ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

மொடக்குறிச்சி:

மொடக்குறிச்சி ஒன்றியம் அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 159 தேங்காய்பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 84 ரூபாய் 49 காசுக்கும், அதிகபட்ச விலையாக 88 ரூபாய் 88 காசுக்கும், சராசரி விலையாக 87 ரூபாய் 90 காசுக்கும்,

இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக 63 ரூபாய் 45 காசுக்கும், அதிகபட்ச விலையாக 83 ரூபாய் 42 காசுக்கும், சராசரி விலையாக 78 ரூபாய் 89 காசுக்கு ஏலம் போனது.

மொத்தமாக 7,401 கிலோ எடையுள்ள தேங்காய்பருப்பு ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 130 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றதாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com