search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய் பருப்பு ஏலம்"

    • காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.
    • ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார்.

    முத்தூர்:

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் ஏலம் போனது.

    திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகரம், கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு மறைமுக ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 4 விவசாயிகள் 8 மூட்டைகள் (338 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் காங்கயம், வெள்ளகோவில், முத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை வாங்க வந்திருந்தனர். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிக பட்சமாக ஒரு கிலோ ரூ.92-க்கும், குறைந்த பட்சமாக ரூ.50-க்கும், சராசரியாக ரூ.90- க்கும் ஏலம் போனது. ஏலத்திற்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் செய்திருந்தார். 

    • விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 13 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 13 ஆயிரத்து 475 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.89-க்கும், குறைந்தபட்சமாக 63.79- க்கும்,சராசரியாக ரூ.74.99-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.9 லட்சத்து 43 ஆயிரத்து 250- க்கு ஏலம் நடைபெற்றது.

    வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 900 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 86.89- க்கும் குறைந்தபட்சமாக ரூ 58.99- க்கும், சராசரியாக ரூ 74.09- க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 3 லட்சத்து 88 ஆயிரத்து 369- க்கு ஏலம் நடைபெற்றது.

    • தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 036-க்கு விற்பனையானது.

    மொடக்குறிச்சி:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 118 மூட்டைகள் கொண்ட 4 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது. விற்பனையான பருப்பில்

    முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.79.79 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.81.09 காசுகள், சராசரி விலையாக ரூ.80.76 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.60.90 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.29 காசுகள், சராசரி விலையாக ரூ.71.05 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.3 லட்சத்து 62 ஆயிரத்து 036-க்கு விற்பனையானது.

    • தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் 991 மூட்டைகள் கொண்ட 47 ஆயிரத்து 206 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல்தர தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.09 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.79.49 காசுகள், சராசரி விலையாக ரூ.78.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.61.85 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.45 காசுகள், சராசரி விலையாக ரூ.70.60 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

    • வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது.
    • பொது ஏலத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

    எடப்பாடி:

    கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய் பருப்பிற்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நாள் முழுதும் நடைபெற்ற பொது ஏலத்தில் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான தேங்காய் பருப்புகள் விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.7,525 முதல் ரூ.7,777 வரை விற்பனையானது. இதேபோல் இரண்டாம் ரக தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.4,300 முதல் ரூ.7,325 வரை விலை போனது. காங்கேயம், தாராபுரம், ஊத்துக்குளி, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்த வியாபாரிகள் தேங்காய் பருப்பினை அதிக அளவில் மொத்த கொள்முதல் செய்தனர்.

    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பு வியாழனன்று சூரியகாந்தி விதை, வெள்ளிக்கிழமை நிலக்கடலை காய் ஏலம் நடைபெறும்.

    இந்த ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை, நிலக்கடலை காய் விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விவசாயிகள் திங்கள் அன்று தங்களது தேங்காய் பருப்புகளை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வருவார்கள். நாளை மே 1 விடுமுறை தினம் என்பதால் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் செவ்வாய்க்கிழமை 2-ந் தேதி நடைபெறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறாது. அடுத்த வாரம் 9-ந் தேதி முதல் வழக்கம்போல் செவ்வாய் தோறும் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும்.

    இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

    • வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ஏலத்திற்கு 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.


    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வெங்கமேட்டில் மின்னணு தேசிய வேளாண்மை சந்தை (இ-நாம் செயலி) மூலம் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் நடைபெறற ஏலத்திற்கு 7 ஆயிரத்து 857 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.84.39-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.65-க்கும், சராசரியாக ரூ.84.39-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 99ஆயிரத்து 531-க்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 8 ஆயிரத்து 136 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

    இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.81.79-க்கும், குறைந்த பட்சமாக ரூ.51.19-க்கும், சராசரியாக ரூ.78.59-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட்சத்து 6 ஆயிரத்து 749-க்கு விற்பனை நடைபெற்றது.


    • தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ் வரன் தெரிவித்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று செவ்வாய்க்கிழமை 156 விவசாயிகள் கலந்து கொண்டு 76 ஆயிரத்து 299கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியைச் சேர்ந்த 15 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.20க்கும், குறைந்தபட்சம் ரூ.60. 10க்கும் கொள்முதல் செய்தனர், நேற்று மொத்தம் ரூ.55லட்சத்து 96ஆயிரத்து 518க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • 52 ஆயிரத்து 882கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு வாணியம்பாடி, மூலனூர், கரூர், ஸ்ரீரங்கம், திருச்சி பகுதி விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதை விற்பனைக்கு கொண்டு வருவார்கள், நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை 119விவசாயிகள் கலந்து கொண்டு 52 ஆயிரத்து 882கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில், வெள்ளகோவில், காங்கேயம், முத்தூர், ஊத்துக்குளி பகுதியை சேர்ந்த 8வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ரூ. 82.30க்கும், குறைந்தபட்சம் ரூ.59.10க்கும் கொள்முதல் செய்தனர்.

    மொத்தம் ரூ.38லட்சத்து 51ஆயிரத்து 665க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடேஸ்வரன் தெரிவித்தார்.

    • போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும்.வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.
    • போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், பெற்றோர்கள் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ப்ளூபேர்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தானகிருஷ்ணசாமி தலைமை வகித்தார். குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சித்ரா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி தாளாளர் ராமசாமி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி பேசுகையில்,போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும்.வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும்.

    பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும்.மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும். உங்களது பெற்றோர்கள், உறவினர்கள் போதை பழக்கத்தில் இருந்தால், அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விடுவிக்க முடியும். மேலும் போதைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், பெற்றோர்கள் மூலம் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்.

    மேலும் செல்போன், வீடியோ கேம் போன்ற எலக்ட்ரானிக் விளையாட்டுகளில் ஈடுபடுவதை தவிர்த்து, ஓடியாடி விளையாடுவதே உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில்,வழக்கறிஞர்கள், பள்ளி முதல்வர் ஹேமலதா மற்றும் மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
    • ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 88 ரூபாய் 88 காசுக்கும், சராசரி விலையாக 87 ரூபாய் 90 காசுக்கும்,

    இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 45 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 42 காசுக்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 89 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 7,401 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.
    • 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

    மொடக்குறிச்சி:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,660 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 81 ரூபாய் 47 காசுக்கும்,

    2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 85 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 9 காசுக்கும், சராசரி விலையாக 70 ரூபாய் 39 காசுக்கு ஏலம் போனது.

    மொத்தமாக 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

    ×