search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "building"

    • பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
    • கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் கடந்த2017 ஆண்டு நபார்டு திட்டத்தின் கீழ் 20 லட்ச ரூபாய் செலவில் கால்நடை மருத்துவ மனைக்காக புதியதாக கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டது.

    கால்நடை மருத்துவமனை திறந்து சில ஆண்டுகளிலியே கட்டிடத்தின்வெளி மற்றும் உட்பகுதியில் பல இடங்களில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    தற்போது கட்டிடத்தின் பல பகுதிகளில் பெரிய அளவில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

    அரசின் நிதிமூலம் கட்டபட்ட கட்டிடம் சில ஆண்டுகளிலேயே விரிசல்ஏற்பட்டு விரைவிலேயே கட்டிடம் இடிந்து விடும்அபாயத்தில் உள்ளது என இப்பகுதியினர் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்

    மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறையினர் கட்டிடத்தை ஆய்வு செய்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பழுதான அந்த கட்டித்தை சீரமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஆலங்குடி போலீஸ் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள பாழடைந்த கட்டிடம் பாம்பு, விஷ ஜந்துக்கள் புகலிடமாக இருக்கின்றது
    • கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    ஆலங்குடி,

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகே துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகமும், போலீசார் குடியிருப்பும் உள்ளது. இதன் அருகே வருவாய்த்துறையினர் குடியிருந்த ஓட்டு கட்டிடம் உள்ளது. இந்தக் கட்டிடம் குடியிருப்பதற்கு தகுதியற்ற கட்டிடம் என்று காலி செய்து சுமார் 25 வருடங்களாக யாரும் பயன்படுத்தாமல் பாழடைந்த கட்டிடமாக உள்ளது. இதனை யாரும் பயன்படுத்தாத நிலையில், அங்கு பாம்பு போன்ற விஷ ஜந்துகள் அதிக அளவில் உள்ளன. இதனால் போலீஸ் குடியிருப்பில் உள்ள போலீசாரின் குடும்பத்தினரும் அவர்களது குழந்தைகளும் கட்டிடத்திற்கு அருகில் உள்ள பொது மக்களின் குடும்பத்தினரும் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

    எந்தவித பயன்பாடும் இல்லாத இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கோ குழந்தைகளுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன்பே உடனடியாக இந்தப் பாழடைந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்பது இங்குள்ள குடியிருப்பு வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

    • சுகாதார நிலையம் பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.
    • வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மதுரை

    மனிதநேய மக்கள் கட்சியின் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் கலந்தர் ஆசிக் அகமது என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அஞ்சுகோட்டை அரசு துணை சுகாதார நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது.

    இந்த துணை சுகாதார நிலையத்தில் தங்கி பணிபுரியும் வகையில் கிராம சுகாதார செவிலியர் ஒருவரும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் ஒரு செவிலியரும் அங்கு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த துணை சுகாதார நிலைய எல்கைக்குள் உள்ள அஞ்சுகோட்டை, மேலக்கோட்டை, பொட்டக்கோட்டை, கரையக்கோட்டை, வாணியேந்தல், செங்கமடை, அழகமடை, குஞ்சங்குளம், வெளியங்குடி உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சளி, காய்ச்சல், விஷ வண்டுகள், பாம்புகள் கடித்தல் உள்ளிட்ட நோய்களுக்காக இங்கு வரும் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உள்பட அனைவருக்கும் முதலுதவி சிகிச்சையும், அந்த பகுதி கர்ப்பிணி பெண்களுக்கு மகப்பேறு கால சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் இந்த துணை சுகாதார நிலைய கட்டிடம் கட்டி பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் தற்சமயம் கட்டிட மேற்கூரையில் உள்ள சிமெண்ட் காரைகள் அடிக்கடி கீழே விழுந்து வருகிறது.

    இதனால் கடந்த சில மாதங்களாக அங்கு பணியில் உள்ள 2 செவிலி யர்களும் இந்த துணை சுகாதார நிலையத்திற்குள் வர அச்சப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடம் பெரும்பாலான நேரங்களில் பூட்டியே கிடக்கிறது. மேலும் கடந்த 2020-21-ம் ஆண்டுகளில் பருவ மழை காலங்களில் அப்பகுதியில் பெய்த தொடர் மழையால் இந்த கட்டிட சுவர்களில் மழைநீர் இறங்கி பழுதானதால் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    எந்த நேரத்திலும் இந்த கட்டிடம் இடிந்து கீழே விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அப்பகுதி மக்கள் விபத்து மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள திருவாடானை மருத்துவ மனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. போர்க்கால நடவடிக்கை யாக அஞ்சுகோட்டை துணை சுகாதார நிலைய கட்டிடத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் நோயாளிகளின் சிகிச்சை பெற வரும் சுகாதார நிலையம், பாழடைந்த கட்டிடத்தில் செயல்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அரசு வக்கீல் வஞ்சிக்கோட்டை, துணை சுகாதார நிலைய கட்டிடம் விரைவில் அகற்றப்பட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    விசாரணை முடிவில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தது குறித்து அரசு தரப்பில் வருகிற 8-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது?
    • உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது?

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீ தடுப்பு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

    கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடந்த இந்த பயிற்சியில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தீ தடுப்பு கருவியை (சிலிண்டர்) கொண்டு எரியும் தீயை எப்படி அணைப்பது என தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் பயிற்சி பெற்றார்.

    மேலும் தண்ணீரில் விழுந்தவர்களை எப்படி மீட்பது, உயர்ந்த கட்டிடங்களில் ஏறியவர்களை எப்படி கீழே இறக்குவது, தீ விபத்து ஏற்பட்டாலும், வெள்ள ப்பாதிப்பு ஏற்பட்டாலும் எப்படி செயல்பட வேண்டும் எனவும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமார் மேற்பா ர்வையில் தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
    • பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார்.

    பின்னர் தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசியாதவது:-

    செம்போடை ஊராட்சி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது.

    எனவே, சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மருதூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை, தெரு விளக்குகள் எரியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை.

    மேலும், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

    முள்ளியாறு, மானங்கொண்டான் வடிகால் ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.

    மேலும், ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    கோடியக்காடு எல்லை பகுதியான பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும் என உறுப்பினர்கள் பேசினர்.

    இதேபோல உறுப்பி னர்கள் ருக்மணி, அருள் மேரி, வேதரெத்தினம், கோமதி, தனபால் உள்பட கவுன்சிலர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    தலைவர் கமலாஅன்பழகன்:-

    ஒன்றிய பகுதிகளில் சாலைப்பணிகள் உள்பட தேவையான வளர்ச்சி பணிகள் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் கட்சிப்பா குபாடின்றி செய்யப்படும் என்றார்.

    கூட்டத்தில் மின்சாரம், நெடுஞ்சாலை, சமூக நலத்துறைகளின் அதிகாரிகளும், ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • கடந்த 2 ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • 2 புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகில் நகர தி.மு.க சார்பில் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார், மலர்விழி திருமாவளவன், பஞ்சுகுமார், நகர சபை தலைவர் துர்கா ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி நகர செயலாளர் சுப்பராயன் வரவேற்பு பேசினார். கூட்டத்தில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து சிறப்புரையாற்றினார்.

    தொடர்ந்து அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில்,

    சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாவட்ட அரசு இசைப்பள்ளி கட்டிடம், புதிய நூலக கட்டிடம், உதவி கலெக்டர் அலுவலக கட்டிடம் உள்ளிட்ட கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதே போல் தொகுதி முழுவதும் வகுப்பறை கட்டிடம், அங்கன்வாடி மைய கட்டிடம், நியாய விலை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள்கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

    கொள்ளிட ஆற்றுக் கரையில் வசிக்கும் மக்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு புயல் பாதுகாப்பு மைய கட்டிடம் ரூ.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது. மக்களைப் பற்றி சிந்திக்கும் ஒரே அரசு தி.மு.க அரசு தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் சீர்காழி ஒன்றிய குழு தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் அலெக்ஸாண்டர், மாவட்ட அறங்காவல் குழு தலைவர் சுவாமிநாதன், நகர நிர்வாகிகள் பந்தல்முத்து, பாஸ்கரன், சங்கர், செல்வமுத்துக்குமார், சரவணன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக், பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் கவுதமன் நன்றி கூறினார்.

    • வள்ளுவக்குடியில் ஊராட்சி அலுவலக கட்டடம் சேதமடைந்துள்ளது.
    • ரூ.42 லட்சத்தில் புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வள்ளுவக்குடி ஊராட்சி மன்ற அலுவலக புதிய கட்டடம் உள்ளிட்டவைகளுக்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

    வள்ளுவக்குடி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் சேதம் ஏற்பட்டிருந்தது.

    இதனை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது.

    அதன் படி சீர்காழி ஊராட்சி ஒன்றியம் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.42லட்சத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் மற்றும் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பூமிபூஜை ஒன்றிய ஆணையர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.

    ஒன்றிய பொறியாளர் கலையரசன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக ஒன்றிய செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் முருகன், ஊரட்சி மன்ற தலைவர் பத்மா முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

    • குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டிடம் ரூ.13.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
    • சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிறைய சேவைகள் செய்து வருகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் புலிவலத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டிடம் சுமார் 13.7 லட்சம் மதிப்பீல், திருவாரூர் புலிவலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய பள்ளி கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து, சிறப்பு குழந்தைகளின் பயிற்சி பற்றியும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இங்கு பயிற்சி பெற்ற பள்ளிக்குழந்தைகளை மற்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு மேம்படுத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை வகித்தார்.

    திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாஓ.என்.ஜி.சி.குழுமபொது மேலாளர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஓ.என்.ஜி.சி.குழும பொது மேலாளர் மாறன் இது மாதிரி பள்ளிகள் கட்டியதில் எங்கள் நிறுவனம் உண்மை யில் பெருமை கொள்கிறது.

    இந்த வாய்ப்பை அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிறைய சேவைகள் செய்து வருகிறோம்.

    இன்னும் சமுக பணியை செய்யவிருக்கிறோம் என்பதை தெரிவிப்பதோடு மாவட்டஒன்றிய நிர்வாகத்திற்கும்பள்ளி கல்வித்துறைக்கும்நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன், வட்டாட்சியர் நக்கீரன்,வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமனியன் ஓ.என்.ஜி.சிபொதுமேலாளர் சரவணன், பிரபாகரன்சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய்கண்ணன் முதன்மை பொறியாளர் மாரிநலநாதன், சி.எஸ். ஆர். திட்ட ஒருங்கிணை ப்பாளர் முருகானந்தம்புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தவுலத் இக்பால், ஊராட்சி துணைத்தலைவர் மக்கள் கார்த்தி கல்வி அலுவலர்கள் இளங்கோவன், செல்வம் மேற்பார்வையாளர் சாந்தி,மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் புவனாபயிற்சி ஆசிரியர்கள் சாந்தி ,மது மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அர்மேனியன் தெருவில் 60 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து நேற்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி, தீயணைப்பு, போலீஸ் உள்ளிட்ட துறை ஊழியர்கள் 300 பேர் ஈடுபட்டனர்.

    சென்னை:

    சென்னை பாரிமுனையில் அர்மேனியன் தெருவில் 60 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து நேற்று விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. கட்டிட இடிபாடுகளில் யாரும் சிக்கி இருக்கிறார்களா என தீயணைப்பு படை வீரர்கள், தேசிய பேரிடர் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஒரு சில வாகனங்கள் சேதம் அடைந்ததை தவிர எவ்வித பாதிப்பும் ஏற்பட வில்லை. 4 மாடிகளை கொண்ட பழமையான அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து அதனை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி, தீயணைப்பு, போலீஸ் உள்ளிட்ட துறை ஊழியர்கள் 300 பேர் ஈடுபட்டனர்.

    அமைச்சர் கே.என்.நேரு, மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.

    மீட்பு பணி நள்ளிரவு வரை நடைபெற்றது. கட்டிட கழிவுகள் 77 லாரிகள் மூலம் அகற்றப்பட்டன. அந்த பகுதியில் இருந்து கட்டிட கழிவுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன. ஜே.சி.பி. எந்திரங்கள் உதவி யுடன் அதிவிரைவாக மீட்பு பணி நடந்து முடிந்துள்ளது.

    கபிலர்மலை அருகே கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள செம்மடைபாளையத்தை சேர்ந்தவர் பாபு (வயது27), கட்டிட தொழிலாளி.இவரது மனைவி சூர்யா (23). பாபு கடந்த இரண்டு வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகிறது. 

    இந்த நிலையில் கணவன், மனைவி இருவரும் பாபுவின் சொந்த ஊரான பரமத்தி அருகே உள்ள பிள்ளைகளைத்தூரில் தனது பெரியப்பா வீடு அருகே வாடகை வீடு எடுத்து கடந்த 4 மாதங்களாக தங்கியிருந்தனர். 

    கடந்த 1-ந் தேதி பாபுவின் மனைவி சூர்யா வேலைக்கு சென்று விட்டு மீண்டும் மாலை வீட்டிற்கு வந்த போது தனது கணவர் வீட்டில் துப்பட்டாவால் தொங்கிக்கொண்டிருந்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

    பின்னர் அவரை  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் பாபு ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    தகவல்‌ அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    மேலும் சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் உத்தரவுப்படி இடிக்கப்பட்டது.
    குமாரபாளையம்:

     குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் சேதமானதால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடியே 28 லட்சம் மதிப்பில் தினசரி காய்கறி மார்க்கெட் கட்டிடம் கட்டப்பட உள்ளது. 

    கட்டு–மான பணிகள் முடியும் வரை தற்காலிகமாக மார்க்கெட் பஸ் ஸ்டாண்டில்  அமைக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற பூமி பூஜையும் போடப்பட்டது. 

    பணிகள் துரிதமாக நடைபெற பழைய மார்க்கெட் கட்டிடம் சேர்மன் விஜய்கண்ணன் உத்திரவுப்படி இடிக்கப்பட்டது.
    புதியம்புத்தூர் அருகே புதுப்பிக்கப்பட்ட கூட்டுறவு சங்க கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    புதியம்புத்தூர்:

    புதியம்புத்தூர்-தட்டப்பறை ரோட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு நாணய சங்க கட்டிடம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இதனால் இந்த வளாகத்தின் பின் பகுதியில் உள்ள குடோனில் தொடக்க கூட்டுறவு வங்கி செயல்பட்டு வந்தது. தற்போது சங்க கட்டிட பணி முடிந்து 6 மாதம் ஆகியும் வங்கி கட்டிடம் திறக்கப்படவில்லை. 

    குடோனில் வங்கி செயல்படுவதால் விவசாயிகளுக்கு விற்பனை செய்யக்கூடிய பொட்டாஷ், யூரியா போன்ற உரங்கள் வைக்க இடமில்லாமல் உரங்களை வாங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இப்பகுதி விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு உரங்களை வாங்க வேண்டியது உள்ளது. 

    விவசாயிகள் இந்த குடோனில் விவசாய பொருட்களை வைக்க முடிவதில்லை. எனவே புதுப்பிக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் கூட்டுறவு சங்கத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×