search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cancel"

    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை காய் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விவசாயிகள் திங்கள் அன்று தங்களது தேங்காய் பருப்புகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள். நாளை மே 1 விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை 2-ந் தேதி நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது. அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும்.
    • மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது

    மதுக்கூர்:

    அண்மையில் மத்திய அரசு காவேரி டெல்டா பகுதிகள் உள்ளடக்கிய பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை அறிவித்தது.

    இந்த திட்டத்தால் காவேரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதிக்கபடும் என்பதால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தது.

    மேலும் இந்த டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த திட்டத்தை தற்போது கைவிடுவதாக அறிவித்தது.

    இதைத் தொடர்ந்து மதுக்கூர் ஒன்றியம் கீழக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரகிராமத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் ெபாது மக்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    மேலும் இந்தத் திட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். 

    • மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
    • சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார்.

    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்த சேவாலயம் என்ற சிறுவர் காப்பகம் செயல்பட்டு வந்தது. இங்கு 15 சிறுவர்கள் தங்கி அரசு பள்ளிகளில் படித்து வந்தனர்.கடந்த 5ந் தேதி இரவு உணவு மற்றும் இனிப்பு சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு வாந்தி மயக்கமும் ஏற்பட்டது.இதில் மாதேஷ்(வயது 14), அத்தீஷ் (11), பாபு (10) ஆகிய 3 சிறுவர்கள் பலியாகினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று திரும்பினர். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆய்வு செய்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் ரஞ்சிதா பிரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

    கலெக்டர் வினீத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. விசாரணை முடிவில் ஆய்வறிக்கை சென்னையில் உள்ள சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வளர்மதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் கூறுகையில் ,ஆய்வின் அடிப்படையில் முதல்கட்டமாக ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் பூட்டப்பட்டது. சிறுவர் நலனை கருத்தில் கொள்ளாமல் கவனக்குறைவாக சேவாலயம் நடத்தப்பட்டு வந்துள்ளது.சிறுவர்கள் தங்குவதற்கு தகுதியற்ற நிலையில் இருப்பதும் ஆய்வில் தெரியவந்தது. சேவாலய உரிமத்தை ரத்து செய்யுமாறு ஆய்வறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

    • கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும்.
    • இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.

     திருப்பூர்:

    ஈரோடு ரெயில் நிலையம் அருகே பொறியியல் பணி நடைபெறுவதால் கோவை-சேலம் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் தினமும் காலை 9.05 மணிக்கு புறப்–படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இதுபோல் சேலம்-கோவை தினசரி ரெயில் (எண்.06803) சேலத்தில் தினமும் மதியம் 1.40 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 29-ந் தேதி வரை முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.
    • இதனால் மதுரை-செங்கோட்டை ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை ரத்தாகிறது.

    நெல்லை:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சங்கரன் கோவில் பிரிவில் ெரயில் பாதை பலப்படுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.

    இதுதொடர்பாக ஏற்கனவே தென்னக ரெயில்வே மதுரை கோட்டம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை முதல் பணிகள் தொடங்கின.

    இதன் காரணமாக மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை-செங்கோட்டை (06663), செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) ஆகிய முன்பதிவு இல்லாத 2 சிறப்பு ெரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டன.

    இந்த ரெயில்கள் வருகிற 31-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
    • இத்தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை-திருப்பூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கோவை-சேலம் பயணிகள் தினசரி ரெயில் (எண்.06802) கோவையில் இருந்து தினமும் காலை 9.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல் சேலம்-கோவை ரெயில் (எண்.06803) வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும்.
    • வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    கோவை

    பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரவாரம் கொப்பரை ஏலம் நடைபெறும். இங்கு பொள்ளாச்சி மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து கொப்பரையை எலத்துக்கு எடுத்து செல்வார்கள்.

    வாரம் தோறும் லட்சக்கணகான ரூபாய்க்கு கொப்பரை ஏலம் போகும். இந்த நிலையில் இந்த வருடம் கொப்பரை ஏலம் நடைபெரும் நாளான செவ்வாய்க்கிழமை சரஸ்வதி பூஜை வர உள்ளது. இதனால் வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜையொட்டி கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது,

    ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமைகளில், ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொப்பரை ஏலம் நடத்தப்படுகிறது.

    இதில், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொப்பரை மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்து ஏலத்தில் பங்கேற்பது வழக்கம். வரும் 4-ந் தேதி சரஸ்வதி பூஜை விடுமுறை தினம் என்பதால், அன்றைய தினம் நடத்தப்பட இருந்த கொப்பரை ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 11-ம் தேதி வழக்கம்போல ஏலம் நடைபெறும் என்றார்.

    • மேதாவி போல பேச வேண்டாம் கொடுக்க மனமில்லாத உங்களுக்கு மக்கள் பதிலடி தருவார்கள் என நிதி அமைச்சருக்கு ஆர்.பி.உதயகுமார் பதில் அளித்தார்.
    • ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது.

    மதுரை

    மதுரையில் 29-ந் தேதி நடைபெறும் அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று பேசுகிறார்.இது தொடர்பாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடந்தது.இதில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது:-

    வருகிற 29-ந் தேதி அ.தி.மு.க. இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மதுரை மாநகர், புறநகர் மேற்கு, புறநகர் கிழக்கு ஆகிய மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்.

    அவருக்கு எழுச்சி மிகுந்த வரவேற்பு அளிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடு செய்ய வேண்டும், 29-ந் தேதி காலை விமானம் மூலம் மதுரைக்கு வருகிறார். விருதுநகர் செல்லும் வழியில் கரிசல்பட்டியில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்படுகிறது,

    அதேபோல் மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் திரளானோர் பங்கேற்க வேண்டும்.

    நிதியமைச்சர் சில குற்றச்சாட்டுகளை கூறியு ள்ளார்.

    நிதி மேலாண்மை குறித்து அறிந்துள்ள நிதி அமைச்சருக்கு மக்களுடைய நாடி துடிப்பு தெரியவில்லை. 4 தலைமுறை அரசியல் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்த நீங்கள் 30 ஆண்டுகளாக ஏன் கம்பெனியில் இருந்தீர்கள்?

    30 ஆண்டு காலம் கம்பெனியில் ஊதியம் பெற்ற நிதி அமைச்சருக்கு அரசியல் வேறு, கம்பெனி வேறு என்பது தெரியவில்லை.

    தி.மு.க. ஆட்சியில் 2021-22-ம் ஆண்டில் மட்டும் ரூ.1 லட்சத்து ரூ.8 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது, 2022-23-ம் ஆண்டில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி வாங்க அறிவிக்கப்பட்டது ஆக இந்த 1 1/2 ஆண்டு காலத்தில் ரூ. 2 லட்சத்து 28 ஆயிரம் கோடி கடன் வாங்கி உள்ளீர்கள்? வாங்கிய கடனுக்காக எந்த மூலதன செலவிற்கு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?

    நிதி அமைச்சர் பேச்சில் வல்லவராக இருக்கலாம். செயல் வடிவில் அல்ல. உங்களுக்கு முன்பே அமைச்சராகி நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்துள்ளோம்.

    நீங்கள் மட்டுமே மேதாவி என்பது போல் பேசக்கூடாது. 10 வருடங்கள் அமைச்சராக இருந்த எனக்கு அடிப்படை கூட தெரிய வில்லை என்று நிதி அமைச்சர் கூறுகிறார்.

    தற்போது மின் கட்டணம் உயர்த்த ப்பட்டுள்ள து, சொத்துவரி உயர்த்தப்ப ட்டுள்ளது இந்த நிதி எல்லாம் எங்கே போய் சேரும்? அந்தத் துறைகளுக்கு தானே சேரும்? அதுவும் தமிழ்நாடு அரசு தானே? அந்த துறைக்கு அமைச்சராக இருப்பவர் நேரு தானே? நலத்தி ட்டத்துக்கான அந்த வருவாய் செய ல்படுத்த ப்படுகிறது என்பது எல்லா மக்களுக்கும் தெரியும்.

    கொடுக்க மனமில்லை என்று சொல்லுங்கள். அதற்கு தகுந்த பதிலடியை மக்கள் உங்களுக்கு வழங்குவார்கள். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மடிக்கணினி வழங்கும் திட்டம், இருசக்கர வாகனம் வழங்கும் திட்டங்கள் அ.தி.மு.க. ஆட்சியில் ரத்து செய்துள்ளதாக நிதி அமைச்சர் கூறியுள்ளார்.

    கொரோனோ பேரிடர் காலத்தில் தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இருசக்கர வாகனம் வாங்கும் திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டதே தவிர, திட்டத்தை ரத்து செய்யவில்லை. பேரிடர் காலங்களில் திட்டங்களை தள்ளி வைத்தது வேறு. தற்போது கொள்கை ரீதியாக திட்டங்களை ரத்து செய்துள்ளது வேறு. ஆனால் இன்றைக்கு திட்டங்களை தி.மு.க. அரசு ரத்து செய்துள்ளது. திட்டங்களை அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்டதாக நிதி அமைச்சர் கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை ரெயில்கள் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.
    • செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    தென்காசி:

    மதுரை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக வருகிற 15-ந்தேதி வரை ரெயில்கள் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன.

    அறிவிப்பு வாபஸ்

    அதன்படி ராஜபாளையம் - சங்கரன்கோவில் பிரிவில் ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை- செங்கோட்டை-மதுரை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் (06663/06664) வருகிற 15-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    தற்பொழுது அந்த பராமரிப்பு பணிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மதுரை - செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில்கள் வழக்கம் போல இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசி வருகிறது.
    • ஊட்டியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.

    கோவை

    சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக நீலகிரி மலை ரெயில் நிலையத்தின் கெட்டி - லவ்டேல் ரெயில் நிலையங்களுக்கு இடையே, தண்டவாளத்தில் மரம் விழுந்து, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டது.இதன் காரணமாக இன்று குன்னூரில் இருந்து 07.45 மணிக்கு புறப்பட்ட ரெயில் கெட்டி - ஊட்டி இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஊட்டி- குன்னூர் ரெயில் இன்று 09.15 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்படத் திட்டமிடப்பட்டது, ஆனால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தினர்.
    • தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தபடி மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் நல சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரத்னா தலைமை தாங்கினார்.

    இதில் தமிழக அரசு அறிவித்துள்ள தற்காலிக ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை அந்த பணியிடத்தில் நிரந்தரமாக நியமிக்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்தபடி மறு நியமன தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதற்கு நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

    • 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.
    • 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 1905-ம் ஆண்டு முதல் புகழ்பெற்ற குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டில் ஊட்டியில் குதிரை பந்தயம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கியது. போட்டியில் கலந்துகொள்ள பெங்களூரு, மும்பை, ஐதராபாத், சென்னை, புனே போன்ற இடங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட குதிரைகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டன.

    தினமும் காலை, மாலையில் குதிரைகளுக்கு நடைபயிற்சி அளிக்கப்பட்டது. 7 வெளியூர் பயிற்சியாளர்கள் உள்பட 30 குதிரை பயிற்சியாளர்கள் மற்றும் 30 ஜாக்கிகள் பங்கேற்றனர். முக்கிய பந்தயங்களான கடந்த 7-ந் தேதி தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ், தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ் போட்டி மே 1-ந் தேதி, தி நீல்கிரிஸ் டர்பி ஸ்டேக்ஸ் போட்டி மே 26-ந் தேதி நடந்தது.

    மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. இந்தநிலையில் நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதான ஓடுதளம் சேதமடைந்தது.

    இதனால் நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்பட மீதமிருந்த பந்தயங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.



     


    ×