பாதையை அடைத்த தகராறு : தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்

மாதவன் வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த ஆனந்த் கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது. இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
பாதையை அடைத்த தகராறு : தட்டிக்கேட்ட பெண் மீது தாக்குதல்
Published on

களக்காடு:

திருக்குறுங்குடி அடுத்துள்ள சுந்தர பாண்டியபுரம், தெற்கு தெருவை சேர்ந்தவர் மாதவன். இவரது வீட்டிற்கு செல்லும் வழிப்பாதையை அதே தெருவை சேர்ந்த வேல்பாண்டி மகன் ஆனந்த் (22) கல் போட்டு அடைத்ததாக கூறப்படுகிறது.

இதனை மாதவனின் மனைவி கனகராஜம் தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்த், கனகராஜத்தை தாக்கினாராம். மேலும் அவரது கணவர் மாதவனை அவதூறாக பேசி கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஆனந்த் அதே பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் மணிகண்டன், அருணாசலம் மகன் மனோகரன் ஆகியோர் சேர்ந்து தன்னை தாக்கியதாக திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்துள்ளார்.

இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com