search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Agaitamarai"

    • நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்துள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி காழியப்பன்நல்லூர், எருக்கட்டாஞ்சேரி, பொறையார், காட்டுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மின் மோட்டார் மூலம் நிலத்தடி நீரை பயன்படுத்தி சம்பா நெல் சாகுபடி பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

    இந்த நிலையில் இப்பகுதியில் வடிகால் மற்றும் பாசனவாய்க்காலுக்கு தண்ணீர் வரும் மகிமலை ஆற்றில் ஆகாய தாமரை செடிகள் படர்ந்து இருப்பதால் மேட்டூரில் இருந்து திறந்து விடப்பட்டும் தண்ணீர் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மதகுகளில் ஆகாயத்தாமரை செடி கொடிகள் படர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் செல்வதில் தேக்க நிலை ஏற்படுகிறது .

    எனவே பருவ மழை பெய்து வருவதால் வெள்ளம் ஏற்படும் முன்பே தேங்கியுள்ள ஆகாயத்தாமரை, செடி கொடிகளை அகற்றி சம்பா பயிர்களை காப்பாற்ற பொதுப்பணித்துறையினர் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் வேகமாக பரவி வருகின்றன.
    • ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் அழிக்க முடியவில்லை.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்காவில் சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சம்பா நடவு பணிகளை துவங்கியுள்ள நிலையில் சாலியமங்களம் பகுதியில் சம்பா சாகுபடி வயல்கள் மற்றும் நடவு வயல்களில் ஆகாய தாமரை செடிகள் அதிகளவில் காணப்படுகிறது.

    பாசன வாய்க்கால் மூலம் தண்ணீரில் மிதந்து வந்து வயல்களில் ஊடுறுவி தற்போது வயல்கள் முழுவ தும் வேகமாக பரவிவரும் இந்த பிரச்சனையால் சம்பா சாகுபடி விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    வயல்களில் ஓரீரு இடத்தில் காணப்பட்ட ஆகாய தாமரை செடிகள் தற்போது வேகமாக வயல் முழுவதும் பரவி வருவதால் விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கின்றனர்.

    விவசாய வயல்களில் வேகமாக படர்ந்து வரும் இந்த ஆகாய தாமரை செடிகளை ஒழிக்க விவசாயிகள் பல்வேறு யுத்திகளை கையாண்டும், களை கொல்லி மருந்துகளை தெளித்தும், கட்டுபடுத்த முடியவில்லை அதனால் விவசாயிகள் சம்பா பயிர்களை காப்பாற்ற கடுமையாக போராடி வருகின்றனர்.

    நடவு வயல்களில் வேகமாக பரவி வரும் ஆகாய தாமரை செடிகளை அழிக்கவும், சம்பா பயிர்களை காப்பாற்றவும், அரசு வேளாண் அலுவலர்களை கொண்ட குழுவை உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வயல்களில் பரவிவரும் ஆகாயதாமரை செடிகளை கட்டுப்படுத்த விவசாயி களுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க வேண்டுமென எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது, ஆகாயதாமரை செடிகள் பாசன வாய்க்கால் மூலம் வயல்களில் ஊடுருவி தற்போது வயல்களில் அதி வேகமாக பரவி வருகிறது ஆகாயதாமரை செடிகளை அழிக்க பல்வேறு களைகொல்லி மருந்துகளை தெளித்தும் ஆகாய தாமரை செடிகளை அழிக்க முடியல மாறாக நடவுபயிர்கள் வளர்ச்சி தான் பாதிக்கிறது இதற்கு வேளாண்மை துறை அதிகாரிகள் தான் பதில் சொல்ல வேண்டும் என்றனர்.

    • உப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது.
    • வயல்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

    திருவாரூர்

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை சுற்றி உள்ள கிராமங்களில் காணப்படும் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவது கோரையாறு ஆகும்.

    இந்த ஆற்றை நம்பி தில்லைவிளாகம், உதயமார்த்தாண்டபுரம், இடும்பாவனம், ஆலங்காடு, உப்பூர், ஜாம்பவானோைட, எடையூர், தோலி போன்ற பல கிராமங்கள் உள்ளன.

    இந்த நிலையில் உப்பூர் பகுதியில் உள்ள கோரையாற்றில் ஆகாய தாமரை செடிகள் மண்டி கிடக்கிறது.

    ஆற்றில் உள்ள தண்ணீர் தெரியாத படி ஆகாயதாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன.

    இதனால் ஆற்றில் இருந்து வயல்களில் தண்ணீர் செல்ல முடியாமல் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

    மழை காலங்களில் வயல்களில் உள்ள மழைநீர் வடிய வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

    மேலும் ஆகாய தாமரை செடிகளால் மழை காலங்களில் தண்ணீர் செல்ல முடியாமல் கிராமங்களுக்குள் புகுந்து விடுகிறது.

    ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளதால் கோரையாற்றில் பொதுமக்கள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோரையாற்றில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.
    • பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கமலா அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

    துணைத்தலைவர் அறிவழகன், ஒன்றிய ஆணையர்கள் ராஜூ, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அலுவலர் ரமேஷ் தீர்மானங்களை படித்தார்.

    பின்னர் தீர்மானங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசியாதவது:-

    செம்போடை ஊராட்சி பகுதியில் 24 மணி நேரமும் சாராய விற்பனை நடைபெறுகிறது.

    எனவே, சாராய விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும்.

    மருதூர் வடக்கு ஊராட்சி பகுதியில் உள்ள பைப்புகளில் தண்ணீர் வருவதில்லை, தெரு விளக்குகள் எரியவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தாணிக்கோட்டகம் ஊராட்சி பகுதியில் உள்ள தெரு விளக்குகளில் பல ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வில்லை.

    மேலும், பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை சீரமைக்க வேண்டும்.

    முள்ளியாறு, மானங்கொண்டான் வடிகால் ஆறுகளின் கரைகளை பலப்படுத்தி மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்ய வேண்டும்.

    மேலும், ஆறுகளில் மண்டிக்கிடக்கும் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும்.

    கோடியக்காடு எல்லை பகுதியான பழமையான சுமைதாங்கி பகுதியில் பொதுமக்கள் நலன் கருதி பஸ் நிலையம் அமைத்துத்தர வேண்டும் என உறுப்பினர்கள் பேசினர்.

    இதேபோல உறுப்பி னர்கள் ருக்மணி, அருள் மேரி, வேதரெத்தினம், கோமதி, தனபால் உள்பட கவுன்சிலர்கள் தங்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசினர்.

    தலைவர் கமலாஅன்பழகன்:-

    ஒன்றிய பகுதிகளில் சாலைப்பணிகள் உள்பட தேவையான வளர்ச்சி பணிகள் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் கட்சிப்பா குபாடின்றி செய்யப்படும் என்றார்.

    கூட்டத்தில் மின்சாரம், நெடுஞ்சாலை, சமூக நலத்துறைகளின் அதிகாரிகளும், ஒன்றிய அலுவலர்களும் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய துணை ஆணையர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

    • 80 சதவீத ஆற்றுநீர் பாசனத்தை நம்பி சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தை பொறுத்த அளவு 80 சதவீதம் ஆற்று நீர் பாசனத்தை நம்பியும் 20 சதவீதம் ஆழ்துளை கிணறுகளை நம்பியும் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பதன் காரணமாக குறுவை சாகுபடிக்கு முன்கூட்டியே தண்ணீர் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதால் கோடை காலத்தை பயன்படுத்தி மாவட்டத்தில் உள்ள ஆறுகள் மற்றும் சிறு குறு வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    குறிப்பாக திருவாரூர் நகரின் வழியாக செல்லும் சுக்கானாறு, கேக்கரை பீ சேனல் வாய்க்கால் ஆகியவை மூலம் அருகில் உள்ள கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    சுக்கானாறு முழுவதும் ஆகாய தாமரை மண்டி கிடைக்கிறது இதனால் தண்ணீர் செல்லாத சூழல் உருவாகி உள்ளது.

    ஆகையால் ஆகாயத்தாமரை முழுமையாக அகற்றி தர வேண்டும். அதேபோன்று கேக்கரை பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீரை வாய்க்காலில் கலந்து விடுவதால்

    பி சேனல் வாய்க்கால் முழுவதுமாக கழிவுநீர் தேங்கி இருக்கிறது. மேலும் காடுகள் மண்டி பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

    உடனடியாக பிசேனல் வாய்க்காலை முழுமையாக தூர்வாரி தர வேண்டும்.

    அதுபோல் கிராமப்புறங்களில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் ஆகியவற்றை முழுமையாக தூர்வார வேண்டும்.

    தமிழக அரசு தூர்வாருவதற்கு நிதி ஒதுக்கீடு அதிக அளவில் செய்ய வேண்டும்.

    மேலும் தூர்வாரும் பணிக்கு என விவசாயிகள் மற்றும் அரசு அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டு அதன் அடிப்படையில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×