search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    X

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தலைவர் கமலா அன்பழகன் பேசினார்.

    ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

    • பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
    • பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார்.

    பின்னர் தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசியாதவது:-

    செம்போடை ஊராட்சி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது.

    எனவே, சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மருதூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை, தெரு விளக்குகள் எரியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை.

    மேலும், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

    முள்ளியாறு, மானங்கொண்டான் வடிகால் ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.

    மேலும், ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    கோடியக்காடு எல்லை பகுதியான பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும் என உறுப்பினர்கள் பேசினர்.

    இதேபோல உறுப்பி னர்கள் ருக்மணி, அருள் மேரி, வேதரெத்தினம், கோமதி, தனபால் உள்பட கவுன்சிலர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    தலைவர் கமலாஅன்பழகன்:-

    ஒன்றிய பகுதிகளில் சாலைப்பணிகள் உள்பட தேவையான வளர்ச்சி பணிகள் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் கட்சிப்பா குபாடின்றி செய்யப்படும் என்றார்.

    கூட்டத்தில் மின்சாரம், நெடுஞ்சாலை, சமூக நலத்துறைகளின் அதிகாரிகளும், ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    Next Story
    ×