ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.
ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்துக்கு  தேங்காய் பருப்பு ஏலம்
Published on

மொடக்குறிச்சி:

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 1,660 தேங்காய் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 75 ரூபாய் 25 காசுக்கும், அதிகபட்ச விலையாக 82 ரூபாய் 10 காசுக்கும், சராசரி விலையாக 81 ரூபாய் 47 காசுக்கும்,

2-ம் தரம் குறைந்தபட்ச விலையாக 52 ரூபாய் 85 காசுக்கும், அதிகபட்ச விலையாக 73 ரூபாய் 9 காசுக்கும், சராசரி விலையாக 70 ரூபாய் 39 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 81,098 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.60 லட்சத்து 81 ஆயிரத்து 369-க்கு விற்பனை நடைபெற்றது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com