது தாக்குதல் நடத்துவது, கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொளத்தூர்:

    சென்னை பெரவள்ளூர், கே.சி. கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் இம்மானுவேல்(25). இவர் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

    இந்நிலையில் நேற்று மாலை திரு.வி.க. நகர் போலீஸ் நிலையத்திற்கு திடீரென இமானுவேல் வந்தார். அப்போது அவர் போலீசார் தன் மீது அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறியபடி பிளேடால் கழுத்து மற்றும் இடது கையை அறுத்துக் கொண்டார்.

    இதில் அவர் ரத்தம் சிந்தியபடி மயங்கி விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை மீட்டு பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இம்மானுவேலுக்கு 20 தையல்கள் போடப்பட்டது. அவருக்கு அங்கு தொடர்ந்து சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து திரு.வி.க. நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதவன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த ஆனந்த் கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தர பாண்டியபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.

    இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கனகராஜத்தை தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.

    இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமியை இழுத்து சென்று கோவிலில் கட்டாய திருமணம்
    • பலாத்காரம் செய்ததால் 6 மாதம் கர்ப்பமானாள்

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி.

    கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் வீட்டிற்கு தெரிய வரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனையடுத்து பிரகாஷ் சிறுமியை அழைத்து சென்றார். பின்னர் கடந்த ஜனவரி மாதம் 23 -ந் தேதி அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து சிறுமியை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்ததும் அவரது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார். அங்கு வைத்து பிரகாஷ் சிறுமியை பலாத்காரம் செய்தார். தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதனை நோட்டமிட்ட அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் சிறுமியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சிறுமி 17 வயதில் கர்ப்பமானது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் 17 வயது சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு

    கறம்பக்குடி, 

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர். கடந்த தீபாவளி அன்று இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே பாடகர் பிரகாஷ் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

    இதை தொடர்ந்து அவரை தாக்கியதாக 4 பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 294 பி(பிறருக்கு தொல்லை தரும் வகையில் பொது இடத்தில அவதூறாக பேசுவது), 324 (ஆயுதத்தால் தாக்குவது), 341(வழிமறித்து தடுப்பது) மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவர் மீது வழக்கு

     வேலாயுதம் பாளையம்,  

    கரூர் மாவட்டம் பாலத்துறை அருகே உள்ள பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா ,பான்பராக் ,ஹான்ஸ் மற்றும் பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்து சென்று சோதனை செய்த போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பான் மசாலா, குட்கா, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது .

    இதன் பேரில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த பாலத்துறை பகுதியை சேர்ந்த மணி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கிராமிய பாடகரை தாக்கிய 4 பேர் மீது வன்கொடுமை வழக்கு

    கறம்பக்குடி,  

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையுர் ஆயிப்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது27). கிராமிய பாடகர்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த கணேசன் மகன் கபிலனை அழைத்துக் கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    மோலுடையான்பட்டி பிரிவு சாலையில் சென்ற போது, அதிரான்விடுதியை சேர்ந்த தேவா மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் பிரகாஷ் வந்த வாகனத்தை வழிமறித்து நிறுத்தினர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் பிரகாஷையும், கபிலனையும் தாக்கியுள்ளனர்.

    இதில் காயம் அடைந்த இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்ைச பெற்று வருகின்றனர்.

    இதற்கிடையே இவர்கள் கொடுத்த புகாரின் பேரில் மழையூர் போலீசார் 4 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

    • வேலாயுதம்பாளையத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த விவசாயி மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்ததால் போலீசார் நடவடிக்கை

    கரூர், 

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நொய்யல்-வேலாயுதம்பாளையம் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கந்தம்பாளையம் பகுதியில் உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நேரத்திற்கு பிறகும் காலை 8 மணிக்கு மேல் பட்டாசுகளை வைத்து நீண்ட நேரமாக வெடித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த போலீசார் நீண்ட நேரமாக அரசு அனுமதியின்றி பட்டாசுகளை வெடித்துக் கொண்டிருந்த கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (59) என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார்.
    • விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நகர தெற்கு தி.மு.க செயலாளராக இருந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி சுனோதா. இவர் கம்பம் நகர்மன்ற தலைவியாக உள்ளார். செல்வக்குமார் நியோமேக்ஸ் தனியார் நிறுவனத்தில் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்து கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் அதிகளவில் முதலீடுகளை பெற்றார்.

    மேலும் தனியார் பல்பொருள் அங்காடி, பேஷன்ஸ் கடை ஆகிய நிறுவனங்களையும் கம்பத்தில் நடத்தி வந்தார். இந்நிலையில் நியோமேக்ஸ் நிறுவனம் பொதுமக்களிடமிருந்து பெற்ற வைப்புத்தொகையை திருப்பித்தராமல் இழுத்தடிப்பு செய்வதாக தேனி, மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் 100-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன.

    இதனிடையே செல்வக்குமார் உசிலம்பட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 2-ந்தேதி சரணடைந்தார். இவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நவம்பர் 8-ந்தேதி விசாரித்து வாக்குமூலம் பெற்று அதனடிப்படையில் கம்பத்தில் உள்ள அவரது வீட்டில் துணை கண்காணிப்பாளர் மணிஷா தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ரூ.5.50 லட்சம் ரொக்கம், 46.200 கிராம் தங்கம், 139.800 கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.5.80 லட்சமாகும். விசாரணைக்கு பிறகு மீண்டும் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 6 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த மாதம் 30 -ந் தேதி கல் குவாரி உரிமம் கோரி ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தாக்கியும், அரசு அலுவலகங்களில் உள்ள தளவாடப் பொருள்களை அடித்து, உடைத்து சேதப்படுத்திய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போலீசாரிடம் உரிய அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், கட்சியின் அமைப்புச் செயலாளர் அருணாசலம், எம்ஜிஆர் அணி மாவட்டச் செயலாளர் எம்.என். ராஜாராம், முன்னாள் அமைச்சர் மோகன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்பட 16 பேர் மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    • சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோவில் வழக்கு
    • சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    கரூர்,நவ. 9-

    க.பரமத்தி அருகே, சிறுமியை திருமணம் செய்து கொண்டு, கர்ப்பமாக்கிய வாலிபர் மீது, போக்சோ சட்டத்தின் கீழ், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    கரூர் மாவட்டம், க.பரமத்தி காருடையாம்பாளையம் பகுதியை சேர்ந்த அழகிரி என்பவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுமி தற்போது, 3 மாத கர்ப்பமாக உள்ளார்.

    இதுகுறித்து, க.பரமத்தி பஞ்., யூனியன் பெண்கள் நல அலுவலர் பத்மாதேவி கொடுத்த புகார்படி, கரூர் ரூரல் மகளிர் போலீசார், மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • தீபாவளி கூட்டத்தை பயன்படுத்தி ஜவுளி கடையில் வாடிக்கையாளரிடம் திருடப்பட்டது.
    • தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் பொதுமக்கள் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மதுரை விளக்குத்தூண் பகுதியில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் திருடுவது அதிகரித்துள்ளது.

    மதுரை அனுப்பானடி டீச்சர் காலனி தியாகராஜர் நகரை சேர்ந்தவர் நாகேந்திரன். இவரது மனைவி தேன்மொழி (33). இவர் சம்பவத்தன்று புத்தாடை வாங்க தெற்குமாசி வீதியில் உள்ள பிரபல ஜவுளி கடைக்கு சென்றிருந்தார். அங்கு கூட்டம் அலைமோதியது. அதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் தேன்மொழி வைத்திருந்த பர்சை திருடி சென்றனர். அதில் ரூ.1000 ரொக்கம், 1 ஜோடி வெள்ளி கொலுசு, வெள்ளி நகைகள் இருந்தன.

    இதுகுறித்து அவர் தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 பெண்கள் தேன்மொ ழியிடம் திருடியது தெரிய வந்தது.

    தொடர் விசாரணையில் அவர்கள் ஆதிமூலம் பிள்ளை அக்ரஹாரத்தை சேர்ந்த சுமதி (35), கோயம்புத்தூர் மதுக்கரையை சேர்ந்த லெட்சுமி (30) என தெரியவந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    ×