ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.
ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
Published on

எழுமாத்தூர்:

எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

இதில் 991 மூட்டைகள் கொண்ட 47 ஆயிரத்து 206 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

இதில் முதல்தர தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.75.09 காசுகள், அதிகபட்சவிலையாக ரூ.79.49 காசுகள், சராசரி விலையாக ரூ.78.89 காசுகள் என்ற விலைகளிலும்,

2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.61.85 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.72.45 காசுகள், சராசரி விலையாக ரூ.70.60 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.35 லட்சத்து 29 ஆயிரத்து 762-க்கு விற்பனையானது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com